Showing posts with label டெல்லி பலாத்காரம். Show all posts
Showing posts with label டெல்லி பலாத்காரம். Show all posts

Dec 19, 2012

டெல்லி - தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?


தன் வக்கிரத்திற்கு, தன் போதைக்கு போகிற வழியில் கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்த டெல்லிக் கும்பல்....... சிக்கிக்கொண்டு தெளிந்த பிறகு, தான் மனச் சிதைவு கொண்டவன் என்று சொல்வது குறித்தும், 9 மணிக்கு மேல் நண்பனோடு சென்றவளுக்கு பாடம் கற்பிக்க வன்புணர்வு செய்ததாகச் சொல்வதை மதத்தோடு முடிச்சுப்போட்டு விவாதிப்பதும் ஆரோக்கியமானதில்லை.




மனச்சிதைவு, மத உணர்வு என அவர்கள் சொல்ல முயல்வது தப்பிப்பதற்கான, ஒரு புத்திசாலித்தன மனோபாவமே தவிர... வேறல்ல.... அது குறித்து விரிவாகப் பேசி விவாதிப்பதே அவர்களின் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பானதும்.

கண்ணுக்குத் தெரியாத கற்பு அழிந்துபோனதாகச் சொல்வதை விட்டுத்தள்ளுங்கள். இந்த மாதிரியான வன்புணர்வு அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுதும் மனதிற்குள் எத்தனையெத்தனை இயலாமை வலியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஒரு பெண்ணாக அவளுக்குள் நிகழ்ந்த இயலாமைப் போராட்டம் கொடிதினும் கொடிது. புணர்ந்ததை விட, இயலாமைப் போராட்டத்தை அவள் மேல் ஏவிவிட்டதே கொடும் வக்கிரம்,

எக்காரணம் கொண்டும் எதற்கும் “மரண தண்டனை கூடாது” என்போரும் கூட இதில் அவன் ’குறி’ அறுக்க வேண்டும் எனத் தளர்ந்து முரண்பட்டபோது இனம்புரியா ஒரு மனச்சூழலுக்குள் ஆளானேன்! அந்த முரண்பட்டை விட நிகழ்வின் கடும்தாக்கம், அவர்களையறியாமல் உள்ளுக்குள் இருந்து பேசவைத்திருக்குமோ என்றும் தோன்றியது.

இது குறித்து கேள்வியுற்ற, வாசித்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நீதிபதி உணர்ச்சிப் பூர்வமான தீர்ப்பினை எழுதிக்கொண்டேதான் இருக்கின்றார்.

டெல்லி காவல்துறை தூக்குத் தண்டனைக்கு பரிந்துறை எனச் செய்திகளைப் பார்க்கும் போது, மக்கள் உணர்ச்சியை சமாளிக்க ஒருவேளை என்கவுண்டர் நிகழ்த்தப் படலாம் அல்லது வழக்கு நடந்து முடிவில் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனைகூட விதிக்கப் படலாம்….. எப்படியாக இருப்பினும் இவர்களுக்கு விதிக்கப்படுவது மிக அதிகபட்ச தண்டனையாகவே இருக்க வேண்டும். அந்தத் தண்டனை இதுபோல் செய்ய முயல்வோருக்கு மிகப் பெரிய அச்சத்தை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்து கிடையாது!

சரி... தண்டனைகளோடு திருப்தியடைந்துவிடப் போகின்றோமா?

ஆண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற கிடைத்த பெண்ணை வன்புணர்வு செய்வது, கிடைக்காத அல்லது உடன்பட மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவது போன்ற பலதரப்பட்ட வக்கிரச் சூழலுக்கு ஆட்படா  மனோபாவத்தை, அறத்தினை வளர்க்க மறந்து அல்லது மறுத்துவிட்டு....

இது போன்று நிகழ்ந்தபின் குறி அறுக்க வேண்டும் அல்லது முச்சந்தியில் நிறுத்தி கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்பதெல்லாம் நம் தற்காலிகமாக அறச்சீற்றம் அல்லது மேலதிக
உணர்ச்சிகளுக்க வேண்டுமானல் தீனிபோடலாம்.


-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...