எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும்
சூப்பர் டூப்பர்
கூட்டம். சேர்
போட்டு உட்கார வெச்சு,
காசு தந்து
# வாடகைத்
தொண்டர்கள் வாழும்
காலம் இது!
·
8 am, 12 pm,
4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும்,
அடங்காம எரியுதே.
# என்னா வெயில்டா சாமீ
:-(
·
ஒற்றைப் பறவை
வானில் அளக்கிறது
உறவுப் பறவைகளின்
பயணப்படா தொலைவினை.
·
கம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னு
சொல்லியிருப்பாங்களோ!?
·
கர்நாடக பாஜக சட்டசபை
ஆளுக எல்லாம்
சேலம் சித்த
வைத்திய சாலையில்
கணக்கு வெச்சிருக்காங்களோ?
அடிக்கடி இதே
வேலையா திரியறாங்க!
·
பிள்ளைகளை அவர்களின்
வயது, வளர்ச்சியைவிடக்
குறைவாக அன்பெனும்
பெயரால்(!) “குழந்தைத்தனமாக” நடத்த
முயல்வதும் குற்றமே!
·
பிள்ளைகளின் வளர்ச்சி,
வயதைப் பொருட்படுத்தாமல்,
அன்பென்ற பெயரில்,
அவர்களின் நிலைக்கு
குறைவாக ’குழந்தைகளாக’
பாவிப்பதும் ஒருவகை
குற்றம்தான்!
·
கார் வாங்க வீடு
தேடிவந்து லோன்
தந்துட்டு, மாடு
வாங்க லோன்
தர யோசிக்கிற
சமூகத்தில்தான் காபிக்கு
வாங்குற பால்
விலை அதிகம்னு
கவலைப்படுறோம்
·
எத்தனை ரிதமாய் ஊதினாலும்,
அவசர ஊர்தியின்
சங்கொலியை ஒருபோதும்
ரசிக்க முடிவதில்லை!
·
சனிக்கிழமை பள்ளிக்கூடம்
வெச்சுட்டாங்களாம், இந்த
”குட் ஃப்ரைடே”
சனிக்கிழமை வந்திருக்கக்கூடாதானு
கேலண்டரை திட்டுது
எங்க வீட்டு
வாண்டு!
·
“அங்கே 2 மணி
நேரம் மட்டும்தான்
பவர் கட்டா?”
எனக் கேட்கும்
ஊர்களைப் பார்த்து
சென்னை ”போடா
வெண்ணை” என்கிறது.
·
ஆரம்பிக்கும் தருணத்தில்
முடிவு தெரிவதில்லை.
முடிவுறும் தருணத்தில்
ஆரம்பம் நினைவில்
இருப்பதில்லை!
·
மனசும் ஓர் இசைக்
கருவியே!
·
இந்த தினத்தின் முதல்
ரகசிய முடிச்சு
அவிழ்ப்பு 'விடியல்'
·
வெளுத்துப்போற மசுருக்கு
சாயம் பூசுறதுல
காட்டும் அவசரத்தை
/ கவனத்தை, உளுத்துப்போற
மனசைப் பாதுகாக்க
ஒருபோதும் காட்டுவதேயில்லை!
·
உண்மை என்பதையும் விட,
ஓங்கிக் குரல்
கொடுப்பவனையே உலகம்
உடனே திரும்பிப்
பார்க்கிறது!
·
6.54க்கு போன கரண்ட்
7.18க்கே வந்துடுறதா?
பொறுப்பில்லா EBக்கு
கடும் கண்டனங்கள்!
# நடுசாமத்துல
புடுங்கினா மட்டும்
பொறுப்புல குறைச்சலில்லை
·
அரசியல்வாதி - பொதுஜனத்திற்கு
இடையே இருக்கும்
இடைவெளிக்கு நிகரானதொரு
இடைவெளி, சமூகவலைதள
ஆட்கள் - அதில்
இல்லாதோர் இடையே
நிலவுகிறது.
·
சமையல் அறையில் கரித்துணி
காணாம போறதுக்கெல்லாம்
CBI விசாரிக்க மாட்டாங்க
என்பதைப் புரிய
வைக்கமுடியாத தருணங்களைக்
கொண்டதும்தான் வாழ்க்கை!
·
7 ரூபா போட்டு ஒரு
கிளாஸ் மொக்கை(!)
”டீ”ய
குடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒரு
சொம்பு கம்மங்கூழ்
தாராளமா குடிக்கலாம்!
#புத்திக்கொள்முதல்
·
வாழ்தல் இனிது. வாழ்தல்
அறம். வாழ்வு
தவம்.
·
குடும்பமா கிளம்பும்
போது கார்
டயர் பன்ச்சரா
இருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும்.
#இடுக்கண் --> நகுக
·
ரொம்ப வருசங்களுக்குப் பிறகு
நடு சாமத்தில்
தண்ணீர் பிடிக்கும்
மக்கள். #அதுவும்
மார்ச் மாசமே
:-(
போராடி மட்டும் என்னவாகிடப்
போகிறது என்கிறீர்கள்
நீங்கள்!
போராடாமல் மட்டும்
என்னவாகிடப்போகிறது என்கிறார்கள்
அவர்கள்!
·
இன்று பெட்ரோல் விலை
ரூ.2 குறைகிறது
- செய்தி # இதுக்கும்
பழக்கதோசத்துல இப்பவே
போய் க்யூல
நின்னுடுவாங்களே!
·
எல்லாமுமே ஒரு
விடைபெறுதலின் வரைதான்!
·
குழந்தைகள் கடைப்பிடிக்கும்
மௌனத்தில் பொதிந்திருக்கும்
கோபம் உலகின்
அதி வலிமைமிகு
கோபம்
·
எதிரி விரும்புவதைச் செய்வதைவிட
செய்யாமலே இருப்பதும்
வீரம்!
·
இயலாமையின் முதற்கட்டம்….
கோபம், இறுதிக்
கட்டம்….. சபித்தல்!
·
அழுகையும் சிரிப்பு
போன்ற ஒரு
வெளிப்பாடுதானே! அழுகைக்கு
ஏன் இத்தனை
ஒளிவு மறைவு
தேவைப்படுகிறது!
·
மூனு பெக்-லிருந்து
நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல,
மூனு பெக்கிற்குப்
பதில் இரண்டோடு
எழுந்துவிடுவதுதான் வீரம்!
·
8 மணிக்கு போக வேண்டிய
கரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துல
நா.சா.
கம்பெனிக்காரங்க கரண்ட்
எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?
·
Mobile, SMS,
Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோ
எல்லோருக்குமிடையே, எனினும்
மௌனமே பேசுகிறது
பல உறவுகளில்
·
மனிதன் அதிகமாக அஞ்சும்
ஒரு சக
உயிரினம் “மனிதன்”
·
அறிமுகங்கள் முடிந்து,
ஆர்வங்கள் பகிர்ந்து,
எல்லாம் கரைந்த
ஒரு நற்பொழுதில்(!)
எளிதாய் ஆரம்பிக்கிறார்கள்
’பொறணி’ பேச!
·
உள்ளங்காலில் ஒரு
கொசு கடித்துக்
கொண்டிருக்கிறது. ரொம்பவும்
பஞ்சத்தில் அடிபட்ட
கொசு போல!
:)
·
"அதெல்லாம் டைவர்ஸ்
ஆயிருச்சுங்க" வெகு சகஜமாக புழங்குகிறது
கிராமங்களிலும்.
·
”கெடா விருந்து”க்குக்கு
அழைக்கப்பட்டிருக்கும் தினம்
ஆசிர்வதிக்கப்பட்ட தினமா
இல்லையா!? நீங்களே
சொல்லுங்க!
·
காலையில் சமையலறையில் கூடமாட
ஒத்தாசை செய்தால்,
அன்றைக்கு மதிய
சோறு கூடுதல்
சுவையாய் இருக்கின்றது
#அனுபவதானிப்பு
·
சுமக்க முடியாததை ஏன்
இறக்கி வைக்கக்கூடாது?
·
”குடி” ஆரம்பத்தில் சுவாரஸ்யம்,
பின்னர் அது
பழக்கம், ஒரு
கட்டத்திற்குப் பிறகு
அது நோய்!
நமக்கு நாமே தரக்கூடிய
எளிய பரிசு
“மௌனம்”
·
”நான் ஒன்னு கேட்டா
தப்பா நினைச்சுக்க
மாட்டீங்களே!?” எனும் பீடிகைகளில் தப்பா
நினைக்க ஏதோ
ஒன்று இருக்கவே
செய்கின்றது!
·
இதென்னடாது காலண்டர்ல
பிப்ரவரி 28ம்
தேதிய கிழிச்சா,
மார்ச் ஒன்னாம் தேதி வருது.
#நடுவுல கொஞ்சம்
தேதியக் காணோம்
-
3 comments:
"அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவு மறைவு தேவைப்படுகிறது!" - நல்ல கேள்வி! ஏன் என்றால் அழுகை ஒரு மனிதனின் பலவீனம் என்று சமூகத்தால் பார்க்கப்படுகிறது! இது என் அனுபவம்! அனைத்து கீச்சுக்களும் நன்று!
'மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடு எழுந்துவிடுவதுதான் வீரம்! '
எப்டி அண்ணே . .
இப்டி எல்லாம் . . .
அனைத்தும் அருமை
சூப்பரப்பு
Post a Comment