வெட்க ஆறு


புழுதி கிளம்பும் பெருங்காற்றில்
உதிரும் புளியம்பழம் போல்
கொட்டுகிறது முத்தம்

தீராப் பசியோடு
இரை கொத்தும் பறவைபோல்
இதழ்கள் இதழ்களைக் கொத்த

மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்
கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று

அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்

வெட்கச் சொட்டுகளில் நனையும்
அவன் தலையை அவள் துவட்டுகையில்
அவனுள்ளும் ஒரு வெட்க ஆறு!

-

3 comments:

'பரிவை' சே.குமார் said...

வெட்க ஆறு... காவேரி போல் நிரம்பி ஓடுகிறது...

Veera D said...

அருமைான கவிதை...

-வீரா

vasu balaji said...

/புழுதி கிளம்பும் பெருங்காற்றில்
உதிரும் புளியம்பழம் போல்
கொட்டுகிறது முத்தம்/

*அவ்வளவு சத்த்தமாஆஆஆவாஆஆஆஆஆ கேக்கூஊஊது?*

/தீராப் பசியோடு
இரை கொத்தும் பறவைபோல்
இதழ்கள் இதழ்களைக் கொத்த/

அப்ப கேக்கும்

/மல்லிகைப்பந்தல் கடந்த காற்றில்
கசியும் வாசமாய்
கமழ்கிறது கலந்த மூச்சுக்காற்று/

காதுல மஜ்முவா செண்ட் நனைச்ச பஞ்ச சொருகி வச்சிருக்கும் பக்கி.

/அப்போதுதான் ஓய்ந்த மழையில்
வழியும் இலை நுனி நீராய்
அவளிடம் சொட்டுகிறது வெட்கம்/

சரியாச் சொல்லோணும்..வழியுதா சொட்டுதா

/வெட்கச் சொட்டுகளில் நனையும்
அவன் தலையை அவள் துவட்டுகையில்
அவனுள்ளும் ஒரு வெட்க ஆறு!/

அது ஒன்னுமில்லண்ணே..பொண்ணு ஒரு அர அடி ஒசரம் போல..குள்ளமா இருக்கமேன்னு வெக்கப் படுதாரு.