சாமி
பார்க்க
லேட்டாகும்
என
”சிறப்பு
தரிசனம்”
எனும்
பெயரில்
கௌரவமாக
காசு
பிடுங்குவதற்குப்
பெயரும்
லஞ்சம்
தான்!
*
எங்கிருந்தோ
எம்மீது
சொட்டும்
இருசொட்டுப்
பனித்துளிகள்
பிரியத்துக்குரிய
விழிகள்
நனைத்ததாக
இருக்கட்டுமே!
*
கடந்து
போகும்
கணத்தின்
மீது
உமிழ்ந்தேன்,
அது
என்
முகத்தில்
தெறித்தது.
முத்தமிட்டேன்
அது
என்
இதழ்களில்
பதிந்தது.
*
இந்த
”அவதானிப்பு”ங்கிற
வார்த்தையில
இருக்கிற
”அவ(ள்)”
யாருங்கிறத
இதுவரைக்கும்
ஒருத்தராச்சும்
கண்டுபிடிச்சீங்ளா?
*
எல்லாச்
சூழல்களிலும்
அணியவியலாத,
நம்
குழந்தைகளைக்கூட
எட்ட
நிறுத்தி
அணுகவைக்கும்
ஆடைகளுக்குத்தான்
பெரும்பாலும்
அதிக
விலை
தருகிறோம்
*
’சீட்’
நிரம்பாத
என்ஜினியரிங்
காலேஜ்,
’வீட்டுமனை’
விற்பனையாகாத
ரியல்
எஸ்டேட்
கம்பெனி
இடையே
லோக்கல்
டிவி
விளம்பரங்களில்
கடும்
போட்டி!
*
போற்றும்
மதத்தைவிட
நம்பும்
கடவுளை
விட
மெச்சும்
தலைமையைவிட...
வெயிலும்,
மழையும்
மனிதனுக்கு
எளிதாகப்
பாடம்
கற்பித்து
விடுகிறது!
*
காமம்
ஒரு
செய்யுள்
போலே
சிலர் புரிந்து ரசிக்கிறார்கள்
சிலர் மனப்பாடம் செய்கிறார்கள்!
சிலர் புரிந்து ரசிக்கிறார்கள்
சிலர் மனப்பாடம் செய்கிறார்கள்!
*
லெமன்
ஜூஸை
ஸ்பூன்ல
அள்ளிக்
குடிக்குது
ஒரு
பாப்பா.
ஏன்னு
கேட்டா,
அப்போதான்
மெதுவா
தீருமாம்!
:)
*
அழுக்கு
என்பது
எல்லா
இடங்களிலும்
குறையான
ஒன்றல்ல,
சுத்தத்தின்
விளைவாகவும்
பாவிக்கப்பட
வேண்டிய
ஒன்று!
*
எங்க
ஊருக்கு
மேலே
தப்பித்தவறி
வர்ற
மேகத்தையும்,
அக்கம்
பக்கத்துல
இருக்கிற
யாரோ
கொள்ளையடிச்சிடுறாங்கனு
நினைக்கிறேன்.
*
புதிதாய்ச்
சொல்ல
வேறொன்றும்
இல்லை
வார்த்தைதான்
ஆயுதம்
வார்த்தைதான்
மருந்து!
ஒன்றும்
சிரமமில்லை
சற்றே
கை
உயர்த்துங்கள்
பக்கத்தில்
வரும்
மேகத்தை
பற்றியிழுத்து
பரிசளித்து
விடலாம்.
*
மரத்தை
வெட்டி
வேர்கள்
வரைத்
தோண்டிய
வெறுமை
நிரம்பிய
இடத்தைப்
பார்க்கையில்
இடுகாடு
ஒன்று
மனதில்
நிரம்பத்
தொடங்குகிறது!
*
கோழிகளுக்கு
’லாபநட்ட’
கணக்கு
தெரிவதில்லை,
அதனாலோ
என்னவோ
அவை
ஒருபோதும்
அழுகிய
முட்டைகளை
இடுவதில்லை.
*
மௌனம்
சேகரித்தல்
இனிது
சேகரித்ததை சிதறடித்தல் அதனினும்...
சேகரித்ததை சிதறடித்தல் அதனினும்...
*
எல்லோரும்
நன்றாக
அறிவார்கள்,
அவர்கள்
பார்க்க
/ வாசிக்க
/ எழுத
விரும்பாத
சில
பக்கங்களும்
அவர்களின்
வாழ்க்கைப்
புத்தகத்தில்
உண்டென!
*
ஒற்றைச்
சொட்டில்
நிரம்புதலும்
பெருமழையில்
காய்தலும்
காதலின் விதி.
காதலின் விதி.
*
சில
மௌனங்கள்
மிகவும்
வலிமையானது....
அதைக்
கேடயமாகப்
பிரயோகிக்கிறவனுக்குதான்
அதன்
முழு
வலிமை
தெரியும்!
*
காமராஜர்
குறித்து
எது
படித்தாலும்
ஒரு
கணம்
மனசு
குளிர்கிறது,
கனக்கிறது,
நெகிழ்கிறது,
தளும்புகிறது.
உச்சமாய்
கண்களில்
கூடுதல்
ஈரம்
படிகிறது
*
சார்ஜரை
போன்ல
கனெக்ட்
பண்ணினா
மட்டும்
சார்ஜ்
ஆகாது.
சார்ஜரை
ப்ளக்ல
போட்டிருக்கனும்,
அப்புறம்
ஸ்விட்ச்
போட்டிருக்கனும்
#மிடில_கண்டுபிடிப்பு
*
”வளர்த்த
கெடா
மார்ல
பாயுது”னு
சொல்ற
ஆடு
மேய்ப்பர்களிடம்
கேட்க
விரும்பும்
கேள்வி
“வெட்டுறதுக்குத்தானே
நீங்களும்
நீவிநீவி
வளர்த்துறீங்க”
*
கவலைகளற்ற
ஒரு
மனிதனைச்
சந்தித்து
விடமுடியவில்லை
என்பதும்
நம்
கவலைகளில்
ஒன்றாய்
இருக்கின்றது
# ஆமாம்..சிலது
தேவையில்லாத
ஆணிதான்
:)
*
நீங்கள்
நாத்திகராகவே
இருந்தாக்கூட
IRCTCயில்
தட்கால்
போடும்போது
உங்களையுமறியாமல்
’கடவுளே
டிக்கெட்
கிடைச்சுடனும்’னு
நினைச்சுடுவீங்க!
*
ஒன்றை
”அவரவர்
போக்கில்,
அவரவர்
புரிந்துகொள்ள”
அனுமதிப்பதைத்தான்
ஆகக்கடும்
தோல்வியாக
மனம்
நினைக்கிறது!
*
முதல்
”ஐ
லவ்
யூ”
சொன்ன
சூழலை
நினைவு
வைத்துக்கொண்டிருக்கலாம்,
ஆனால்
கடைசி
“ஐ
லவ்
யூ”
சொல்லப்போகும்
சூழல்
தெரியாததுதான்
காதலின்
விந்தை!
*
குருவாக
தங்களைக்
கற்பனை
செய்துகொள்பவர்களுக்கான
முதல்ச்
சிக்கல்,
அவரின்
சிஷ்யர்கள்
எனப்படுபவர்கள்
’சிஷ்யன்’
என
ஒருபோதும்
உணராததுதான்!
*
நிகழ்வுகளை
இன்னும்
சற்றே
பொறுமையாக
எதிர்கொள்ள
வேண்டியதுதான்
அவசரத்
தேவையாக
இருக்கின்றது.
*
பகிர்கையில்
அன்பு
பனித்துளியளவுதான்…
உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!
உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!
*
குழந்தைகளின்
முத்தத்திற்கு
விலை
நிர்ணயிக்க,
இன்னும்
காசு
அச்சடிக்கப்படவில்லை!
*
அணைகட்ட,
வாய்க்கால்
வெட்ட
துப்புக்கெட்ட
அரசு,
எவரோ
வெட்டிய
வாய்க்காலுக்கு
கான்கிரீட்
சமாதி
அமைக்கிறது.
விவசாயிகளை
வேரறுக்க
இது
போதுமே
:(
*
நீங்கள்
புன்னகையைச்
சிதறவிடுங்கள்
தேவையுணர்ந்தோர்
ஏந்திக்கொள்வர்
:)
*
பல
இடங்களில்
இசை
பாடல்
வரிகளையும்,
சில
இடங்களில்
பாட்ல்
வரிகள்
இசையையும்
கருணையின்றி
கொலை
செய்துவிடுகின்றன!
*
நாம்
மீறுகையில்
தவிர்க்க
முடியாததாகவும்,
மற்றவர்கள்
மீறுகையில்
தண்டனைக்குரியதாகவும்
தெரிகின்றவைகள்தான்
விதிகள்,
சட்டங்கள்!
*
”பிளாஸ்டிக்”
தழுவாத,
உரசாத
தண்ணீரைக்
குடிக்கும்
வாய்ப்பற்ற
நிலையில்
வாழ்கிறோம்!
:(
*
2Hrs லேட்டாகும்னு
கூடச்சொல்லுங்க,
120 நிமிசம்
வெயிட்
பண்ணித்
தொலைக்கிறோம்.
ஆனா
மூனே
நிமிசத்துல
வந்துடுறேனு
முக்கா
மணி
நேரம்
படுத்தாதீங்க!
*
”தெரியாது”கள்
எனப்படுபவை....
சில சமயம் சிறைக்கம்பிகள்,
பல சமயம் சிறகுகள்!
சில சமயம் சிறைக்கம்பிகள்,
பல சமயம் சிறகுகள்!
*
காலையில்
எழுந்திருப்பற்கு
மனதில்
’அலாரம்’
அடிக்கிறதோ
இல்லையோ,
11 மணியாச்சுன்னா
டீ-க்கு
மட்டும்
’அலாரம்’
கூட
இல்லை
’சங்கே’
முழங்குகிறது.
·
எல்லாவற்றையும்
சந்தேகிப்பவன்
இறுதியாய்
ஒரு
நாள்
சந்தேகத்தையும்
சந்தேகிப்பான்!
2 comments:
அன்பின் கதிர் - கீச்சுகள் அனைத்துமே அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!//
உண்மை.
Post a Comment