சுமையாய்க் கிடக்கிறது
கிழித்தெறியவியலா
எவர் கைக்கொள்வதெனறியா
ஒரு திருமண ஆல்பம்
***
பொறுக்க மனிதர்களற்ற
கோவில் வாசல்களில்
சிதறடிக்கப்படும்
தேங்காய்களிலிருந்து
தெறிக்கிறது கொஞ்சம்
இறைவனின் குருதியும்!
***
இந்த மௌனத்தை
உடைக்கப்போவது
’ஒரு சொல் உளி’தானென்பது
ஏனோ
புரியாமலே
போய்விடுகிறது
***
2 comments:
super
Wonderful!
Post a Comment