கீச்சுகள் - 23

மனித சமூகத்தின் அடுத்த பெரும்பிணிமது
-
பைக் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில், விரைவாக செல்வதற்கான வாகனம் என்பதை மறந்து, சாகசம் செய்வதற்கும், வித்தை காட்டுவதற்கும், நேரடியாகமேலேசெல்வதற்குமானது என நினைக்கிறாங்க போல # யோவ்.... கொஞ்சம் மெதுவாத்தான் போயேன்?

-

கருப்பட்டியை புறந்தள்ளி வெள்ளை அஸ்கா சர்க்கரை தின்னும் நாகரிகத்திற்குக் கொடுத்த விலைஆரோக்கியம்

-எனக்கு என் தந்தையின் தாத்தா பெயர் தெரியாது, என் மகளுக்கு என் தாத்தாவின் பெயர் தெரியாது. #இதனால் அறியப்படும் நீதியாதெனில்அம்புட்டுதான்

-

உண்மையைக் கண்டுதான் பல நேரங்களில் பயம் கொள்கிறோம்!

-

ஒரு கோலி குண்டுக்குள் பொதிந்து கிடக்கும் அழகு புரியாதவனுக்கு, பூமிப்பந்துக்குள் பொதிந்து கிடக்கும் அழகு புரிந்துவிடவா போகிறது!

-

ஜூலை மாதம் 5 ஞாயிறு என மகிழும்போதே, 5 திங்கள் என மகிழ்ச்சியின்ஃப்யூஸ்பிடுங்கப்படுகிறது #திங்கட்கிழமை இல்லா நாட்காட்டி எங்கே கிடைக்கும்?

-

இந்த ஃபேஸ்புக்கை உருவாக்கினமார்க் சக்கர்பெர்க்கை உடனடியா பொடணிய புடிச்சு அழுத்தி தமிழ் கத்துக்கொடுத்து, இங்கேஇலக்கியம் / சாதி / கட்சிஆகியவற்றுக்காக மாய்ந்து மாய்ந்து செய்யப்படும் புரட்சிக் கருத்துகளைப் படிக்க வைத்துஇரத்த வாந்திஎடுக்க வைக்கனும்பா.

# யான் பெற்ற இன்பம்(!) பெறுக மார்க் சக்கர்பெர்க்!

-
 
டாஸ்மாக் சரக்குல என்னவோ தப்பிருக்கு. முன்ன சரக்கு போட்டுட்டு அடிச்சுக்குவாங்க, இப்ப சத்தம் மட்டும்தான் போடுறாங்க #டாஸ்மாக் சூழ் உலகு

-யாரையாவதுஎப்டியிருக்கீங்கஎனக்கேட்கநல்லாருக்கேன்எனும் பொய்(!)கூடப்பிடிக்கிறதும்.. இருக்கேன்என அலுப்பாக வரும் உண்மை பிடிப்பதில்லை

-

நண்பர் : ஏன் தாடி வெச்சிருக்கே! நான்: ஷேவ் பண்ணல! @#$%#$% # இதனால் அறியப்படும் நீதி யாதெனில்இனிமே கேட்கவே மாட்டாரு!’

-

ஒவ்வொரு இரவும் டாஸ்மாக் வாசலோரம் கிடந்து மிதக்கும்மேதகு குடிமகன்களைக் காணும்போதுநல்அரசு நாளும் செழிக்குமெனும் நம்பிக்கை மிகுகிறது.

-

இச்சமூகப் பெருங்கடலில் எவ்வளவு சிறிய துளி நான். # அடங்கு!

-

இப்ப ரயில் எல்லாம் கூட சரியான நேரத்துக்கு வந்துடுது, ஆனா இந்த IRCTC முன்பதிவு தளம் மட்டும் எப்பவுமே தாமதமாவே இயங்குது #’வல்லரசுஇந்தியா

-

மகள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் தாயாக!

-

எவ்வளவுதான் முயன்றாலும், எல்லா நேரத்திலும் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருப்பதில்லை.

-

வெளியிடங்களில் காணும் எந்தவொரு குழந்தையும், நம் நெருங்கிய உறவுக் குழந்தை ஒன்றை நினைவில் கொண்டு வந்துவிடுகிறது.

-

மலைப்பயணங்களில் மேலே ஏறி விட்டு, இறங்குகையில் எளிதாக இருக்கின்றது. வாழ்க்கைப் பயணங்களில் ஏறி விட்டு இறங்குகையில் கொடியதாக இருக்கின்றது.

-

அன்பு எனும் மிருகம் அங்கங்கே இல்லாமல் இருந்திருந்தால், இந்த மனிதக்காடு எப்போதோ அழிந்திருந்திருக்கும்!

-

உதவி செய்வதில் சிறிதென்ன பெரிதென்ன. அளிப்பவருக்கு சிறிதாக இருப்பது பெறுபவருக்கு பெரிதாக இருக்கலாம். ஆக, உதவி = உதவி.

-

நம்மை நாமாகபலநேரங்களில் நாமே ஏற்றுக்கொள்வதில்லை

-

உனக்குப் பிடித்ததை நீ செய்யும் உரிமையைவிட, எனக்குப் பிடிக்காததை என்னிடம் செய்வதைத்தடுக்கும் உரிமை எனக்குண்டு #தள்ளிநின்னு தம் அடிடா தங்கம்-

தொடர்பேயில்லாத ஒரு ஆளை திடீரெனடேய்என அழைக்கும் இரண்டெழுத்துச் சொல்லில் கோவப்படுத்திட முடியும்.

-


நம்மீது நாமே அன்பு செலுத்த இன்னும் ஒரு பொழுது #விடியல்

-

சத்தமில்லாமல் வரும் பல படங்கள் ஜெயிக்குது. ஓவர் அலம்பலோடு வரும் படங்கள் பெரும்பாலும் ஊத்திக்குது! #TamilCinema

-

அழகிய மாலைப் பொழுதில், கையில் ஆவி பறக்கும் அழகானதொரு தேநீர்க் கோப்பை. # தற்காலிக சொர்க்கம்!

-

காலையில் தட்டில் ஊற்றப்படும் குழம்பு என்னவென்று கண்டுபிடிக்க முனைவதில் துவங்குகிறது, ஒவ்வொரு ஆணின் அன்றைய தேடல்.

-

கர்நாடகம் காவிரி தண்ணிவிடலனு புலம்பும் சமூகம்/அரசியல் காவிரியை சாகடிக்கும் சாய,தோல் கழிவுகளை தினமும் சகிக்கும் மொன்னைத்தனத்தை என்ன சொல்ல?

-

நிலாவுக்கு சுற்றுலா செல்ல ரூ.700 கோடி # போடாங்ங்ங்... அங்க போயி வடை சுடுற பாட்டியைப் பார்க்கிறதுக்கு 700 கோடியா? ஆணிய்யே புடுங்கவேணாம்!

-

பொய் வழக்கு போடும் ஒரு அதிகாரியையும் விடக்கூடாது- ஸ்டாலின் # பள்ளிக்கூடத்துலஎய்தவனிருக்க அம்பை நோவானேன்னு படிக்கல போல!

-

விஜய் பிறந்தநாள் GHல் பிறக்கும் குழந்தைக்கு தங்கமோதிரம் -ரசிகர் மன்றம் #தில் இருந்தா குழந்தையின் அம்மா கட்டைவிரலுக்கு மோதிரம் போடுங்களேன் .

-

புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை. வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது.

-

ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டுட்டு இந்தியை மட்டும் ஏன் தடுத்தாங்க #ஊர்ல மார்வாடி பொண்ணுக இருக்காங்க, இங்கிலாந்து ராணி பேத்தினு ஒன்னுமேயில்ல!

-

எல்லோருக்குள்ளும் அவ்வப்போது ஒரு வெற்றிடம் உருவாகின்றது. வெற்றிடமும் எதன்மூலமோ நிரம்புகின்றது. ஆனால் வெற்றிடம், நிரம்புதல் இரண்டுமே மாயை.
-

80% டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் குடிக்கிறார்கள். # குடிங்கப்பா குடிங்க நல்லாக்குடிங்க, குடி வெளங்கீறும்!

-

கோபத்தின் எல்லைகள் வியப்பானவை. நாம் கோபப்படும் நபர், அதை சகித்துக்கொண்டு அனுமதிக்கும் தூரமே கோபத்தின் எல்லை.

-

சிக்னலில் டீசலை மிச்சம்பிடிக்க, பழைய லொடலொட நகரப்பேருந்தை அணைத்து, பச்சை விழுகையில் இயக்கும் ஓட்டுனரிடம் இருப்பதன் பெயர்தான் தன்னம்பிக்கை

-

படம் எடுக்கும் நாகம் அழகாயிருக்கிறது என்பதற்காக அதன் விஷமும் இனிக்குமென்று நினைத்தால், பாம்பு முட்டாளோ, குற்றவாளியோ அல்ல.

-

சிறகுகள்…. பறவைகளுக்கு வெளியேநமக்கு மனசுக்குள்.

-

உறவுகளற்றவன் மட்டும் அனாதையல்ல. சிக்கல்களில் உழலும்போது மனதைப் பகிர்ந்துகொள்ள மனிதர்களற்றவர்களும் அனாதைதான்

-

அன்பு மொழிக்கு இலக்கணம் தேவையில்லை!

-

பிடித்தவர்களின் படங்களை எப்போது பார்த்தாலும், அதில் ஒரு கவிதை வாசம் வீசுகிறது!

-

அவசரத் தேவைஅமைதி

-

கள்ளக்காதல்என்ற அடைமொழியோடு எழுதத் துவங்கும் ஊடகவியாளர்களின் பேனாவில் மையோடு விரசமும் கலந்து விடுகிறது.

-

தூவும் மழையில் மண் மட்டுமா நனைகிறது, மனதும்தான்.

-

மனிதர்களின் அரசியல் பற்று என்பது மூடநம்பிக்கையாகவும், அதீத பக்தியாகவும் உருமாறியிருக்கின்றது.

-

பிரியமும் உரிமையும் இருக்குமிடத்தில்தான் பிணக்கு மிகுகிறது

-

அடுத்ததா தமிழர்களிடையே சாதிக்கலவரம் வந்தால், அது ஃபேஸ்புக்லதான் வரும்னு நினைக்கிறேன்!

-

குழந்தைப் பருவத்தில் வந்த குழந்தைத்தனம்தான் எப்போதும் நம்மிடம். ஆனாலும் முதிர்ந்தவர்களைப்போல் சதா நடித்துக் கொண்டேயிருக்கின்றோம்.

-

அவசரத்திற்கு எழுதப் பேனா கேட்கும்போது மூடியை கழட்டிக்கொண்டு தருபவர்களிடம், எப்படியாவது பேனாவை அடித்துவிடவேண்டும் என்றே தோன்றுகிறது

-சம்பாதிப்பதும், சம்பாதித்ததை வங்கியில் செலுத்துவதும் அவ்வளவு எளிதல்ல. தானியங்கியில் பணம் எடுப்பதும், அதைச்செலவிடுவதும் அவ்வளவு கடினமல்ல.

-

நேரத்தைச் சேமிக்க வந்ததாக நினைக்கும், கைபேசியும் இணையமும்தான் அதிக நேரத்தைத் தின்கின்றன.

-

குறைவான விலை என்பதால் குடிபோதையில் வண்டியோட்டி தண்டம் அழுகிறார்களென்றே, பெட்ரோல், பீர் விலை ஏத்தி மக்களை காக்க(!) நினைக்குது அரசு!

-

காரியங்கள் சொதப்பித் தொலையும் போதுதான் புரிகிறது, அதிலிருந்த கவனமின்மை எனும் கயமைத்தனம்!

-

நம்மை நாமே கண்டிராத கோண()த்தில் படம் எடுப்பதில் வல்லரசாக விளங்குகிறது வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமங்களுக்கு படம் பிடிக்கும் அரசாங்கம்

-

முன்னிரவு நேரம் கொண்டு வரும் ஏகாந்தம் சுகமானது.

-

தலைக்குமேலே வானத்தில் விமானம் செல்லும் சத்தம் கேட்கையில், அண்ணாந்து பார்க்காதவர்கள் யாரும் இருக்காங்களா?

-

விளம்பரம் ஏதுமின்றி விற்பனையில் வெற்றிபெற்ற நிறுவனம் "டாஸ்மாக்

-

பிரதமர் பதவி என்பதையும்மிக்சர் திங்கிறபதவியாக மாத்தின பெருமை நம் மன்மோகன் சிங்கையே சாரும்! :(

-
ஒருசுதந்திரம்என்பது மட்டுமே உன்னை எல்லாத் தவறுகளுக்கும் அனுமதிக்கிறதெனில், அது சுதந்திரம் அல்ல, அதுவும் ஒருவித விலங்கு தான்!

-

நான் பெத்தேன், என் இஷ்டப்படி பிள்ளைகள் இருக்கனும்னு நினைக்கிற பெற்றோர், அன்னிக்கு ராத்திரி 2ம் ஆட்டம் சினிமாவுக்கு போய்தொலைச்சிருக்கலாம்!

-

என்னருகில் கொஞ்சம் மல்லிகைகள் கிடக்கின்றன... நிறைய நினைவுகளைக் கசியவிட்டபடி...! # நினைவு வாசம்

-
நீ கடித்தாய்
நான் அடித்தேன்!
நீ மரித்தாய்
நான் துடைத்தேன்!!
# இந்தக் கொடும் கவிதைக்கு, அந்தக்கொசு கடிக்காமலே செத்துப் போயிருக்கலாம்! :)


-

மனிதனின் எல்லாக்கறைகளையும் மரணம் வெளுத்து விடுகிறது!

-

'நாளை' இன்னும் மிச்சமிருக்கிறது.

-

கொள்ளுக்கு ஆங்கிலத்தில் என்னனு தேடினா Horse Gram-னு சொல்லுது. இனி எப்ப கொள்ளு சாப்பிட்டாலும் குதிரை நியாபகம் வருமே!

-

பள்ளிக் கூடத்திலிருந்துஹோம் ஒர்க்னு ஒண்ணு குடுத்தனுப்புறாங்களே, அது புள்ளைங்க செய்யறதுக்கா, இல்லை பெத்தவங்க செய்யறதுக்கா?

-

இப்போது புதிதாக இருப்பவை, சிறிது நேரத்தில் பழையதாகி விடுகிறது, ’கோபம்உட்பட!

-

கோல் ஊன்றியவாறு ஒற்றைக்காலோடு சாலை கடப்பவனுக்காக, சில விநாடிகள் பொறுக்கமுடியாமநொய்நொய்னு ஹார்ன் அடிச்சு என்னப்பா கிழிக்கப்போறீங்க

-

ஒரு கோடி ரூவா காருக்கும், ஒன்றையணா மொபெட்டுக்கும் ஒரே விலைதான் "பெட்ரோல்" # இதுதாண்டா சம் + அதர்மம் = சமதர்மம்!

-

மன்மோகன், சிதம்பரமெல்லாம் ரொம்ப நேர்மையானவங்க - நாராயணசாமி # ஆல் அரசியல்வாதிஸ் யூஸிங் ஹமாம் சோப்ஸ்னு டெல்றீங்களா மிஸ்டர் மினிஸ்டர்!

-

அரசியல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான். :)

-

பேச வேண்டியது தேங்கிச் சேர்கிறது. பேச வேண்டாதது தீர்ந்து கரைகிறது.

-

எல்லா சிக்னல்களிலும் சட்டத்துக்குப் பயந்தவர்கள் கோட்டின் அருகிலும், மனசாட்சிக்குப் பயந்தவர்கள் கோட்டுக்கு முன்பாகவும் நிற்கின்றார்கள்.

-

கிராமங்கள் வெளுத்த வேட்டிபோலவும், நகரங்கள் புழுதியால் வண்டி துடைக்கும் துணி போலவும் இருக்கின்றன #பாதாளச் சாக்கடைய எப்ப பாஸ் முடிப்பீங்க?

-

ரூபாய் மதிப்பைச் சிதைப்பதுவல்லரசு’(!) ஆவதற்கான குறுக்கு வழி என மன்மோகன் சிங்கிடம் எவனோ சொல்லிட்டான் போல! # சா(சோ)தனைமேல் சோ(சா)தனை

-

சுர்ருனு கோபம் வருகையில், சட்டுனு கோபத்தை நிறுத்தி, ’இதுவும் கடந்துபோகும்னு புன்னகைத்து கோபத்தைக் கரைக்கிறதும் ஜாலியாதான் இருக்கு :)

-

தொண்டர்களை தலை குனிய வைக்க மாட்டேன் - கேப்டன் # ஆனால் தலையில் மட்டும் குட்டுவேன்!

-

ஆலங்குச்சி வேப்பங்குச்சியென பல் வெளக்கிட்டிருந்தவனுக்கு, பேஸ்ட் - பிரஷ் அளித்த அறிவியல், பல் மருத்துவரையும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறது

-

எதிர்காலத்தில் வேலை + ”ஓவர் டைம்செய்தால்தான் குடும்ப வண்டி ஓடும் என்பதை உணர்த்தவே, பள்ளி நேரம் + ”ஹோம் ஒர்க்என பழக்குகிறார்கள்.

-

முத்தத்திற்கு கொடுக்கும் உழைப்பிற்கான ஊதியம் முத்தங்களால் மட்டுமே தீரும்!

-

எல்லார் உடைகளுக்குள்ளும் நிர்வாணம்தான் என்பதை அறிந்தும், தெரியாத மாதிரியே நடிக்கிறதுக்குப் பேர்தான்நாகரிகம்

-

5 ஆண்டுகளில் ஃபேஸ்புக் மறைந்துவிடும் - அதிர்ச்சி ரிப்போர்ட் # போனால் போகட்டும் போடா! :))))

-

பல நேரங்களில் சக மனிதர்களைப் பிடிக்கவும், பிடிக்காமல் போகவும் ஏதோ ஒரு வார்த்தைதான் காரணமாக அமைகின்றது.

-

கல்வி வியாபாரத்திற்கானஇலவசவிளம்பரத் தூதுவர்கள், முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே!

-

ஈரோட்டில் ஒரு குளிரூட்டிய முடிவெட்டும் கடையில் ரூ.70க்கு, முடி வெட்டி, தலை கழுவி, துவட்டி விடுறாங்க. என் தலைக்கும் ரூ.70 என்பதுதான் கொடுமை

-

2 கழிப்பறைகள் சீரமைக்க ரூ.35 லட்சம் செலவு செய்த மாண்டேக்சிங் அலுவாலியாவின் திட்டக்கமிஷன்! # அங்கேயும்ஆய்தானேடா போவீங்க!


-

ஒவ்வொரு விடியலிலும் கிடைக்கும் விழிப்பை விட வேறென்ன பரிசு வேண்டும்!

-

பிரபலங்களுக்கு மட்டும் பிறந்த நாள்னா படம் போட்டு வாழ்த்துச் சொல்லுறவங்களோட, பெற்றோருக்கும் பிறந்தநாள்னு ஒண்ணு இருக்கும்தானே!? #டவுட்டு!

-

உழவுக்கும் தொழிலுக்கும் வஞ்சனை செய்வோம் - அரசு

-

கேரளாவுல பருவமழை ஆரம்பிச்சா, தமிழ்நாட்டுல சந்தோசப்படுறான். # சேட்டன்மார்! சேட்டன்மார்!! இப்பவாச்சும் ஒத்துக்குங்க நாங்க நல்லவங்கன்னு!

-

ஒருவரிடம் தம் பக்க கொள்கையை எடுத்துச்சொல்லி உணர வைப்பதைவிட, அவரைத் தாக்கி, திட்டி, அவமதித்து ஒடுக்குவதை எளிமையாகக் கருதுகின்ற உலகம் இது!

-

SSLC முதல் மூன்று இடங்களைப் பிடித்த 18 பேரில், 9 பேரின் இலக்கு மருத்துவம். #தண்ணீர், உணவைப் பாழ்படுத்தும் தேசத்தில் நோயாளிகளுக்கா பஞ்சம்?

-

மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்கள் கூட்டுத் தொகைக்காக மட்டுமே பயன்படுகிறது.

-

மதிப்பெண்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றதென்பதை குழந்தைகளுக்கு மறக்கடிக்க செய்வதை வெகு நேர்த்தியாகச் செய்து வருகிறோம்.

-

மதிப்பெண்கள் குறித்த பிள்ளைகளின் ஆதங்கத்தைக் குறை சொல்ல இயலாது. அவர்களை அப்படி வளர்த்தெடுத்திருப்பது நாம்தான்!

-

எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்பது தோல்வியாகாது!

-

வீதி முனைக் கடையில் வெங்காயம் கிலோ ரூ.32. உழவர் சந்தையில் கிலோ ரூ.20 #உறிச்சுப்பார்த்தா ஒன்னுமில்லாதது!

-


யாருக்கோ ரசிக்கத் தெரியவில்லை என்பதற்காக, நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை!

-

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி பசிக்குது. ஞாயித்துக்கிழமை காலை தாமதமா பசிக்குது. மதியம் சீக்கிரம் பசிக்குது, ராத்திரி பசிக்கிறதேயில்ல!

-

செல்போன் எனும் வஸ்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பேச்சுகளைத் தீர்க்கமுடியாம மனிதன் வயிறு, நெஞ்சு வெடித்து செத்துப்போயிருப்பானோ?

-

பெட்ரோல் விலை உயர்வுக்கு முன்பும், பெட்ரோல் விலை உயர்வுக்குப் பின்பும்அதே அளவு ட்ராபிக் ஜாம் தான்!”

-

எல்லாச் சண்டையிலும் யாரோ ஒருவர் விட்டுக் கொடுப்பதால் தான் அது நிறைவுக்கு வருகின்றது!

-

தலைவனோ, தலைவியோ தொண்டனுக்காக ஆடை கசங்குவதில்லை. தொண்டன் மட்டுமே தலைவன், தலைவிக்காக சண்டையில் சட்டை வரை கிழிக்கிறான். #தன்மானஅரசியல்!

-

கண்ணதாசன் இப்போதிருந்திருந்தா காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்பதற்குப் பதிலாகாற்று வந்ததும் கரண்ட் வந்ததானு எழுதியிருப்பார் #காற்றாலை


7 comments:

அதியா வீரக்குமார் said...

சுவையான தொகுப்பு....

விருச்சிகன் said...

வணக்கம் கதிர் சார். அருமையான விஷயங்கள்.

//இப்ப ரயில் எல்லாம் கூட சரியான நேரத்துக்கு வந்துடுது, ஆனா இந்த IRCTC முன்பதிவு தளம் மட்டும் எப்பவுமே தாமதமாவே இயங்குது #’வல்லரசு’ இந்தியா

ரூபாய் மதிப்பைச் சிதைப்பது ’வல்லரசு’(!) ஆவதற்கான குறுக்கு வழி என மன்மோகன் சிங்கிடம் எவனோ சொல்லிட்டான் போல! # சா(சோ)தனைமேல் சோ(சா)தனை//

வல்லரசு பற்றிய என்னோட பதிவு இங்கே:

http://kalakalappu.blogspot.com/2012/08/blog-post_14.html

அப்படியே இன்னொரு மேட்டர். நானும் ஈரோட்டுகாரந்தான்.

மாதேவி said...

அருமையான சுவைக் கோவை.

சிரிப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது.

"சாகசம் செய்வதற்கும், வித்தை காட்டுவதற்கும், நேரடியாக ’மேலே’ செல்வதற்குமானது" :))

Mahi_Granny said...

இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக போட்டிருக்கலாம் . தொடர்ந்து வாசிக்கும் போது பிடித்ததை குறிப்பிட்டு பாராட்ட முடியாத அளவுக்கு போய் விடுகிறது எல்லாமே பிடித்திருந்தாலும் . நல்லா யோசிக்கிறீங்க கதிர்.

தீபா நாகராணி said...

இதை தனித் தனியாக அவ்வப்பொழுது முக நூலில் வாசித்து வந்தாலும், ஒரே நேரத்தில் வாசிப்பது மிக்சர், சாப்பிடுவது போல, வித்யாசமான சுவையை தருகிறது.
நல்லா இருக்கு கதிர்! :)

Anonymous said...

எல்லா உணர்வுகளையும் கலந்து ஒரு மசாலா படம் பார்த்த மாதிரி, உங்க ஆதங்கம், வருத்தம், நகைச்சுவை, அன்பு எல்லாம் படித்தவரையும் உணர வைக்கிறது உங்கள் எழுத்து..நன்றி..

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட ஒரு உரை - ஏற்கனவே வெளி வந்தமை தானே ! தொடர்களாக வெளி இட்டிருக்கலாமே ! ஒன்று இரசித்ததை மறு மொழியாக இட இயலவில்லை. காரணம் துணுக்குகளீன் எண்ணிக்கை எல்லையைத் தாண்டுகிறது. தொடர்களாக இருப்பின் படிப்பதற்கும் இரசிப்பதற்கும் மறு மொழி இடுவதற்கும் எளிதாக இருந்திருக்கும்.

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா