நூறு என்ற எண்ணிக்கை இயல்பாகவே ஒரு செல்லமான சிலிர்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. நூறாவது இடுகையாக எழுத மனதுக்கு பிடித்த பல தலைப்புகளும், வகைகளும் எண்ணத்தில் இடைவிடாமல் ஓடினாலும்... இந்த இடுகை என் மனதிற்கு பிடித்த, ஒரு நேர்மையாளர் பற்றியது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி...
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ.சகாயம் இ.ஆ.ப அவர்களை ஒரு முறை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பும், அவர் உரையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்னும் கூட அவர் பற்றிய பிரமிப்பிலிருந்து நான் வெளியில் வரவில்லை. சமீபத்தில் எனக்கு பிடித்தவர்கள் பற்றிய ஒரு இடுகையில் அவர் பெயரைக் குறிப்பிட்டதை மிகப் பெருமையாக கருதுகிறேன்.
இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பற்றி இணையத்தில் படித்த இந்த படைப்பு மனதை முறுக்கேற்றி நெகிழச் செய்தது. எனவே அதே படைப்பை என் வலைப் பக்கத்தில் என் நூறாவது இடுகையாக வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOqgCIfxP7ZV2mwnPpcfCXkpD2j5Bl6_-3YwCfyHrFtS8aUHnz_3cA6YTMR1X3a9pejgja-ilp0IuJQfxDmxdES6uW5DMT4Q_SnVW0bvqlUDuq549EkJK0V02lCbqeDSP_DJhyphenhyphenNLit3dA/s400/u.sagayam.jpg)
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!
நன்றி........ ஆனந்த விகடன்
74 comments:
வாழ்த்துகள், ஒரு வருசம் ஆயிடிச்சா?
எங்கள் ஊர் முசிறியிலிருந்து நாற்பது கிலோமீட்டரில் இப்படி ஒரு மனிதனா ?
அவசியம் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும்
உங்களது நூறாவது பதிவு நெஞ்சை நிமிர்த்திய பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துகள் கதிர். நல்ல பகிர்வு..
நூறு பதிவுகள்
அத்தனையும்
சத்தான
முத்தான
பதிவுகள்
வாழ்த்துகிறேன்
அன்புடன்.
ரேகா ராகவன்.
நூறுக்கு வாழ்த்துகள் கதிர்...
vazhthu solluravainga tamilmanam vote ayum podungappaa..:P
3/3
நூறாவது இடுகைக்கும் பதிவுலகில் முதல் ஆண்டு நிறைவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கதிர். அதுவும் 100 வது இடுகையில் ஒரு நேர்மையான அதிகாரியின் அறிமுகம் அருமை.
//ஒரு நேர்மையாளர் பற்றியது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி...//
இது என்னைப் பத்தி இல்லைதானே...
//லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து//
குட் குட்..!
//இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு.//
ஓ..! நாமக்கல் போயிருந்தப்போ கவனத்த கவர்ந்த செடிகள் எல்லாம் இவங்க புண்ணியமா...?! வாழ்க வளர்க...!
//''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'//
:D... flyin...
ஏய் புறாவே இன்று 100வது இடுகை காணும் என் சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துவிடு..போ சீக்கிரம் போ பறக்கிறார் பார் சீக்கிரம்...
அண்ணே கதிர் அண்ணே..
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். நானே 100 இடுகைப் போட்டது போல் சந்தோஷமாக உணர்கின்றேன் அண்ணே.
நாமக்கல் ஆட்சியாளர் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணே.
இவரை மாதிரி சில இருப்பதால்தான் இன்னமும் இந்தியா வாழ்ந்துகிட்டு இருக்கு.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். ஒரு அற்புதமான மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்கள் மாவட்டத்தில் நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது குத்சியா காந்தி ஆட்சியராக இருந்தார். அறிவொளி இயக்கத்தை பிரபலப்படுத்தியவர். இவருடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத்தும் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் எல்லாம் நேர்மையான ஆட்சியாளர்கள். மற்றுமொருவர் திரு. இறையன்பு. என்னைக் கவர்ந்த ஆட்சியாளர். அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பிரமித்துப் போனேன். நல்ல இலக்கியவாதி. கறை படியாத கரத்துக்கு இவர்களெல்லாம் ஒர் எடுத்துக்காட்டு.
நூத்துக்கு என் வாழ்த்துகள்.
நாமக்கல்ல அப்படி இப்படி செஞ்சாதான் மரத்த பாக்க முடியும்.
ஒரு கோடி மரக்கன்றுகளை வைக்கங்குள்ளயும் இவர வேற இடத்துக்கு மாத்தாம இருந்தா செரி.
\\ அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. \\ மரத்த வக்கறத விட கடினமான வேலை இது தான். அவருக்கு பாராட்டுகள்.
இந்த காலத்துல இப்படி ஒரு கலெக்டரா
நெகிழ்சச்õயாக உள்ளது.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
100-முத்தான
பதிவுகள்-க்கு வாழ்த்துகள் அண்ணே...வாழ்த்துகள்...
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்
பதிவு அருமை...மிளிரட்டும் நம் தேசம்...
நல்ல பகிர்வு. நெகிழ்ச்சியாக உணர்கிறேன்.
Rex
http://vaigaiexpress.blogspot.com
அரசு பணியில் இப்படி ஒரு சொக்கத் தங்கமா என வியக்கவைக்கிறது.
இவரின் தனிப்பட்ட இக்குணத்தை பாராட்டுகிறேன்.
இவரைப்போன்றவரை நண்பர்களிடையே அறிமுகப்படுத்துவது நம் கடமை
நூறாவது இடுகைக்கும், ஒரு வருட நிறைவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் கதிர் :))
ஒரு வருட நிறைவுக்கும் சதத்துக்கும் என் நல்வாழ்த்துக்கள்! கலெக்டர் சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றிய பகிர்வு அருமை.
நம்பிக்கை தரும் கட்டுரை. இது போன்ற பல கட்டுரைகளை பத்திரிக்கைகளில் மிஸ் பண்ணிவிடத்தான் செய்கிறோம். அதைப் பலரிடம் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.
மேலும் நூறாவது இடுகை என்பதோடு அல்லாமல் தரமான இடுகைகளோடு 100 இடுகை என்பது உண்மையிலேயே பாராட்டுகளுக்கு உரியது. வாழ்த்துகள்.!
Glad to read this BLOG. I am really proud that in the world of thugs or corrupt a fellow Thamil is living a wonderful life. I am feeling bad such a wonderful person's hard work is in the land of robbers and political mafia. Feeling very bad unfortunately he lives under Indian Union where the poor/native/tribal people are considered as a burden or encroachment in the land which is owned/robbed by the rich.
ஆஹா அருமை கதிர்!
என்ன சொல்ல! நூறாவது இடுகை சரியாய் முதல் வருடத்தை முடித்து இரண்டாவது வருட ஆரம்பத்தில்...
அடுத்த வருஷத்துக்குள்ள 300 வந்துடனும்... சொல்லிபுட்டேன்! ஆமாம்...
rommmmmmmmmmmmmmmpa சந்தோசம் கதிர்....
பிரபாகர்.
இப்படியும் மனிதர்கள் இருக்க தானே செய்கின்றார்கள்
ஒரு வருடம் பழசான கசியும் மௌனத்திற்கு வாழ்த்துகள்
நல்ல பதிவு, நூறுக்கு வாழ்த்துக்கள் கதிர்..
இப்படிப்பட்ட அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்களா? ஆச்சரியப்படவேண்டிய விஷயம்தான்.
//''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!//
அருமையான பகிர்வுக்கு நன்றி தோழரே
//''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' //
நல்ல பகிர்வு
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்
//ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன்.//
என் பார்வையில் மிகச்சரியான செயல். விவசாயமே குறைந்துவரும் தருவாயில் அவர்களின் குறைகளை இன்னும் அதிகரிக்காமல் அவர்கள் இடம் சென்றே குறைகளை கேட்டறிந்த இவரின் செயல் மகத்தானதுதான்.
அதுபோல அவரின் நேர்மையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லையென்றுதான் கூறவேண்டும்.
நூறாவது இடுகையில் அருமையான சிந்தனைப் பகிர்வு. தொடர்க உங்களது பணி.
நல்ல இடுகை! நன்றிகள்!
100-vadhu idugaiku vaazhthukkal..
//ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க// - padikumbodhu kankalangiduchi..
ivaru nalla irukanum nu kadavulai prarthikaren..
வாழ்த்துக்கள் , அருமையான அறிமுகம் ... அவர் ( திரு சகாயம் ) எங்கிருந்தாலும் வாழ்க, வளர்க
ஆமா மரக்கன்று நட்டது யாருடைய பண்டுல .. கோகோ கோலா கம்பெனி இப்ப தர்றானே அந்த பண்டுலயா.. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியது இருக்கட்டும்.. வழித் தேங்காவ எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த்து போல தண்ணி திருடன் கையால மரம் நட்டுறீங்களா
//தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்//
பொழைக்கத் தெரியாத வாழும் மனுஷநுக்கு ரெட் சல்யூட்.
நன்றி @@ பழமைபேசி
நன்றி @@ கவிதை(கள்)
நன்றி @@ ச.செந்தில்வேலன்
நன்றி @@ KALYANARAMAN RAGHAVAN
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ பிரியமுடன்...வசந்த்
நன்றி @@ இராகவன் நைஜிரியா
நன்றி @@ செ.சரவணக்குமார்
நன்றி @@ சே.குமார்
நன்றி @@ Anonymous
நன்றி @@ venkat
நன்றி @@ seemangani
நன்றி @@ Rex
நன்றி @@ நிகழ்காலத்தில்
நன்றி @@ ராமலக்ஷ்மி
நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி @@ T. Velmurugan
நன்றி @@ பிரபாகர்
நன்றி @@ உயிரோடை
நன்றி @@ நாகா
நன்றி @@ Robin
நன்றி @@ ஆ.ஞானசேகரன்
நன்றி @@ karisalkaran
நன்றி @@ க.பாலாசி
நன்றி @@ சந்தனமுல்லை
நன்றி @@ Sachanaa
நன்றி @@ அது ஒரு கனாக் காலம்
//Anonymous said...
ஆமா மரக்கன்று நட்டது யாருடைய பண்டுல .. கோகோ கோலா கம்பெனி இப்ப தர்றானே அந்த பண்டுலயா.. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியது இருக்கட்டும்.. வழித் தேங்காவ எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த்து போல தண்ணி திருடன் கையால மரம் நட்டுறீங்களா//
எனக்குத் தெரிந்து மரம் நடும் திட்டத்திற்காக பொதுமக்களிடமும், பொது அமைப்புகளிடமும் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. அரிமா சங்கங்கள் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொகை கொடுத்திருக்கிறார்கள்
மேலும் விபரம் தேவைப்பட்டால்
http://www.namakkal.tn.nic.in/
சென்று பாருங்கள் அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கேளுங்கள்
அதை விடுத்து...
அனானியாக அடையாளம் மறைத்து இடும் பின்னூட்டங்கள் இனி வெளியிடப்பட மாட்டாது
/வழித் தேங்காவ எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த்து போல தண்ணி திருடன் கையால மரம் நட்டுறீங்களா///
அய்யா அனானி. இருந்துட்டு போகட்டும். திருடுன தண்ணிக்கு நட்ட மரம் ஈடாவது கட்டுமா இல்லையா. வேற ஊழல் பேர்வழின்னா ஃபண்டு அவன் ஃபண்டில போயிருக்குமா இல்லையா. பாராட்ட மனசில்லைன்னா தப்பில்லை. இப்படி குதர்க்கம் பேசுறது சரியா?
நன்றி @@ காமராஜ்
ரெட் சல்யூட்க்கு கூடுதல் நன்றி
வானம்பாடிகள் said...
//அய்யா அனானி. இருந்துட்டு போகட்டும். திருடுன தண்ணிக்கு நட்ட மரம் ஈடாவது கட்டுமா இல்லையா. வேற ஊழல் பேர்வழின்னா ஃபண்டு அவன் ஃபண்டில போயிருக்குமா இல்லையா. பாராட்ட மனசில்லைன்னா தப்பில்லை. இப்படி குதர்க்கம் பேசுறது சரியா?//
சரியாச் சொன்னீங்க
உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்
பகிர்விற்கு நன்றி.
500க்கும் ஆவலுடன்..!
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் கதிர். 100 வது பதிவுக்கு ஒரு
சிறப்பு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும்....
ஆயிரமாவது பதிவும் இது போலவே சிறப்பான பதிவாக இருக்க முன்கூட்டிய வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.............
சார், உங்கள் நூறாவது பதிவு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படித்து வியந்து போனேன். எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. அருமை. அருமை. அருமை! -- கே.பி.ஜனா
எத்தனையோ பயனுள்ள இடுகைகளை எழுதி இருக்கிறீர்கள் நண்பா.. நூறுக்கு வாழ்த்துகள்.. பகிர்வுக்கும் நன்றி..
நூறாவது இடுகை ....முதலாம் ஆண்டு நிறைவு . மேலும் பல நூறாயிரம் படைக்க வாழ்த்துகள்.
நூறுக்கும், ஒரு வருட நிறைவிற்கும் வாழ்த்துகள்..
அருமையான பகிர்வு..
தரமான 100-க்கும், தங்க மனிதனை பற்றிய செய்திகளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!...
தொடரட்டும் உங்கள் எழுத்தும், அவரின் பணியும். :-)
நாறுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்! உங்கள் மனிதம் சார்ந்த முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்.
நாட்டில் இன்னும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எனபதற்கு எடுத்துக்காட்டு நமது சகாயம் ஐயா அவர்கள்.
பகிர்வுக்கு நன்றி ஐயா!
அன்பின் கதிர்
நூறவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்
நல்லதொரு மனிதரைப் பற்றி இவ்விடுகையில் எழுதியது சாலச் சிறந்தது.
நன்றி கதிர் - நல்லதொரு இடுகைக்கு
நல்வாழ்த்துகள்
கலெக்டருக்கு வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.
இவரை பாராட்டி எழுதிய உங்களுக்கு
'சபாஷ்'
100வது பதிவில் பார்ப்பதற்கு அரிதான ஒருவரைப் பற்றி படிப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 100க்கு.
முதலாம் வருட முடிவிற்கும், நூறாவது இருக்கைக்கும் வாழ்த்துக்கள்!
கலைக்டர் ரொம்ப தைரியமானவர் தான்
Very good Blog. Sahayam is really a great man. Kathir, I appreciate your efforts to bring up such good things to everybody's attention. Hats off.
நூறு என்ற எண்ணெல்லாம்... பிறருக்கு முக்கியத்துவம் இல்லாதது. தாங்கள் பதிவு படிப்பவருக்கு எப்படி பயன்படுகிறது-அவர்கள் மனதில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த அளவில் ஒரு நேர்மையான ஆட்சித்தலைவரை பதிவுலகில் அடையாளப்படுத்திடிம் இதுபோன்ற பதிவுகள் ஒவ்வொன்றும் நூறுக்கு சமம்.
//நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க.அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!//
//மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.//
//...அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு...//
----என் மனதை பாதித்த வரிகள்.
"நாமக்கல் ஆட்சித்தலைவராக ஒரு மஹாத்மா..!" என்று தலைப்பிட்டு இருக்கலாம்.
நன்றி @@ vellachamy
நன்றி @@ நாடோடி இலக்கியன்
நன்றி @@ வி.என்.தங்கமணி
நன்றி @@ KVR
நன்றி @@ செந்தழல் ரவி
நன்றி @@ ஊடகன்
நன்றி @@ K.B.JANARTHANAN
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி @@ நிலாமதி
நன்றி @@ பட்டிக்காட்டான்
நன்றி @@ ரோஸ்விக்
நன்றி @@ தமிழ் நாடன்
நன்றி @@ cheena (சீனா)
நன்றி @@ பின்னோக்கி
நன்றி @@ வால்பையன்
நன்றி @@ Vetrimagal
நன்றி @@ கிறுக்கல்கள்
நன்றி @@ U F O
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்....
ஒரு நேர்மையான அதிகாரியை பற்றிய
தகவலுக்கு நன்றி!!
நானும் விகடனில் வாசித்தப்போ சிலிர்த்தேன். இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா? அதை நூறாவது பதிவாக்கி மகிமை படுத்தியது மாண்பான செயல். பல நூறுகள் காண வாழ்த்துக்கள்.
அட இவரல்லவா ஆட்சியாளர்.
வாழ்த்துக்கள்... அவருக்கு
கைத்தட்டிக் கொள்கிறேன் 100வது பதிவுக்கு!
கைத்தட்டிக் கொண்டேயிருக்கிறேன் பெப்சிக்கு பெப்பே காட்டிய சகாயத்திற்கு!!
நல்ல பதிவு. 100ஐத் தொட்டமைக்கு வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
கதிர்ண்ணா.. நேர்மையை நீங்கள் அறிமுகம் செய்திருக்கிற விதம் அப்படி இருக்க அழைத்து செல்லுது
I AM HAPPY TO SAY MR.SHAKAYAM IAS IS OUR COLLECTOR..I AM PROUD OF STAYING IN NAMAKKAL DIST
Those who are interested to follow up this collector
http://www.orkut.com/Main#Community?cmm=96726303
Read your article first time, congratulations on your 100th one. Thanks for sharing such a wonderful personality... wishes to him. As a selfish guy, I wish he would get his next transfer to Trichy :) Probably after he is done with Namakkal as a developed District.
வாழ்த்துக்கள் கூரியே ஆகவேண்டும்.
இவரை போல் ஒவ்வொருவரும் நினைத்தாலே போதும் நம் நாட்டின் முன்னேற்றத்தை எந்த தீய சக்தியும் நம்மை தடுக்க முடியாது. இந்திய அரசாங்க ஊழியர்களுக்கு ஒரே ஒரு கேள்வி, ஊழியர்களே என்ன குறை உங்களுக்கு ஏன் நீங்கள் உங்கள் கடமையை செய்ய பணம் கேட்கிறீர்கள், தனி மனிதர் கணக்கில் இருபத்தைந்து கோடி பேருக்கு இந்தியாவில் தினசரி உணவு சரியாக கிடைபதில்லை, இப்படி இருக்கும் நம் நாட்டில் என் ஈவு இறக்கம் இன்றி பணம் வாங்கி வேலை செய்வதும், சட்டத்தை மீறுவதும் மிகவும் சாதாரணமாக செய்து கொண்டு இருக்குறீர்கள். நம் நாட்டின் மீது நமக்கு உரிமை இல்லையா, எனவே திரு.சகாயம் அவர்களை போல் வேலைக்காக வேலை செய்ய வேண்டும் பணத்துக்காக அல்ல, என்னுள் இருந்த ஒரு சில கருத்துகளை நான் இங்கே திநிதுழ்ளேன், தவறாக நெனைக்க வேண்டாம், உங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் நீங்கள் இந்த செய்தியை படிக்க வில்லை என்று நினைத்து கொள்க.
நாமும் நம் இந்தியாவும் முன்னேற வேண்டும், தீய செயல்களை ஒதுக்கி நற்செயல்களை செய்க.
http://spiritual-messages.blogspot.com
i am proud of him bcause iam from Namakkal
என் நெஞ்சம் நிறைந்தது
இனி என் நாடு காப்பாற்றப்படும்
இவர் போன்ற முன்மாதிரி மனிதர்களால்
இவண்
பரசுராமன்
நேர்மையான அதிகாரி திருமிகு சகாயம். இ.ஆ.ப போன்றோருக்கு அரசியல்வாதிகளாலும், இரவுடிகளாலும் இடமாற்றமும் இன்னலும் ஏற்படாமல் அவரால் மிகுந்த பயனடையும் பொதுமக்களே காக்கவேண்டும். அவருக்கு இன்னல் தரும் அரசியல்வியாதிகளையும் அவர்களது அல்லக்கை இரவுடிகளயும் பொதுமக்களாகிய நாம் சினம் கொண்டு மோதி மிதித்துவிட வேண்டும். அப்படி செய்யும் நிலையில் இதுபோல ஒரு நேர்மையான அதிகர்ரிகள் மேலும் வருவர்.அரசியல்வியாதிகளின் தொல்லைகளால் மட்டுமே நேர்மையான அதிகாரிகள் வருவதில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அவர்களுக்கும் அவரது குடும்ப்த்தாருக்கும் கிடைக்கும் என்றால் அவர்கள் துணிந்து மக்கள் நன்மைக்கு பாடுபடுவர்.
Congrates Mr.ஈரோடு கதிர்
Kathir
Please add yourself in to the Namakkl Collector Sahayam's Group in Orkut. I appreciate your Writings. Thanks
Really nice to know about good and committed people and holding a honorable and powerful government post.
Very nice...
thanks a lot....
good one..
தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
யாழினி கேட்கிறார்,”உங்களை போலத்தானே அப்பா?”
Post a Comment