வாயுள்ள புள்ள எப்பவுமே பொழைச்சுக்குது

பேச்சை மூலதனமாக வைத்துக் கொண்டிருக்கும் ஜோசியக்காரர்கள் குறித்த கண்மணி குணசேகரனின் பகடி

வாய்ச் சொல்லின் வீரனாய் இருக்கும் ஜாதகம் பார்ப்பவரின் மகன் முருங்கைக்கீரை திருடப்போக, வீட்டுக்காரர்கள் கண்டு, அடித்து துவைத்து குப்பையில் தூக்கி வீசிவிடுகின்றனர்.

அடிபட்டுக்கிடந்தவன், தன் அப்பனுக்கு தகவல் சொல்ல வழியில் செல்பவனிடம் சொல்கிறான்.

ஒருவேளை தகவல் சொல்லப் போகின்றவன்  ”இந்தமாதிரி, ஒம்பையன் முருங்கக்கீரை திருடப்போயிருக்கான், கண்டுபிடிச்சு வெளக்குமாறு, செருப்பால அடிச்சு, குப்பையில் தூக்கிப் போட்டுட்டாங்கன்னு” சொல்லிடுவானோன்னு அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பையன் சொல்லியனுப்புகிறான்

”வெள்ளிக்கண்ணன்
விஸ்வலிங்க தம்பிரான்
முருங்ககீர பதார்த்தம் கைப்பற்றப்போய்
அண்டம் தடுமாறி
பூமிப்பாரம் தாங்கி
அரண்மனையாளால் கண்டெடுத்து
சுத்தம் காப்பானால் துடைத்து
பசுமாட்டுச் சென்மத்தால் பரிமாறி
துர் மூத்தி மெத்தைமேல்
சயனித்திருப்பதாக
செப்புடா என் அப்பனிடம்!!!!” என்று.

ம்ம்ம்ம்ம்… வாயுள்ள புள்ள எப்பவுமே பொழைச்சுக்குது


----

குறிப்பு : 
சுத்தம் காப்பான் -  வெளக்குமாறு
பசுமாட்டுசென்மம் – மாட்டுத்தோல் செருப்பு 
துர் – குப்பை

-----
 
பொறுப்பி:
எங்கள் அரிமா சங்கக் கூட்டத்தில் நடுநாட்டுக் கதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் ஒரு பகுதி!


-0-

15 comments:

KARTHIK said...

நம்ம தொழில் முறை ஜோஸியரும் இப்படி ஒருநாள் பாடி தூதுவிடுவார் பாருங்க :-))

vasu balaji said...

அதாருங் கார்த்திக்.=))

KARTHIK said...

எல்லாம் நம்ம பயகதான்

ஆனா ஆசானே நீங்க இருக்கீங்களே ;-))))))))

க ரா said...

எங்கேந்து பிடிக்கிறீங்க இந்த மாதிரி மேட்டரெல்லாம்.. கலக்கல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

பழமைபேசி said...

சிகரத்துல நான் பஞ்சாங்கம் எதும் பார்க்கலையே?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்..

வித்தியாசமான அரிமா சங்கம் தாங்க ;)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. செம பில்ட் அப்பு!!!!!!

சத்ரியன் said...

ஆமாமா. பொழைச்சுக்கும்...பொழைச்சுக்கும்!

Unknown said...

:))

காமராஜ் said...

நல்லா இருக்கு கதிர்.

தாராபுரத்தான் said...

அதுதான் தெரியுதே..

rvelkannan said...

மிகுந்த நன்றி ..

க.பாலாசி said...

மிஸ் பண்ணிட்டேன்.. வந்திருக்கோணும்..

Unknown said...

//பேச்சை மூலதனமாக வைத்துக் கொண்டிருக்கும் ஜோசியக்காரர்கள்//

இதுவே மிகப்பெரிய பகடி...