Showing posts with label நிழற்படங்கள். Show all posts
Showing posts with label நிழற்படங்கள். Show all posts

Dec 21, 2011

நிழற்படம் தேக்கிய கணம்



அந்தந்தக் கணங்களை
தேக்கிவைத்த நிழற்படங்கள்
படிந்த கோப்பினை
விரல்கள் புரட்டிக்கொண்டிருக்கிறது

தீர்ந்துபோன நிகழ்காலத்தை
உள்ளடக்கம் குறித்து
கவலைகளற்று
இறுமாப்போடு தனக்குள்
கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது

செத்துப்போய் சேமிக்கப்பட்ட
அந்த நிகழ்காலம்
ஒப்பனையேதுமின்றி
அடைகாக்கப்படுகிறது அதனுள்ளே!

ஆனாலும்….
கண்களின் தேடலில்
விரல்களின் நகர்த்தலில்
ஒரு உணர்வின் மிச்சமோ
ஒரு உறவின் வாசமோ
ஒரு வரலாற்றின் வீச்சமோ
பிரசவமாகிக் கொண்டியிருக்கிறது
சிலநேரம் குறைப்பிரசவமாகவோ
கருக்கலைப்பாகவோ…

~

Feb 3, 2011

வானம்பாடியும் ஆரூரனும் பின்னே ஞானும்

நம்ம பாமரன் பக்கங்கள் வானம்பாடி பாலண்ணா போன் போட்டு ஒரு கேமரா வாங்கியிருக்கேன், உங்க படம் எதுவுமே செரியில்ல (சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்), அதனால நான் வந்து ஒரு போட்டோ எடுத்துத் தர்றேன். ஆரூரனையும் கூட வரச்சொல்லுங்கன்னு சொன்னாரு..

நானும் நல்லவரு வல்லருன்னு நம்ம்ம்ம்ம்பி கூடப் போனேன்..

ரயில்ல வந்து இறங்கியும் இறங்காம கேமரா தூக்கிட்டாருங்க!!!

அதுக்கப்புறம்....
என்ன நடந்துச்சுன்ன்ன்ன்ன்ன்னா.....!!!!






















-0-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...