முதற் சந்திப்பு

சுவாரசியமற்றதாய் நினைத்த
இந்தச் சந்திப்பிற்கு
முதற் சந்திப்பென்றே
பெயரிடலாம்

வெடவெடத்த வார்த்தைகளை
வெட்கம் பூத்த மனதறியும்

இருவருமே விரும்பிடினும்
ஏனோ உடைக்கவில்லை
பாராட்டுச் சொற் கீறலில்
நொறுங்கும் பனிச்சுவற்றை

விரல்களின் உரசல்களில்
மழைச் சாரலும்
கண்களின் ஸ்பரிசத்தில்
வானவில்லுமென
நிமிடங்களுக்கான சந்திப்பு
மணிகளை தின்றிருக்க
முதல் வார்த்தை
நினைவில்லை
முடிவு வார்த்தை
திட்டத்திலில்லை

விலகுகையில் தோன்றுகிறது
எல்லாம் பேசிவிட்டோம்
ஆனாலும்
எதுவுமே பேசவில்லை

*

3 comments:

Prapavi said...

Nice

Unknown said...

முதல் சந்திப்பிற்கு முந்தைய சந்தப்பில் இருந்தே தொடர்கிறது .. எதுவுமே பேசவில்லை ... என்பதாகவே ...!

Unknown said...

nice