நீள் பயணத்தின் பின்



நீள் பயணத்தின் பின்
வீடு வந்தாயிற்று
மகளை அணைத்தாயிற்று
மனைவியைக் கொஞ்சியாயிற்று
அம்மா அப்பாவிடம் பேசியாயிற்று
அலுவலகம் வந்தாயிற்று
மின்மடல்களுக்கு பதில் தந்தாயிற்று
அழைப்பிதழ்களின் தேதி குறித்தாயிற்று
நண்பர்களோடு தேநீர் அருந்தியாயிற்று
காத்திருப்புகளுக்கு பதில் சொல்லியாயிற்று
விசாரிப்புகளுக்கு தலையசைத்தாயிற்று
காசோலைகளுக்கு யோசித்தாயிற்று
தவறிய அழைப்புகளுக்கு மன்னிப்பு கோரியாயிற்று
கிட்டிய உதவிகளுக்கு நன்றி பகிர்ந்தாயிற்று
உறவுகளிடமும் அன்பை உரசியாயியிற்று
இன்னபிறவென எல்லாமாயிற்று..
ஏனோ நான் என்னிடம் மட்டும்
இன்னும்  பேசிடவேயில்லை!


-

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது தான் பேசி விட்டீர்களே...!

ரசித்தேன்...

Unknown said...

என்னை எடுத்து தன்னை எழுதிகொண்ட வாழ்க்கையில்... நான் "என்னை" காண கொஞ்சம் மறந்துதான் போனேன்...

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

sivakumarcoimbatore said...

அருமை sir....:)!

'பரிவை' சே.குமார் said...

ரசித்தேன் அண்ணா...

மகிழ்நிறை said...

இப்போ பேசிடீங்களா ?
அப்புறம் நட்பா ஒரு நினைவூட்டல்.
நீங்க ஜம்ப் பிரேக் கொடுக்காததால, என் பேஜ் ல உங்க முழு கவிதையையும் படிச்சுட்டேன். கருத்து போடத்தான் இங்க வந்தேன். இது வ்யுவர்சை குறைக்கும் தானே? தப்பா சொல்லிருந்தா மன்னிக்கவும்.

Unknown said...

அருமை கதிர்.நா தாமதமா தான் இத பாத்தேன். :-(

ARV Loshan said...

:))
எங்களுடன் நாம் நாமாகப் பேசும் அந்தக் கணங்கள் இனிமையானவை. வேறு எவ்விதமாகவும் பிரதியிட முடியாதவை.​