கீச்சுகள் - 45



பிப்ரவரிக்கு 28 நாள்னு காலண்டர் அடிச்சவங்களுக்கு வட்டி, வாடகை, சம்பளம்னு இப்பதான் கஷ்டம் புரிஞ்சிருக்கும். ஒழுங்கா ப்ரூப் பார்த்திருக்கலாம்.

-

கை நீட்டியவாறு குழாய் திறக்க வேகமாய் சீறும் தண்ணீர் கையில் மோதி, முகத்தில் தெறிக்க அசராமல் நிற்பதும் 'ஜென் நிலை' தானோ!?


-

உண்டியல் மனதிற்குள் ஓராயிரம் நினைவுகள்!


-

ப்ரிட்ஜ்ல ப்ளாஸ்டிக் டப்பால இருந்ததை எடுத்து மைக்ரோஓவன்ல வெச்சு மண் சட்டில போட்டு பாரம்பரியம்னு விக்கிறதுக்கும் பேருதான் Cafeமா(தி)ரித்தனம்


-

எடையுள்ள ஒன்று சுமையா? சுகமா? என்பது அந்த எடையின் தன்மை மற்றும் அதை சுமப்பவரின் சூழல், மனநிலையைப் பொறுத்ததே! :)


-

மூடிய இமைகளுக்குள் தேங்கிக்கிடப்பது வெறும் இருள் மட்டுமா! கனவு கொஞ்சம் காதல் கொஞ்சம் கடமை கொஞ்சம் காமம் கொஞ்சம் அத்தோடு தூக்கமும் கொஞ்சம்!


-

சைகைக்கு நிகரான எளிய மொழி ஏது?


-

தன் குறட்டைச்சத்தம் தனக்கு கேட்காததால் மட்டுமே பல பேரு பயங்கரமாத்(!) தூங்குறாங்க!


-

பயணம்தான் எத்தனை அழகிய பாடம்!


-


ஏமாற்றுதல் கொலைக்கும், ஏமாறுதல் தற்கொலைக்கும் நிகரானதாகிறது பல நேரங்களில்!

-


செல்போனில் அதிகம் பகிரப்படும் ஒரு சமாளிப்புநான் கொஞ்சம் வெளில இருக்கேன்

-


தனிமைக்கு நிகரான தோழனோ, எதிரியோ இல்லை இந்த உலகத்தில்!


-

143-க்கு மிக நெருக்கமான ஒரு எண் தான் ’144’ :)


-

சற்றுமுன் விலகிய அந்த விரல்களின் நுனியில் இன்னும் கொஞ்சம் பிரியம் வழிந்து கொண்டிருக்கலாம் சேகரிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்


-

ட்ரெயின் டாய்லட்ல என்னென்னவோ எழுதி வச்சிங்க, பொறுத்துக் கொண்டோம். இப்ப ஒரு கம்பெனிக்காரன் "Save Petrol"னு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கான்....

இந்த உலகத்துக்கு என்னதான்டா சேதி சொல்ல வர்றீங்க!?

-

நமக்கு தட்கால் டிக்கெட் போடும்போது நாள் முழுக்க சுத்துறதும், மத்தவங்களுக்கு போடும்போது உடனே கிடைச்சிடுறதும் எதுல சேர்த்தினே தெரியல! #IRCTC


-

அடுப்பில் கறி வேகும்போதுஉப்பு செரியா இருக்கா, வெந்துடுச்சா பாருஎன ஒரு கறி தராமல், தட்டில் போட்டு கொடுக்கும் தருணம் ஆசிர்வதிக்கப்பட்டது!


-

அடையாளப் படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்களில் ஏற்படும் காயங்களின் தழும்புகள் சில நேரங்களில் அடையாளமாகி விடுகின்றன!


-

இதுவரையிலான வாழ்க்கையை உதறிப்போட்டு என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் எனப்பார்த்தால், சேகரித்து வைத்திருப்பவை நட்புகள் மட்டுமே!


-


வெட்டி விவாதத்தில்டைவர்ஸ் ஆகுறதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறேஎன்றார் நண்பர். கல்யாணம் ஆகுறதுதானு சொன்னேன், என்னை டைவர்ஸ் பண்ணிட்டாரு!

-

வெயிலில் பறக்கும் பறவை விதைத்துச் செல்கிறது நிழலை எப்போது முளைக்குமோ எவர் அறிவார்!


-

உதிர்க்கும் சொற்களில்மனசு பார்க்கப்படுவதில்லை திறமை நோக்கப்படுகிறது!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தட்கால்... அட...! உங்களுக்குமா...?

மகிழ்நிறை said...

பிப்ரவரிக்கு 28 நாள்னு காலண்டர் அடிச்சவங்களுக்கு வட்டி, வாடகை, சம்பளம்னு இப்பதான் கஷ்டம் புரிஞ்சிருக்கும். ஒழுங்கா ப்ரூப் பார்த்திருக்கலாம்.// ரூம் போட்டு யோசிப்பிங்கள??
விலகும் விரல்கள் -கவிதை கவிதை
உண்டியல் மனசு_சில்லறைத்தனமான எண்ணங்கள் இல்லை
சமையல் தருணம் _எனக்கும் என் தங்கைக்குமானது!!

Unknown said...

அருமை...

Prapavi said...

:-)