கரண்ட கண்டுபிடிக்காத காக்கா குருவியெல்லாம் கரண்டு கம்பியில ஒய்யாரமா ஊஞ்சலாடுது...
கஷ்டப்பட்டு கரண்ட கண்டுபிடிச்ச மனுசனால ஆசைக்கு ஒருதடவ தொட்டுப்பார்க்க முடியுதா?
-000000-
ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும், கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டும் ஒரே தூரம்தான்....
அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா!!!!!!!????
-000000-
எப்பவோ கடிக்கிற சிங்கம் புலியை கூண்டில் அடைக்க தெரிஞ்சவனுக்கு தெனமும் கடிக்கிற கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே
-000000-
இமாமி பேர்ணஸ் கிரீம் தமிழ் விளம்பரத்துல ஷாருக்கானுக்கான குரல் சகிக்கல,
டப்பிங் பேசின ஆள் அந்தக் கிரீமை பூசியிருப்பாரோ
-000000-
வராத மழைக்கு,
பில்டப்புங்ற பேர்ல மண்ணை வாரி அடிக்கிற காற்றை எதால் அடிப்பது?
-000000-
ரெண்டு மீட்டிங் நடத்துனத்துக்கே அம்மாவுக்கு நாப்பது நாள் ஓய்வாம்,
அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?
அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?
-000000-
குற்றத்தை நிரூபித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்-உமாசங்கர்.(செய்தி)
நிரூபிக்கக் கூடாதா? அல்லது நிரூபிக்க முடியாதா?
நிரூபிக்கக் கூடாதா? அல்லது நிரூபிக்க முடியாதா?
-000000-
ஹீரோவோட நண்பனை வில்லன் கத்தியால குத்திட்டா, ஹீரோ கிறுக்கு தலைய தடவி வசனம் பேசுறானே தவிர, ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டுபோறதில்லையே, ஏன்?
-000000-
எந்த அட்டுப் பட டைரக்டரும், டிவி பேட்டியில இதுவரை வராத வித்தியாசமான கதைங்கிறாங்களே, மன சாட்சிய மண்ண தோண்டி பொதைச்சிடுவாங்களா?
-000000-
கோத்தபயா ராஜபக்சேவைக் கொலை செய்ய முயன்ற 3 பேர் இலங்கை போலீசால் கைது...(செய்தி)
கொல்லாம ஏண்டா விட்டீங்கன்னு கைது பண்ணியிருப்பாங்களோ!!!!
கொல்லாம ஏண்டா விட்டீங்கன்னு கைது பண்ணியிருப்பாங்களோ!!!!
-000000-
-000000-
அரட்டைகளில், "ம்ம்ம்.. அப்புறம் சொல்லுங்க / வேறென்ன" என்ற வார்த்தை வந்துட்டா, அதுக்கு மேல பேச உருப்படியா ஒன்னுமில்லதானே!!??
-000000-
யூத்துங்க யாராவது வயசானவங்க மாதிரி காட்டிக்கிறாங்களா?
வயசானவங்க மட்டும் யூத்து மாதிரி காட்டிக்கிறாங்களே... இது ஏன்!!!??
வயசானவங்க மட்டும் யூத்து மாதிரி காட்டிக்கிறாங்களே... இது ஏன்!!!??
(விகடனில் வந்த ட்விட்)
-000000-
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!
-000000-
யார் மேலே ”ஷூ”வை வீசினாலும், வீசியவர் மேல் கோபம் வரவில்லை என்கின்றனரே ...
இதை பெருந்தன்மைன்னு எடுத்துக்கிறதா?
அல்லது சூடு சொரணையே இல்லாம போச்சுன்னு எடுத்துக்கிறதா?
-000000-
தண்ணீரை பனிக்கட்டியாக உறைய வைக்கலாம், பனிக்கட்டியைத் தண்ணீராக உருக்கலாம்....
அதுக்காக.... வெண்ணையை நெய்யாக உருக்கி, நெய்யை வெண்ணையாக உருமாற்றம் செய்ய முயற்சிக்கிற அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?
அதுக்காக.... வெண்ணையை நெய்யாக உருக்கி, நெய்யை வெண்ணையாக உருமாற்றம் செய்ய முயற்சிக்கிற அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?
-000000-
பொறுப்பி:
டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது
____________________________
____________________________