வாருங்கள் வாசிக்கலாம்! - ஆனந்த(என்) விகடன் கட்டுரை

வாழ்க்கையில் கிடைத்த அற்புதமான வரங்களில் வாசிப்புப் பழக்கமும் ஒன்று. நல்ல வாசிப்பு என்பது சுவாசம் போன்றது. நல்ல வாசிப்பு ஒருவனை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கும். நமக்குள் அழுந்திக்கிடக்கும் நம்மை, நாம் அறியாமலே மீட்டு எடுக்கும் வல்லமை வாசிப்புக்கு உண்டு. 


ஈரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கொங்குமண்டல மக்களின் வாசிப்புப் பசி தீர்க்கவந்த அட்சயப் பாத்திரம் “ஈரோடு புத்தகத் திருவிழா”. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண மண்டபத்தில் பல சிரமங்களுக்கு இடையே சிறிய அளவில் துவக்கப்பட்ட இந்த விழா வருடந்தோறும் வளர்ந்து, இன்று ஈரோட்டின் அடையாளங்களில் ஒன்றாகி இருக்கிறது.

விவசாயமும், நெசவும் ஆக்கிரமித்துக்கிடந்த கொங்கு மண்ணின் மக்கள் மனதில் புத்தகத்தை விதைத்து, வாசிப்புப் பழக்கத்தை நெசவு செய்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் தலைவர் ஸ்டாலின் குணசேகரனையே சாரும்.

இதோ இந்த ஆண்டும் மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்படும் “ஈரோடு புத்தகத்திருவிழா” இந்த வருடம் ஆகஸ்ட் 3 முதல் 14 வரை ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது இந்த விழா.

விழாவின் ஹைலைட்ஸ் இதோ….
  • அனுமதி இலவசம்.
  • புத்தக அரங்குகளைத் தவிர்த்து வேறு அரங்குகளை அனுமதிக்காதது.
  • 250 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு பாராட்டிச் சான்றிதழ் வழங்குவது.
  • 10,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குபவர்களுக்கு அலமாரி இலவசம்.
  • குழந்தைகளுக்கு உண்டியல் கொடுத்து, உண்டியலில் சேரும் காசை புத்தகத் திருவிழாவில் உடைத்து அதில் இருக்கும் தொகைக்கு புத்தகம் வாங்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் உண்டு.
  • தினமும் மாலையில் அரங்கத்தில் உள்ள மேடையில் பலதரப்பட்ட ஆளுமைகளின் சிறப்பு உரை உண்டு.

ஒவ்வொரு தீக்குச்சியின் முனையில் இருக்கும் சிறு மருந்துக்குள் பொதிந்து கிடக்கும் நெருப்பின் ஆற்றலும் வலிமையும், அதைப் பயன்படுத்தாதவரை புரியாது. ஒரு புத்தகத்திற்குள் பொதிந்து கிடக்கும் அறிவையும், உணர்வையும் வாசித்தால் மட்டும்தானே புரியும். வாருங்கள் வாசிக்கலாம்.

-0-

நன்றி : ஆனந்த விகடன்

5 comments:

துளசி கோபால் said...

இனிய நல்வாழ்த்து(க்)கள்.

ஷர்புதீன் said...

எனக்கு இருக்கும் பழக்கங்களில் நானே பெருமை படும் பழக்கம், இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் வந்ததைதான்!

Thanks to parents, relations and friends

MARI The Great said...

வாழ்த்துக்கள் நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே அருமை..

ஈரோட்டின் அடையாளங்களுள் குறிப்பிடத்தக்கதாக இந்தப் புத்தத்திருவிழா விளங்குகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள்...

வாழ்த்துக்கள்...