என்
ஒரு படம்
பிடிக்கவில்லை
என்கிறீர்கள்,
ஒரு படம்
பிடித்துள்ளது
என்கிறீர்கள்,
இரண்டிலும்
இருப்பது
நானே என்கிறேன்!
நானே என்கிறேன்!
***
கத்தியின்
கூரிய முனைகொண்டு
அழகு எனச்சொல்லி
அவசியம் எனச்சொல்லி
என்னில் மிச்சமிருந்த
குழந்தைத்தனத்தை
மெல்ல மெல்ல
உரித்தெடுத்தெடுத்து
நாகரிகம் எனப்
பெயரிடுகிறீகள்
உதிர்ந்து கிடக்கும்
குழந்தைத் தனத்திற்கு
நான் என்ன பெயரிட!
***
ஒவ்வொரு முறையும்
என்னை மௌனிக்கச்
சொல்கிறீர்கள்
நான்…
சொற்களைக் கொன்று
புதைத்துக் கொண்டிருப்பதை
ஒருபோதும்
அறிய விரும்பாமலே!
-
நன்றி : கல்கி
நன்றி : கல்கி
11 comments:
நன்று; வாழ்த்துகள்!!
ஒவ்வொரு முறையும்
என்னை மௌனிக்கச்
சொல்கிறீர்கள்
நான்…
சொற்களைக் கொன்று
புதைத்துக் கொண்டிருப்பதை
ஒருபோதும்
அறிய விரும்பாமலே!\\
அருமை! வாழ்த்துக்கள்!
அருமை.
வாழ்த்துகள் கதிர் சார்.
வாழ்த்துகள்
பூங்கொத்து!!
நான்…
சொற்களைக் கொன்று
புதைத்துக் கொண்டிருப்பதை
ஒருபோதும்
அறிய விரும்பாமலே!
ஒவ்வொரு மனதிலும் ,
நித்தமும் முளைக்கும் "விதை "
காரனத்திர்க்கோ,
அல்ல காரியத்திர்க்கோ !
கருகிப்போன இரவுகளில் !
விடியலில் விதைக்க,
மாற்று விதையோடு நானும் ?
அருமை கதிர்
அன்பின் கதிர் - கல்கி - கவிதை - பாராட்டுகள் - கவிதை இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கவிதைகள் அழகு!
நல்லாயிருக்குங்க கதிர்.
பிடிக்கவில்லை...
பிடித்துள்ளது... என்று சொல்வதும் நானே! :P
உங்களின் கவிதை வரிகள் எளிமையாய் ஆரம்பித்து, சற்று கூடுதல் கனத்தை தாங்கிய பொழுதும், அந்நியப்படாத கவிதை தளங்களால், அழகாய் மனதில் ஒட்டிக் கொள்கிறது! வாழ்த்துகள்!
Post a Comment