ஃபேஸ்புக்கில் அப்ரசண்டியாக இருக்கும் ஒருவரை, தெரியாத்தனமாய் நம்ம ஊர்க்காரர் ஆச்சே என நண்பராக இணைத்துக் கொண்டேன். இன்றைக்கு நியாயப்படி டீ கடையில் அவரைப் பார்க்காமலே இருந்திருக்க வேண்டும். விதி வலியது. சந்தித்தாகி விட்டது. பார்த்தவுடன் பரவசம் எய்தினார்.
அவர் தனியாகவாவது வந்திருக்கலாம். அங்கும் ’விதி வலியது’. ஒரு நண்பரை உடன் அழைத்து வந்திருக்கிறார். அவரிடம் அறிமுகப்படுத்தியும் வைத்தார். நண்பரின் நண்பரிடம் பேசியதில் எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமம் அவர் எனத்தெரிந்து, ’மாப்ள முறையாகுதுங்க’ என உறவு கொண்டாடி, சுவாரசியமாக ஊர் நாயம் பேசத் துவங்குகையில்....
நம்ம அப்ரசண்டி நண்பர் என்னைச் சுட்டிக் காட்டி... ரொம்பப் பெருமையாக(!)....
“ஒன்னு தெரியும்ங்ளா...... ஃபேஸ்புக்ல இவரு பெரியாளுங்க. 5000 ப்ரெண்டுங்க இருக்குதுனா பாருங்களேன்” என்றார். அந்த நொடி அது ஒரு அணுகுண்டு என நான் நினைக்கவில்லை.
அவரின் நண்பருக்கு ஃபேஸ்புக் குறித்து அளவுக்கு மீறி தினத்தந்தி புண்ணியத்தில் தெரிந்திருக்கும்போல, ”ஃபேஸ்புக் காதலில் ஓசூரில் நடந்த கொலை, ஃபேஸ்புக்கால் நடந்த விவாகரத்து, ஃபேஸ்புக் நட்பில் சென்னையில் ஒரு பெண் கருவுற்றது, லண்டலின் ஆசிரியையின் அந்தரங்கப்படங்களை மாணவர்கள் ஃபேஸ்புக்கில் போட்டது, ஃபேஸ்புக்கை காவல்துறை கண்காணிப்பது” என மனிதர் பொளந்து கட்ட ஆரம்பித்தார்.
நான் “ஷ்ஷ்ஷப்பா” என டரியல் ஆகி நின்றேன்.
நல்லவேளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் உளவு பார்க்கும் மேட்டர் இன்னும் தினத்தந்தியில் வரவில்லை போலும்.
டீ கடை அக்கா, என் நிலைமையைப் பார்த்து, முதலில் எனக்கு டீ தர....
கொஞ்சம் தெம்பாக இரண்டு வாய் உறிஞ்சியிருப்பேன்.
பொசுக்குனு ஒரு போடு போட்டார்,
”ஏனுங் மாப்ள, ஊர்ல உங்க குடும்பம் நல்ல குடும்பமாச்சுங்ளே, அப்பறம் நீங்க யேன் இந்த ஃபேஸ்புக்ல திரிறீங்க” என்றார்
அப்போது உறிஞ்சிய டீ உச்சத்தலைக்கு ஏறி எனக்குப் புரை போனது!
அடேய்... மார்க் சாமி!
“ஃபேக் ஐடிகளைக் கூட நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்...
பில்டப் கொடுத்து உசுப்பேத்தும் நண்பர்களிடமிருந்து மட்டுமாச்சும் காப்பாத்துடா சாமி”
-
Showing posts with label பல்பு. Show all posts
Showing posts with label பல்பு. Show all posts
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
க ண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில ச...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
