Showing posts with label இனப்படுகொலை. Show all posts
Showing posts with label இனப்படுகொலை. Show all posts

Jun 15, 2011

இலங்கையின் படுகொலைக் களம்

இலங்கை இனப்படுகொலையின் வலிமிகு காட்சிகளை சேனல்-4  வெளியிட்டுள்ளது.












-0-

Dec 3, 2010

வாழ்ந்து தொலைப்போம்

ஒரு வருடத்திற்கு முன் கண்டு மனம் சிதைந்த காணொளியின் தொடர்ச்சிதான் இது. நீளம் மட்டும் அதிகம், அதனால் சிதறிக்கிடக்கும் பிணங்களின் எண்ணிக்கை கூடுதல். பிணங்களை ரசித்து படம் பிடிக்கும் கேமராவுக்குள் படபடவென பொரியும் துப்பாக்கிக் குண்டுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு உயிர் பறிபோயிருந்த அவலத்தை மனது சீரணிக்க மறுக்கிறது. 

கடந்த ஆண்டே வெளிவந்திருந்த இதன் ஒரு நிமிட காணொளிப் பகுதி குறித்து வவுனியாவில் சந்தித்த தமிழரிடம் கேட்டபோது, ”அப்படிக் கொல்லப்பட்டது புலிகள் அல்ல, கிளிநொச்சியில் பிடிபட்ட சாதாரண சனங்களைத்தான் அப்படி சுட்டுக் கொன்றனர்” என்று கூறினார். (அந்த உண்மை காணொளியை எடுத்த சிங்களப் படை வீரன் எதிர்காலத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் சொல்லும் போது தெரியலாம்) சாதாரண மனிதர்களையே இவ்வளவு கொடூரமாகக் கொல்லும் சிங்கள ராணுவத்தினர், சரணடைந்த புலி உறுப்பினர்களை, அதுவும் பெண் புலிகளை எப்படி சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள் என நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

லண்டன் நகரில் கால்வைத்த தினம் முதல் ஒரு கணம் கூட நிம்மதியாய் இருக்க விடாமல் தங்கள் மண்ணிலிருந்து துரத்திய லண்டன் வாழ் தமிழர்களின் உறுதியையும், தொடர்ந்து இன அழிப்பு காணொளியை ஒளிபரப்பிய சானல்-4 தொலைக்காட்சியை நினைக்கும் போது சற்றே ஆறுதலாக இருக்கிறது. அதே சமயம் இதையொட்டி ராஜபக்‌ஷேவின் வீரம்(!) மிகுந்த ராணுவம், இன்னும் முகாமில் அடைத்து வைத்திருப்பவர்கள் மேல் வக்கிரம் நிறைந்த வீரத்தை பிரயோகிப்பார்கள் என்பதை நினைக்கும் போது உயிரெல்லாம் சுண்டிப்போகிறது.

துணியை அவிழ்த்து, வக்கிரத்தின் ஓட்டத்திற்கேற்ப சித்திரவதைகள் செய்து, கைகளை பின்பக்கமாய் கட்டி, சாகப்போகிறவரின் கண்களைக் கூட சந்திக்கும் துணிவற்று, மண்டியிட வைத்து, பின் கழுத்தில் துப்பாக்கியால் மிகச் வீரமாய்(!) சுட்டு கொலைகளை ரசித்து ரசித்து செய்யும் சிங்கள வீரத்திற்கு(!) எதிராய் மனிதாபிமானத்தில், குரல் உயர்த்த பெருந்தொகையிலான இந்திய ஊடகங்களுக்கும், நாட்டையும் மக்களையும் கட்டிக்காக்க உழைக்கும் புண்ணிய அரசியல் ஆத்மாக்களும், ஏன் பொதுமக்களுக்கும் கூட நேரம் இல்லை போல. 

அதே நேரம்…..
இந்தக் காணொளியின் ஒரு பகுதி சென்ற வருடம் வெளியான காலத்திற்குப் பிறகே, இன அழிப்புக் குற்றவாளி ராஜபக்சே சுகமாய் இந்தியா வந்து கூடுதல் சுகமாய் இலங்கை திரும்பியிருக்கிறார். திருப்பதியில் கால் வைத்து திருப்தியாய் திரும்பிய உலகத்தின் வக்கிரம் நிறைந்த கொலை பாதகனை கோடானு கோடிப்பேர் கும்பிடும் கடவுளால் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை, ஆனாலும் இன்னும் அந்தக் கோவிலுக்கு கூட்டம்தான் குறைந்த பாடில்லை. 

ஆசிர்வதித்து அனுப்பிய மண்ணில், இந்திய ஏழைகளின் கண்ணீரைத் துடைத்திட்ட காமன் வெல்த் போட்டியின் நிறைவு விழாவிற்கும் கூட அழைத்து பெருமைப்பட்டுக் கொண்ட மண்ணில், எந்தக்கூச்சமும் இல்லாமல் எல்லாக் கருமத்தையும் சகித்துக் கொண்டு வழக்கம் போல், வாழ்க்கைச் சக்கரம் சிறிதும் மாற்றி இயங்கிடாமல் பார்த்துப் பார்த்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

பல நேரங்களில் உலகை வாழ்விக்க வரும் திரைப்படங்களுக்கு முதல் காட்சியை பார்ப்பதில் காட்டும் ஆர்வமும், அதற்குச் சப்பைக்கட்டு கட்டி ஓங்கி ஒலிக்கும் குரல் கூட வக்கிரமாய் கொல்லப்படும் சகமனிதன் குறித்த ஆவணங்களைக் காணும் போது தொலைந்து போய்விடும் ஒரு சமூகத்தில் பெருமை மிகு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி….. வாழ்ந்து தொலைப்போம்….. 
கூடவே தேடுவோம் மனசாட்சியையும்....

___________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...