எச்சம் விழுந்த இடம்


வயிறு நிரம்பிய பசியில்
சோர் நடையில்
கண்களை உறுத்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டுச் சில்லறைகள்

குரைத்து மிரட்டும்
நான்காவது வீட்டு நாய்
தண்ணி லாரியில்
சிதைந்த சேதி
சேர்த்த சிற்றமைதி

காமம் தோய்ந்த
வெக்கை இரவினில்
விருப்பமற்றவளை
மனதிற் கொண்ட பொழுது

எங்கிருக்கும்....
கடைசிப் போதி மரத்தின்
பழம் உண்ட
பச்சைக்கிளியின்
எச்சம் விழுந்த இடம்!


-


4 comments:

Prapavi said...

எங்கிருக்கும்....
கடைசிப் போதி மரத்தின்
பழம் உண்ட
பச்சைக்கிளியின்
எச்சம் விழுந்த இடம்!\\ அருமை! துன்பம் கடந்த ஒவ்வொரு மனத்திலும் இருக்கும்! :-)

Unknown said...

எச்சம் விழுந்த இடம் மீண்டும் போதிமரம் துளிர்க்க வழியாகும்...மீண்டும் புத்தனின் ஜனனம் ... மீண்டும் பயணம் !

'பரிவை' சே.குமார் said...

எச்சம் விழுந்த இடம் - கலக்கலான கவிதை.
வாழ்த்துக்கள் அண்ணா...

Umesh Srinivasan said...

கவிதை சொல்லவரும் கருத்து என் மூளைக்கு எட்டவில்லை ஐயா.