Jun 1, 2013

கீச்சுகள் - 35


பச்சிளம் குழந்தைகள் கொடும் நோயில் வதைபடுகையில் புரிகிறது கற்பிதமான கடவுள் எத்தனை கருணையற்றவன் என்பது.


-
24 hrs கரண்ட் வெச்சுக்கிட்டு, ”எப்ப போகுமோ, எப்ப வருமோனுஒரு த்ரில் இல்லாம எப்படித்தான் சென்னை மக்கள் வாழுறாங்களோ!



-



நெடுஞ்சாலைகளில் ட்ரைவர் கண்டக்டர் ஓசியில் தின்பதற்காக நிறுத்தப்படும் உணவங்களுக்கென்றே ஸ்பெஷல் கேவலமானஅரிசி, பருப்பு எங்கோ விளையுதுபோல!



-



சுத்துதே சுத்துதே பூமி.... அதைவிட வேகமா சுத்துதே IRCTC.... இது போதுமடா போதுமடா சாமி....



-



பிள்ளைகளைசம்மர் கோச்சிங் கிளாஸ்க்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு பிற்காலத்தில் நரகத்தில்சம்மர் கோச்சிங் கிளாஸ்நடந்தாலும் நடக்கலாம்!



-



சம்மர் கோச்சிங் கிளாஸைகண்டுபிடித்தவர்கள் சூனியக்கார கிழவிகளின் நவீன வார்ப்புகள்!



-


 IRCTCயை, அணு விஞ்ஞானியைத்  திட்டினவங்களுக்கு ரயில்ல ஸ்லீப்பர்ல 1-8 (or) 65-72க்குள் பர்த் ஒதுக்கி பாடம் கத்துக்கொடுக்கிறாங்க #அவஸ்தைதானிப்பு



-



திருக்குறளைப் பின்பற்றாத, தமிழைப் படிக்க விரும்பாத நமக்கு என்ன வெங்காயத்துக்கு திருவள்ளுவர் சிலையும், தமிழன்னை சிலையும்!



-



வயசுக்கு வந்த பொண்ணுக படிக்கிற பள்ளிக்கூடத்துல கழிவறை கட்டிக்கொடுக்கிறத விட்டுட்டு அவுக திருவள்ளுவருக்கு சிலைனா இவுக தமிழன்னைக்கு சிலை



-



ஏசி குளிரில் தூங்கிய வீடுகளிலெல்லாம் EB மீட்டர் கணக்கெடுக்கும் தினமன்று சேர்த்து வைத்துக் கொதிக்கிறது!



-



இலைகளுக்குள் மறைந்து கூவும் குயிலுக்குத் தெரியாது, அதன் குரல் என் உயிரை வருடிக் கொண்டிருப்பது.



-



நாம் மற்றவர்களிடம் கோபித்துக்கொள்வதை அன்பென்றும், நம்மிடம் மற்றவர்கள் கோபித்துக் கொள்வதை வம்பென்றும் நினைக்கும் வியாதிக்குப் பெயரென்ன?



-





தவழ்ந்து நகர்ந்து கடந்து விழுந்து முயன்று எழுந்தவனிடம்தான் சொல்கிறார்கள்ஓடு”!



-



உலகத்தில் அதிகப்படியானவர்களின் நிறைவேறிடாத கனவுபிற்காலத்தில் பஸ் ட்ரைவர்ஆக முடியாமல் போனதுதான்! :)



-



சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்பவர்களாலும் சூழ்ந்தது இவ்வுலகு



-


வறுத்த கடலை பொரிக்கு நிகரான காம்பினேசன் இன்னும் கண்டுபிடிக்கப்படல.



-



பெரும்பாலான தீர்ப்புகள் மனதால் எழுதப்படுகின்றன.



-



எந்த வரலாறுகளையும் அறியாத ஒரு அவசர மலட்டுச் சமூகத்தை எதை நோக்கி வளர்த்தெடுக்கிறோமென்று தெரியவில்லை!



-



பார்த்தவுடன் எழுந்து நிற்பதைமரியாதைனு மொதமொத கண்டுபிடிச்ச விஞ்ஞானி யாரா இருப்பாங்க!



-



எவனொருவன் தன்னைஎளியவன்என உரத்துச் சொல்கிறானோ, அவன் எளியவனாக இருக்க விரும்பியிருக்கவில்லையென்று அர்த்தம்!



-



தயக்கங்களை உடைக்கத் தயங்குவதிலேயே வாழ்க்கை தயங்கித்தயங்கி நடக்கிறது!



-



சிரிக்கிறதுக்கு எதுக்கு லாஜிக். #நீ சிரிடா மாப்ள!



-



இன்றைக்கு வந்த மழைக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். அதனாலென்ன பயபுள்ளைக்கு நன்றி அவசியம் வேணும்னா நாளைக்கு வந்து வாங்கிக்கட்டுமே!



-


வேரைத் தேடவேண்டிய அவசியம் நீருக்கு இல்லை. நீரைத் தேடும் அவசியம் வேருக்கு உண்டு.



-



நதிகளுக்கும், கடல்களுக்கும் நாம் வெவ்வேறு பெயர் சூட்டியிருந்தாலும், நதிகளுக்குத் தெரியும் ஆகாயமும் கடலும் ஒவ்வொன்றுதான் என!



-



கோபத்தில் கத்தி, எழுபத்திசொச்ச வார்த்தைகளைச் செலவு செய்வதைவிடஇது சரியில்ல, நான் கோபமாயிருக்கேன்எனச் சிக்கனமாய் சொல்வது சிரமம்தான்



-



கடந்த 2 முறை ஆளும் கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிய கர்நாடகா வாக்காளர்கள், இந்த முறை எதிர்க்கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!



-



எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 'ம்ம்ம்....இப்போ எதுக்காக இதெல்லாம்' என யோசிக்கும் தன்மை வரம்.



-



சொல்லிவிடக்கூடிய பொய்களைச் சுமப்பதைவிட, சொல்ல முடியாத உண்மைகளைச் சுமப்பதும் கொடிது!



-



மணல் அள்ளப்பட்டதைக் கண்டும் காணாமலும் இருந்ததன் பலன்களையும், பாவங்களையும் இந்த வறட்சியில்தான் அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம் #வறட்சி நல்லது!



-





ஜெயித்தவனிடம் கேளுங்கள், மறவாமல் தோற்றவனிடமும் கேளுங்கள். ஜெயிப்பது எவ்வளவு கடினம் என்பதைக் கட்டாயம் சொல்வான்.



-



மச்சி பிசியானு SMS அனுப்பிச்சான் ஒரு நல்லவன்

எதோ அவசரத்துக்கு கேட்கிறான்னு. ”இல்லடா சொல்லுனு அனுப்பினேன்.

இல்ல நான் பிசியா இருக்கேன். நீ வெட்டியா இருக்கியானு பார்த்தேன்கிறான்...

நம்ம மாண்புமிகு அமைச்சர் நாசா-வை விட்டு அவனை 15 நாள் கடிக்க வைக்கலாம்னு இருக்கேன்!



-



எழுதுவதற்கு காகிதமும் பேனாவுமோ, கணினி மென்பொருளும் விசைப்பலகையுமோ போதாது. இசைவான மனதும், சூழலும் தேவையோ தேவை!



-



ஒன்பது கிரகங்களின் உச்சம் பெற்ற ஓருவனுக்கு மட்டுமே உச்சியைப் பிளக்கும் வெயிலில் ஊரில் உள்ள எல்லா சிக்னல்களிலும் சிவப்பு எரியும்.



-



பகல் பயணத்தில் ஓடும் பேருந்தில், அதிர்ந்துகொண்டே விழித்து விழித்து உறங்குவதும் ஒரு சுகமே!



-



முதுமையில் பணம் என்பதைவிட சட்டெனத் தழுவும் மரணம் முக்கியம்!

.^.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...