கீச்சுகள் - 31



பிரச்சனைகள் சிக்கல் மிகுந்ததாகத் தெரிவதற்குக் காரணம், அதை அணுகும் முறையில் சிக்கல் இருப்பதுதான்!





சிலர் தெளிக்கும் அன்பின் துளிகள் மிகக் கனமானவை. சுமக்கச் சுமக்க கூடுதல் சுகத்தைத் தருபவை. சுற்றத்தில் அன்பு செலுத்து எனப் பணிப்பவை.

-

நட்புக்குள், உறவுகளுக்குள் சண்டை போடவும், சண்டை முடியவும்உலக மகாகாரணங்கள் தேவையில்லை

-

சிவகுமார் & குடும்பம் நடித்த டெங்கு கொசு சினிமாவுக்கான தணிக்கை சான்றிதழ் சரியானதுதானா? ஊர்ல கொஞ்ச நாளா கொசு குறைஞ்சிருக்கு!

-

பொய் எனும் ஆபரணம் தயாரிக்கத்தான் செய்கூலி சேதாரம் தேவைப்படுகிறது 




பாதை சரியானதுதானா என்பதை எல்லா நேரமும் கைகாட்டிகள் மட்டுமே சொல்லவேண்டியதில்லை. நமக்கும் தெரிந்திருக்கவும், புரிந்திருக்கவும் வேண்டும்

-

பழத்தை சக்கையோடும் உண்ணலாம், சாறு பிழிந்தும் அருந்தலாம். மகிழ்ச்சி என்பதற்கு இதுதான் நியதியென்றில்லை!

-

காதல் திருமணங்களுக்காக அதைத் தடுக்கவேண்டும், இதைத் தடுக்கவேண்டும்னு சொல்றவங்க பேசாமல் புள்ள குட்டி பெத்துக்கிறதையே தடுத்திருந்திருக்கலாம்.

-

பூமியில் உயிரோடிருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கையே அதிகம்

-

எங்க பகுதியில போன வருடம் 75kg IR-20 அரிசி ரூ.1500 இப்போ ரூ.2400. ஆனாப் பாருங்க விவசாயிங்ககிட்ட விற்க நெல்லும் இல்லை அரிசியும் இல்லை

-

நம்பி வர்றவங்களை ஏமாத்துற சூர்யா விக்ரம் கார்த்தி etc குறுக்குக் கதாநாயகன்களைவிடராக்ஸ்டார்மாதிரியான கிறுக்குக் கதாநாயகன் எவ்வளவோ Male

-

மௌனம் வலிமை இழக்கும் கணங்களில் வார்த்தைகள் முளைக்கின்றன.

-

e-mail முகவரியை தமிழில் அடிக்க வேண்டும் என ஒருவர் மன்றாடுகிறார். அவரின் இந்த மொழிப்பற்றை எப்படி தணிப்பதுனு தெரியாம முழிக்கிறேன்

-

எல்லாச் சொற்களும் விரல் நுனியில் மட்டுமே தோன்றி சொட்டிடுவதில்லை. மனதில் சுரந்து உதடுகள், விரல் வழியே சொட்டுவதுமுண்டு.

-

வெட்கச் சிரிப்புபூக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன் எனக்குள் இன்னும் கொஞ்சம் குழந்தைத்தனம் இருக்கின்றதென்பதை!

-

இந்த அரசியல் பேச்சாளர்கள் தொண்டைகளில் கண்ணாடியை அரைத்துத் தடவியது யாராக இருக்கும். கரகரப்பில் காது கிழியுது.

-

எதிர்பாராத சூழலில் யாராவது பிடித்த ஏதாவது ஒன்றைப் பரிசளிக்கும் போது, உலகிலிருக்கும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதே அன்பு துளிர்க்கிறது!

-

அன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய் சுரப்பது!

-

வேலை நாட்களிலிருந்து விடுப்புக்குள் பொருந்திக்கொள்ளும் மனமும் உடலும், விடுமுறைகள் முடிந்து வேலைக்குள் அவ்ளோ எளிதாகப் பொருந்துவதில்லை

-

மன வெற்றிடம் நிரந்தரமல்ல... எந்த ஒரு நொடியிலும் சட்டென நிரம்பலாம். அந்த நொடி எது என்பதுதான் கண்ணாமூச்சி!

-

வருவதே தெரியாம வந்து சக்கபோடு போடும் படம்குறித்த மகிழ்ச்சியைவிட ஓவரா ஆட்டம்போட்டு வந்தவுடனே குப்புறவுழுகிற படம் குறித்த மகிழ்ச்சி பெரிது

-

திரையரங்கு வாசலில் காலை 7 மணி சிறப்புக்(!) காட்சிக்கு பனிக்குளிரில் 6 மணிக்கு கணவர்கள் நிற்கும் வீதியிலேயேதான் இன்னிக்கும்பைப்தண்ணி வரலைஎனும் பதட்டத்தோடு வாழும் மனைவிகளும் இருக்கின்றனர்.

-

Use & Throw மனோபாவத்தில், தீர்ந்துபோன நாளை தூக்கி வீசும்முன் சேமிக்கவென அதில் கொஞ்சம் நினைவுகள் இருக்கின்றதென்பதை நினைவில் கொள்வோம்!




கொசுவர்த்தி / ஆல் அவுட் / குட் நைட்... இன்னபிற எல்லாமும் மனிதர்களுக்குப் பழகியதைவிட கொசுக்களுக்கு ரொம்பவே பழகிடுச்சு #கொசு புராணம்

-

இதுதான் நான் என இன்னொரு பக்கத்தைக் காட்டிக் கொள்ளாதது சில இடங்களில் வீரம், பல இடங்களில் கோழைத்தனம்

-

தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே - கருணாநிதி # அதிமுக, மதிமுவில் திமுக இல்லை போல. கேப்டன் மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்! :)

-

ஒருவரைக் கூடுதலாய் பிடிப்பதாலேயே சில நேரங்களில் அவர்களின் செயல்களைப் புரிந்து கொள்கிறோம், பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை!

-

சமீப ஆண்டுகளில் காட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் மனிதர்களை விட, நாட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் பாகன்களே அதிகம்!

-

ம்ம்ம்..... நம்பிட்ட்ட்ட்ட்டேன்என அழுத்தமாக வரும் பதிலே சொல்கிறது நம்பவில்லை என்பதை!

-

மரணத்திற்கு நிகரான துன்பத்தை, மரணத்திற்கு முன்பே உணர்ந்திட வாழ்க்கை பல வாய்ப்புகளைத் தருகின்றது

-

காலையில் முகம் கழுவாமல் முன்னே வரும் பெண்.. அழகு...! பேரழகு...!!

-

புறக்கணிப்பைவிட பெருங்கொடுமை புறக்கணிப்பு புரியாதிருத்தல்!

*

1 comment:

கிருத்திகாதரன் said...

பலவித கீச்சுக்கள்..ஒவ்வொன்றும் ஒருவிதம்.சில மனதோடு நெருக்கமாக இருக்கின்றன.