தள்ளிப்போடாதே!


வாழ்க்கையில் மிகப் பிடித்தமான விசயம், செய்ய வேண்டிய காரியத்தை இன்னும் சற்றுத் தள்ளிப்போடுவது. தள்ளிப்போடுவதற்கான காரணம் பெரும்பாலும் அல்பத்தனமாகவே இருக்கும். அந்த அல்பத்தனமான காரணத்தில் மிக முக்கியமானது அந்த காரியத்தின் மேல் காதல் இருக்காது.

காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். அடுத்து எப்படியாவது அந்த வேலையை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலில் பின்னால் தள்ளிப்போடுவோம். இதில் மிக முக்கியமான கொடுமை அப்படித் தள்ளிப் போடப்பட்ட காரியம் மனதில் சுமையாய் குடியேறிவிடும். அந்தச் சுமை மிகப்பெரிய பாரமாக மாறி பரவலான ஒரு அழுத்தத்தை கொடுக்கும். அது படிப்படியாக செய்ய வேண்டிய மற்ற காரியங்களில் இருக்கும் ஈடுபாட்டையும் சிதைக்கத் தொடங்கும்.

இங்குதான் வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதாய் புலப்படுகிறது. ஒரு காரியத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நிலையில், வெற்றியாளன் தனக்கு பிடிக்காத வேலையை முதலில் எப்படியாவது செய்து முடித்துத் தூக்கிப் போடுகிறான், தோல்வியாளன் தனக்கு பிடிக்காத வேலையை மிக எளிதாகத் தள்ளிப்போடுகிறான்.

செய்ய விருப்பமில்லாமல் தள்ளிப்போட்ட காரியத்தை, இன்னும் கொஞ்ச காலம் வேண்டுமானால் தள்ளி போடலாமே ஒழிய, எக்காரணத்தைக் கொண்டும் முற்றிலும் தவிர்க்க முடியாது. அப்படித் தவிர்க்க முடியாமல், கடைசியாக ஒரு கட்டத்தில் பல மனப்போராட்டங்களுக்குப் பின் வேறு வழியில்லாமல் செய்து முடிக்கும் போது, பல நேரங்களில் ”அட இவ்வளவுதானா?” என்று வியக்கும் வண்ணம் அது மிக எளிமையான காரியமாகவும்கூட இருக்கும். சில நேரங்களில் தள்ளிப்போட்டதின் விளைவாக, மிக மோசமான பின்விளைவுகள் கூட ஏற்பட்டிருக்கும்.

பிரெய்ன் ட்ரெகியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. காலை எழுந்தவுடன் சில தவளைகளை சாப்பிடவேண்டிய கட்டாயம் இருந்தால், தோல்வியாளன் செய்வது தவளையை கையில் வைத்துக்கொண்டு, ”அய்யோ... சாப்பிடனுமா? எப்படிச் சாப்பிடுறது!?” என்று புலம்பிக் கொண்டிருப்பது. ஆனால் வெற்றியாளன் செய்வது தனக்கு ஒதுக்கப்பட்ட தவளைகளில் மிக அசிங்கமாக இருக்கும் தவளையை முதலில் சாப்பிட்டு விடுவது.
----------------------------------------------------------------------------------

39 comments:

Pandian R said...

அறுமை.

///////////
காலை எழுந்தவுடன் சில தவளைகளை சாப்பிடவேண்டிய கட்டாயம் இருந்தால், தோல்வியாளன் செய்வது தவளையை கையில் வைத்துக்கொண்டு, ”அய்யோ... சாப்பிடனுமா? எப்படிச் சாப்பிடுறது!?” என்று புலம்பிக் கொண்டிருப்பது. ஆனால் வெற்றியாளன் செய்வது தனக்கு ஒதுக்கப்பட்ட தவளைகளில் மிக அசிங்கமாக இருக்கும் தவளையை முதலில் சாப்பிட்டு விடுவது.
////////

ஆமாம்!

sathishsangkavi.blogspot.com said...

//வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதாய் புலப்படுகிறது. ஒரு காரியத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நிலையில், வெற்றியாளன் தனக்கு பிடிக்காத வேலையை முதலில் எப்படியாவது செய்து முடித்துத் தூக்கிப் போடுகிறான், தோல்வியாளன் தனக்கு பிடிக்காத வேலையை மிக எளிதாகத் தள்ளிப்போடுகிறான்.//

சிந்தித்து செயல்படவேண்டிய வரிகள்.........

தமயந்தி said...

காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். அடுத்து எப்படியாவது அந்த வேலையை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலில் பின்னால் தள்ளிப்போடுவோம்...க‌திர்...100% நிஜ‌ம்

அகல்விளக்கு said...

//இங்குதான் வெற்றியாளனுக்கும், தோல்வியாளனுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதாய் புலப்படுகிறது. ஒரு காரியத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நிலையில், வெற்றியாளன் தனக்கு பிடிக்காத வேலையை முதலில் எப்படியாவது செய்து முடித்துத் தூக்கிப் போடுகிறான், தோல்வியாளன் தனக்கு பிடிக்காத வேலையை மிக எளிதாகத் தள்ளிப்போடுகிறான்.//

நான் நிச்சயம் சிந்திக்க வேண்டிய வரிகள்...

vasu balaji said...

/காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். /

அப்புறம் இதை நியாயப்படுத்தவும் காரணம் தேடும் நேரத்தில் அந்தக் காரியத்தை முடித்தே இருக்கலாம்.

/அது படிப்படியாக செய்ய வேண்டிய மற்ற காரியங்களில் இருக்கும் ஈடுபாட்டையும் சிதைக்கத் தொடங்கும்./

இது ஒவ்வொருவரும் அனுபவிக்கும் அவஸ்தை. ஆனாலும் தவிர்ப்பதில்லை நாம்.

தேவையான கருத்துகள். அருமை.

ஆரூரன் விசுவநாதன் said...

super kadir

Indian said...

Very true.

It is an inspiring and motivating post.

Thanks a lot.

க.பாலாசி said...

//அந்த காரியத்தின் மேல் காதல் இருக்காது.//

ஈடுபாடு, நாட்டம், பயம், கடினம் என்ற காரணம், முக்கியமாய் சோம்பேறித்தனம்.

//எக்காரணத்தைக் கொண்டும் முற்றிலும் தவிர்க்க முடியாது.//

//சில நேரங்களில் தள்ளிப்போட்டதின் விளைவாக, மிக மோசமான பின்விளைவுகள் கூட ஏற்பட்டிருக்கும்.//

சரிதான்... எத்தனை விளைவுகள் நம் அன்றாட வாழ்விலும்....

நல்ல சுயமுன்னேற்ற இடுகை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல இடுகை.

நாடோடி இலக்கியன் said...

சிந்திக்க வைத்த பதிவு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உருப்படியான பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சிந்திக்க வேண்டிய வரிகள்...

Kumky said...

பல மனப்போராட்டங்களுக்குப் பின் வேறு வழியில்லாமல் செய்து முடிக்கும் போது, பல நேரங்களில் ”அட இவ்வளவுதானா?” என்று வியக்கும் வண்ணம் அது மிக எளிமையான காரியமாகவும்கூட இருக்கும்...


ஆம் பல நேரங்களில் இது போல்..
யோசிக்க வைத்து விட்டீர்கள் பதிவு முழுதுமே.

பூங்குன்றன்.வே said...

மிக தேவையான பதிவும்,சிந்தனையை தூண்டும் பதிவும் கூட. நன்றி.

ஈரோடு கதிர் said...

நன்றி @ fundoo

நன்றி @ Sangkavi

நன்றி @ தமயந்தி

நன்றி @ அகல்விளக்கு

நன்றி @ வானம்பாடிகள்

நன்றி @ ஆரூரன்

நன்றி @ Indian

நன்றி @ க.பாலாசி

நன்றி @ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி @ நாடோடி இலக்கியன்

நன்றி @ ஸ்ரீ

நன்றி @ T.V.Radhakrishnan

நன்றி @ கும்க்கி

நன்றி @ வால்பையன்

நன்றி @ பூங்குன்றன்.வே

கலகலப்ரியா said...

//தள்ளிப்போடாதே!//

sooooooo sorry... வேற வழியில்ல... தள்ளிப் போட்டே ஆகணும்... வீட்டுக்கு வந்துதான் படிக்கிறதுன்னாலும்... ஓட்டுப் போடுறதுன்னாலும்... =))...

Jerry Eshananda said...

அப்ப ,"முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில கேப்பே வேனான்றீங்களா.?

புலவன் புலிகேசி said...

//ஒரு காரியத்தைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நிலையில், வெற்றியாளன் தனக்கு பிடிக்காத வேலையை முதலில் எப்படியாவது செய்து முடித்துத் தூக்கிப் போடுகிறான், தோல்வியாளன் தனக்கு பிடிக்காத வேலையை மிக எளிதாகத் தள்ளிப்போடுகிறான்//

உண்மைதான்...நானும் இந்த தோல்வியாளன் ரகத்திலிருந்து விடுபட்டு கொண்டிருப்பவன் தான்..

சீமான்கனி said...

//பல நேரங்களில் ”அட இவ்வளவுதானா?” என்று வியக்கும் வண்ணம் அது மிக எளிமையான காரியமாகவும்கூட இருக்கும். சில நேரங்களில் தள்ளிப்போட்டதின் விளைவாக, மிக மோசமான பின்விளைவுகள் கூட ஏற்பட்டிருக்கும்.//
மிக சரி அண்ணே...நானும் சிலநேரங்களில் உணர்ந்ததுண்டு...அருமை நன்றி...நல்ல பகிர்வு...

Unknown said...

//..ஜெரி ஈசானந்தா.
அப்ப ,"முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில கேப்பே வேனான்றீங்களா.? ..//

என்னமா யோசிக்கறாங்கப்பா..??

நசரேயன் said...

யோசனை நல்லா இருக்குண்ணே

கலகலப்ரியா said...

//அந்தச் சுமை மிகப்பெரிய பாரமாக மாறி பரவலான ஒரு அழுத்தத்தை கொடுக்கும்//
கரீட்டு... ஒற்றைத் தலைவலின்னாலும் இந்தத் தலைவலியா முதல்ல முடிச்சிடணும் சாமீ...

(ஓ... இது கதிரோட இடுகையா... 'சரியாதான் சொல்லி இருக்கீங்க'ன்னு போட்டா போறுமே... ப்ச் போகட்டும்.. இவங்கள மாதிரியே நாமளும் இருக்கணுமா என்ன..:P)

கலகலப்ரியா said...

//fundoo December 10, 2009 9:57 AM

அறுமை.//

இப்டி அறுவைன்னு எல்லாம் சொல்லக் கூடாது தம்பி... கதிரு அவங்க ஒண்ணும் தப்பா சொல்லல கவலைப் படக்கூடாது..!

Chitra said...

//காலை எழுந்தவுடன் சில தவளைகளை சாப்பிடவேண்டிய கட்டாயம் இருந்தால், தோல்வியாளன் செய்வது தவளையை கையில் வைத்துக்கொண்டு, ”அய்யோ... சாப்பிடனுமா? எப்படிச் சாப்பிடுறது!?” என்று புலம்பிக் கொண்டிருப்பது. ஆனால் வெற்றியாளன் செய்வது தனக்கு ஒதுக்கப்பட்ட தவளைகளில் மிக அசிங்கமாக இருக்கும் தவளையை முதலில் சாப்பிட்டு விடுவது.//.................நீங்கள் படித்த விஷயங்களையும் யோசித்த விஷயங்களையும் அருமையாக பதிவில் எழுதுகிறீர்கள். நன்றி.

ரோஸ்விக் said...

அழுது அழுது பெத்தாலும் அவ தான் பெக்கணும். அவன் பெக்க முடியாது. - பழமொழி.

நாம தான் செய்யனும்னு ஒரு காரியம் இருந்தா அதை தள்ளிப்போடாம உடனே செய்யணும். நமக்கு பதிலா வேற எவரும் செய்யப்போறதில்ல.

Unknown said...

நல்ல சிந்திகக் வைக்கிற பதிவு..,

prabhu bharathi said...

very nice aticle kathir, i also read one line in a shop so many years before "If u avoid to face the cub(singa kutti) then you have to face the grown up lion later.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான இடுகை கதிர்.

தள்ளிப்போடுவது எந்த விசயத்திற்குமே நல்லதல்ல!! எதனால் 12/17??

நிகழ்காலத்தில்... said...

தள்ளிப்போடுவது என்பது எல்லா சூழ்நிலைகளும் சரியாக இருந்தும் நாம் செயல் செய்யாமல் இருப்பது என வைத்துக் கொள்ளலாம்., பெரும்பாலும் இதுதான் மனதின் இயல்பு..

முக்கோணம் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஒரு குறிப்பிட்ட வேலை பிடிக்காமல் போவதற்கு காரணம் மனதில் அதனைப் பற்றி கொண்டிருக்கும் கற்பனையான எதிர்மறை உணர்வு தான். அந்த உணர்வை release செய்து விட்டால் அந்த வேலையை எளிதாக செய்ய முடியும். அந்த நுட்பத்தைப் பற்றி நான் பின் வரும் பதிவுகளில் எழுதியுள்ளேன்.
வேலையை ஒத்திப் போடும் பழக்கம்!
வேலையை ஒத்திப் போடும் பழக்கத்தை ஒத்திப் போடுவது எப்படி?
நன்றி.

Unknown said...

பல மனப்போராட்டங்களுக்குப் பின் வேறு வழியில்லாமல் செய்து முடிக்கும் போது, பல நேரங்களில் ”அட இவ்வளவுதானா?” என்று வியக்கும் வண்ணம் அது மிக எளிமையான காரியமாகவும்கூட இருக்கும்...

Anonymous said...

நல்லா இருக்கு. நானும் சோம்பேறி தான் - மாறணும்ன்னு நினைச்சு அதையும் தள்ளி வைக்கிற அளவுக்கு :). சரி, நாளைக்கு காலையில பாத்துக்கலாம் :)

Anonymous said...

எனக்கென்றே எழுதப்பட்டது மாதிரி இருக்கு..ஆமாங்க இந்த கெட்ட பழக்கத்துக்கு நானும் அடிமை தான் சவுக்கடி எனக்கு இந்த பதிவு..கடைசி வரிகள் நச்...உண்மை

"உழவன்" "Uzhavan" said...

நல்ல இடுகை. யூத் குட்ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

மிக அருமையான வரிகள்.
நல்லா இருக்குங்க.

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பகிர்வு நண்பா

சிவாஜி said...

Nice Post!

Recently I have read this quote, I just want to share here.

"Do something every day that u don't want to do; this is the golden rule for acquiring the habit of doing your duty without pain."

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//நல்லா இருக்கு. நானும் சோம்பேறி தான் - மாறணும்ன்னு நினைச்சு அதையும் தள்ளி வைக்கிற அளவுக்கு :). சரி, நாளைக்கு காலையில பாத்துக்கலாம் :)//

கதிர் அண்ணா - இந்தப் பதிவை நாந்தான் போட்டிருந்தேன் :) அதுக்கப்புறம், அடுத்த நாள் எழுந்து கொஞ்சம் உங்க மெத்தட் பாலோ பண்ணி பாக்கலாம் ன்னு - அந்த வாரத்தோட பிடிக்காத முடிக்காத வேலைகளெல்லாம் கொஞ்சமா தீர்த்துட்டேன். எத்தனை நாளைக்கு இது மாதிரி செய்ய முடியும்ன்னு தெரியலை :)

சிம்பிளான விஷயந்தான ன்னு நிறைய பேரு நினைச்சிடலாம் - ஆனா உண்மையில இது நல்லதொரு டைம் மானேஜ்மண்ட் டிப்ஸ்!!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - தள்ளிப் போடுவதென்பது செய்ய மனமில்லாத செயல்களை சற்றே ஒத்தி வைக்க நினைப்பது - ஆனால் அதுஇ நிரந்தரமாக ஒத்தி வைக்கப் படுகிறது. இச்செயல் நாம் தெரிந்தே செய்வது ....... காரணம் நமக்கே தெரியாது - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அசிங்கமான தவளையை முதலில் உன்ணுவோம் - மற்றதெல்லாம் எளிதாக உண்ணலாம் - உண்மை - கருத்திற்கு நன்றி கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா