Showing posts with label பழமை பேசி. Show all posts
Showing posts with label பழமை பேசி. Show all posts

Oct 14, 2009

வாழ்த்துகள் - பழமை பேசி


பதிவுலகில் நுழைந்து
495 நாட்களில்
பதிந்த இனிய வலைப்பதிவர்
எழிலாய் பழமை பேச
பழமை பேசி அவர்களுக்கு
என் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.


வலையுலகம் எனும் கடலில்
ஏதோ ஒரு தைரியத்தில் நீச்சலடிக்க குதித்து
கொஞ்சம் கொஞ்சமாய் நீச்சலித்துக் கொண்டிருந்தபோது
“மாப்பு நல்லா நீஞ்சறீங்க” னு
கொங்குத் தமிழில் பாசத்தோடு
கை பிடித்து, தட்டிக் கொடுத்து,
அவ்வப்போது நீந்தும் இடம் சரிதானா என வழிகாட்டி,
உடன் நீச்சலடிக்கும் நண்பர்களை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து,
என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து
தவறு செய்யும் போது தலையில் குட்டி
தொடர்ந்து ஊக்கம் தரும் இனிய
நண்பருக்கு நன்றிகள் பல


... ... ... அறிவோம் நம் பழமை பேசி அவர்களை ... ... ...
புனை பெயர்: பழமைபேசி

இயற்பெயர்: மெளன. மணிவாசகம்

ஊர்: அந்தியூர், உடுமலைப் பேட்டை

இருப்பிடம்: சார்லட், வடக்கு கரோலைனா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்

படிப்பு: இயந்திரவியல் மற்றும் கணனி அறிவியல்

வேலை: மென்பொருள் கட்டுமான மேலாண்மை

பெருமையாக நினைப்பது: முடிந்த வரை தமிழில் பேசுவதும், எழுதுவதும்

குறையாக நினைப்பது: கடந்த காலத்தில் இருந்த, புத்தகங்கள் வாசிக்காத பழக்கம்

சாதிக்க நினைப்பது: தமிழை மேலும் கற்றுக் கொள்வது, எளிமை பேணுவது

பிடித்த‌ ப‌ழ‌மொழி: எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!

அனுப‌வ‌ம்: கிராம‌ங்க‌ளில் ஓடித் திரிந்து, வேளாண்மை செய்த‌து; கிராம‌ப்புற‌ ப‌ள்ளிக்கு தின‌மும் நான்கு மைல் தூர‌ம் விவ‌சாய‌ வ‌ழித் த‌ட‌ங்க‌ளின் ஊடாக‌ ந‌ட‌ந்து சென்று க‌ல்வி க‌ற்ற‌, அந்த‌ இனிமையான‌ நாட்க‌ள்; ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கி இருந்து படித்து, யார்க் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌ட்ட‌ம் பெற்ற‌து; த‌ற்போது அமெரிக்காவில், சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி த‌மிழ் ப‌ண்பாட்டுக் குழுவில் அங்க‌த்தின‌ராக‌ இருந்து த‌மிழ்ப் ப‌ண்பாடு பேணுவ‌தும், அடுத்த‌ த‌லை முறையின‌ருக்கு இய‌ன்ற‌ அள‌வு த‌மிழ் க‌ற்பிப்ப‌தும்.

வாழ்த்துவோம்

தொடர்ந்து வாசிப்போம்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...