Showing posts with label ருசி. Show all posts
Showing posts with label ருசி. Show all posts

Oct 1, 2012

தனிமை ருசி



யாருமற்ற வீட்டின் இரவில்
ஒரு ஆளாய் எதைத் தின்பது!

நொறுக்குகளைக் கொறிக்கலாமா?
பானை நீரில் பசியாறலாமா?
குளிர்சாதனப்பெட்டியிலுறங்கும்
நுரைத்த மாவில்
தோசை ஊற்றலாமா?

ஊற்றிய தோசைக்கு 
இட்லிப்பொடி தேடலாமா?
ஊறுகாய் தொட்டுக்கலாமா?
சர்க்கரையிலே சமாளிக்கலாமா?
ருசியான சட்னி அரைக்கலாமா?

தேங்காய் துண்டுகளோடு கடலை சேர்த்து
இஞ்சி சீவிப் பூண்டு சேர்த்து
வெங்காயம் நறுக்கி மிளகாய் கிள்ளி
காரம் குறைய விதைகள் உதிர்த்து
கல் உப்பு சேர்த்துத் தண்ணீரூற்றி
அரைக்க அரைக்க மூன்றுமுறை
மூடி கழட்டிச் சோதித்து…

ஒரு துளி எடுத்து உள்நாக்கில் வைத்து
புரியாச் சுவைக்கு விழிகள் உருட்டி..
இதுதான் சட்னி ருசியா
இந்த ருசியை இதற்குமுன்
உணர்ந்திருக்கிறோமா குழம்பித்தவித்து..

ருசி குறித்த பட்டிமன்றத்தில்
பாதியில் விக்கிநின்ற சந்தேகத்திற்கு
கொஞ்சம் நீர் வார்த்து
நிமிர்ந்து நெளியும்போது

தனக்கே உலைவைத்து
தனக்கே பொங்கி
தனக்கே அரைத்து
தனக்கே குழைத்தென

தனித்து வாழ்வோர்
தினமும் தின்றுதின்று தீர்த்தாலும்
சந்தேகக் கசப்போடு
மிச்சமிருக்கத்தான் செய்கின்றது
தனிமையின் ருசி!

-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...