கீச்சுகள் தொகுப்பு - 65



சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஒரே திறவுகோல்தான். அவசரப்பட்டு விடுகிறோம் அல்லது ஆத்திரப்பட்டு விடுகிறோம்!

-

அலாரமே தேவைப்படாத நாட்கள்னா அவை ஞாயிற்றுக் கிழமைகள் தான்... எவ்ளோ ஷார்ப்பா கண்ணு தன்னாலே முழிச்சுக்குது!

-

வெல்வதற்கு மட்டுமல்ல, தோற்காமல் இருக்கவும் வாழ்க்கையில் ஓடித்தான் ஆகவேண்டியிருக்கின்றது.

-

பிரியத்தின் அத்தியாயத்தை ஒவ்வொரு முறையும் முன்னுச்சி முத்தத்தில் துவங்குகிறாய்!

-

இரவில் கடைசியாக மொபைல் வைக்கும் முன் கடைசியா எதும் வாட்சப்ல வந்திருக்கானு பார்க்கிறவங்க, அப்போதைக்கு மொபைலை கீழே வைத்ததாக சரித்திரம் இல்ல!

-

சன்னல் வழியே உலகைப் பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல் வழியே உலகம் பார்ப்பதையறியாமலே!

-

அனுமதிக்கப்படும் அளவிற்கான தவறுகளும், குற்றங்களுமே நெளிவு சுளிவுஎன வகைப்படுத்தப் படுகிறது

-

யாரோ இடைவிடாது உங்களை உற்றுக் கவனிக்கிறார்கள் அந்த யாரோ நீங்களாகவும் இருக்கலாம்!

-

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் நுழையும்போது கவனியுங்கள், அதுவரையிலும் அலங்கரித்திருந்த அகங்காரங்கள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குவதை.


-

இந்த வாழ்க்கையை இன்னும் இலகுவாய் வாழ்ந்திட சூத்திரம்ஒன்றினைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை கனக்க ஆரம்பித்து விடுகிறது.

-

"கோடை மழை" வராத கடன் வசூல் ஆகிறதுக்குச் சமம்!

-

வீழ்ச்சியிலும் பேரழகாய் இருக்கிறது "அருவி"

-



ஒவ்வொரு விடியலில் பூத்திருக்கும் பூ நீ இன்று இரண்டு சொட்டு மழைத்துளியோடு கூடுதல் பிரியம் சுமந்து!

-

அடர் வனமொன்றில் அவசரமாய்த் தொலைந்து போகலாம் வாருங்கள்! அவசரமொன்றுமில்லை ஆற அமரத் தேடிக்கொள்வோம்!

-

கோபத்தைக் கொட்டுவதற்கான வாய்ப்புகளை அமைதியாக அனுமதிப்பதுவும் பிரியம் தான்!

-

கேட்கிறவர்களுக்கு 'உண்மை பிடிக்காது' என்பதாலேயே சொல்கிறவர்கள் 'பொய்' சொல்கிறார்கள்!


-

மௌனித்திருக்கும் நேரமெல்லாம் மௌனமல்ல! உள்ளுக்குள் உரையாடிக் கொண்டிருக்கலாம்!

-

வேரைத் தேடவேண்டிய அவசியம் நீருக்கு இல்லை. நீரைத் தேடும் அவசியம் வேருக்கு உண்டு.

-

ஆன்ட்ராய்ட் போனிலிருக்கும் எல்லா 'ஆப்ஸ்'களும் சலிப்பூட்டும் கணத்தில், மூளைக்குள் நோக்கியா 1100 மொபைல் சிணுங்கிறது!

-

அலைகளுக்கு ஏது அலுப்பு!

-

வாளேந்தித்தான் ஆகவேண்டுமென வாதிடுகிறீர்கள். வீரன் என உங்களை நினைத்தது குறித்து எனக்கேதுமில்லை. கூர்முனையை ஏன் கையில் பற்றியிருக்கிறீர்கள்?

-

பிறக்கப்போகும் ஒரு குழந்தை சந்திக்கவிருக்கும் சவாலான உலகை விடவா, நானும் நீங்களும் வாழ்ந்துவரும் உலகம் சவாலாக இருந்துவிடப்போகிறது!? #GoAhed

-

ஃபேஸ்புக்கில் இல்லாத நண்பரை எப்படி அன்ஃபிரெண்ட் செய்வதென யோசிக்கிறான் புத்தன்!

-

அழுகையின் கண்ணீர்ச் சுவை உவர்ப்பு... பிரியத்தின் கண்ணீரிலிருப்பது உயிரின் ருசி!

-

அழகான முகங்களைவிட அழகிய மனங்களே, காலம்காலமாய் அழியா ஓவியமாய் மனதிற்குள் பதிந்து கிடக்கின்றன.

-

நீண்ட நேரமாய் கதைத்துக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவியின் மொழியறிய எம் எந்த அறிவினைத் துறக்க வேண்டும்!

-

மொபைல் போனை அணைத்து வைத்துவிட்டு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதுதான் வாசிப்பிற்குச் செய்யும் நேர்மை!

3 comments:

Naveankumar said...

#கூர்முனையை ஏன் கையில் பற்றியிருக்கிறீர்கள்?

Deepa Pradeepa said...

இன்று தான் உங்கள் வலைத்தளத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.அனைத்தும் அருமை.இன்றைய நாளில் மிக நல்ல பதிவுகளை படிக்க வைத்த இறைக்கு நன்றி.தங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Deepa Pradeepa said...

இன்று தான் உங்கள் வலைத்தளத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.அனைத்தும் அருமை.இன்றைய நாளில் மிக நல்ல பதிவுகளை படிக்க வைத்த இறைக்கு நன்றி.தங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.