ஒரு வருடத்திற்கு முன் கண்டு மனம் சிதைந்த காணொளியின் தொடர்ச்சிதான் இது. நீளம் மட்டும் அதிகம், அதனால் சிதறிக்கிடக்கும் பிணங்களின் எண்ணிக்கை கூடுதல். பிணங்களை ரசித்து படம் பிடிக்கும் கேமராவுக்குள் படபடவென பொரியும் துப்பாக்கிக் குண்டுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் ஒரு உயிர் பறிபோயிருந்த அவலத்தை மனது சீரணிக்க மறுக்கிறது.
கடந்த ஆண்டே வெளிவந்திருந்த இதன் ஒரு நிமிட காணொளிப் பகுதி குறித்து வவுனியாவில் சந்தித்த தமிழரிடம் கேட்டபோது, ”அப்படிக் கொல்லப்பட்டது புலிகள் அல்ல, கிளிநொச்சியில் பிடிபட்ட சாதாரண சனங்களைத்தான் அப்படி சுட்டுக் கொன்றனர்” என்று கூறினார். (அந்த உண்மை காணொளியை எடுத்த சிங்களப் படை வீரன் எதிர்காலத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் சொல்லும் போது தெரியலாம்) சாதாரண மனிதர்களையே இவ்வளவு கொடூரமாகக் கொல்லும் சிங்கள ராணுவத்தினர், சரணடைந்த புலி உறுப்பினர்களை, அதுவும் பெண் புலிகளை எப்படி சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள் என நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
லண்டன் நகரில் கால்வைத்த தினம் முதல் ஒரு கணம் கூட நிம்மதியாய் இருக்க விடாமல் தங்கள் மண்ணிலிருந்து துரத்திய லண்டன் வாழ் தமிழர்களின் உறுதியையும், தொடர்ந்து இன அழிப்பு காணொளியை ஒளிபரப்பிய சானல்-4 தொலைக்காட்சியை நினைக்கும் போது சற்றே ஆறுதலாக இருக்கிறது. அதே சமயம் இதையொட்டி ராஜபக்ஷேவின் வீரம்(!) மிகுந்த ராணுவம், இன்னும் முகாமில் அடைத்து வைத்திருப்பவர்கள் மேல் வக்கிரம் நிறைந்த வீரத்தை பிரயோகிப்பார்கள் என்பதை நினைக்கும் போது உயிரெல்லாம் சுண்டிப்போகிறது.
துணியை அவிழ்த்து, வக்கிரத்தின் ஓட்டத்திற்கேற்ப சித்திரவதைகள் செய்து, கைகளை பின்பக்கமாய் கட்டி, சாகப்போகிறவரின் கண்களைக் கூட சந்திக்கும் துணிவற்று, மண்டியிட வைத்து, பின் கழுத்தில் துப்பாக்கியால் மிகச் வீரமாய்(!) சுட்டு கொலைகளை ரசித்து ரசித்து செய்யும் சிங்கள வீரத்திற்கு(!) எதிராய் மனிதாபிமானத்தில், குரல் உயர்த்த பெருந்தொகையிலான இந்திய ஊடகங்களுக்கும், நாட்டையும் மக்களையும் கட்டிக்காக்க உழைக்கும் புண்ணிய அரசியல் ஆத்மாக்களும், ஏன் பொதுமக்களுக்கும் கூட நேரம் இல்லை போல.
அதே நேரம்…..
இந்தக் காணொளியின் ஒரு பகுதி சென்ற வருடம் வெளியான காலத்திற்குப் பிறகே, இன அழிப்புக் குற்றவாளி ராஜபக்சே சுகமாய் இந்தியா வந்து கூடுதல் சுகமாய் இலங்கை திரும்பியிருக்கிறார். திருப்பதியில் கால் வைத்து திருப்தியாய் திரும்பிய உலகத்தின் வக்கிரம் நிறைந்த கொலை பாதகனை கோடானு கோடிப்பேர் கும்பிடும் கடவுளால் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை, ஆனாலும் இன்னும் அந்தக் கோவிலுக்கு கூட்டம்தான் குறைந்த பாடில்லை.
ஆசிர்வதித்து அனுப்பிய மண்ணில், இந்திய ஏழைகளின் கண்ணீரைத் துடைத்திட்ட காமன் வெல்த் போட்டியின் நிறைவு விழாவிற்கும் கூட அழைத்து பெருமைப்பட்டுக் கொண்ட மண்ணில், எந்தக்கூச்சமும் இல்லாமல் எல்லாக் கருமத்தையும் சகித்துக் கொண்டு வழக்கம் போல், வாழ்க்கைச் சக்கரம் சிறிதும் மாற்றி இயங்கிடாமல் பார்த்துப் பார்த்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
பல நேரங்களில் உலகை வாழ்விக்க வரும் திரைப்படங்களுக்கு முதல் காட்சியை பார்ப்பதில் காட்டும் ஆர்வமும், அதற்குச் சப்பைக்கட்டு கட்டி ஓங்கி ஒலிக்கும் குரல் கூட வக்கிரமாய் கொல்லப்படும் சகமனிதன் குறித்த ஆவணங்களைக் காணும் போது தொலைந்து போய்விடும் ஒரு சமூகத்தில் பெருமை மிகு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சரி….. வாழ்ந்து தொலைப்போம்…..
கூடவே தேடுவோம் மனசாட்சியையும்....
___________________
33 comments:
வாழ்ந்து தொலைப்போம்….. :-(
ம்ம். மொத்தம் கூட்டுக் களவாணிப்பய புள்ளைய. ச்ச்சை.
இந்த காணொளிகளை காணும் பேறு பெற்றதற்காக எனது கண்களையே குருடாக்கிக் கொள்ளலாமா என்று நான் என்னும் விதத்தில் ஈழத்தில் நடாத்தப்பட்டு இருக்கிறது உச்ச பட்ச குரூரம்.
அவன் ஏன் கொல்லப்பட்டான்....தமிழன் என்பதால் தன் மண்ணில் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேட்கை கொண்டதால்....கொல்லப்பட்டான்...
அவன் ஏன் ஆயுதம் ஏந்தினான்....... ஆயுதம் கொண்டு தாக்கியதால்...கண்ணெதிரில் குடும்பங்கள் சூறையாடப்பட்டதால்
உயிரோடு கண்கள் கட்டப்பட்டு உயிர் பறிக்கும் மிருகங்கள் நடமாட சத்தியம் பேசும் தேசம் கண்கள் மூடிக்கிடப்பதா?
கேள்விகளோடு இரத்தம் சூடேறி சூடேறி இயலாமையில் வீழப்போகிறதா தமிழினம்...!
தமிழனைப்பற்றி பேசினால் தவறு தமிழீழம் கேட்டால் தவறு...? இந்திய அரசின் கண்களில் அவலங்கள் ஏன் பிடிபடவில்லை?
வலி கதிர்..! ஒரு ஆழமான வலி ஈழத்தின் சோகம்..!
காணொளி மிகக் கொடூரம்.
இது போன்ற காணொளிகளைப் பார்த்து மௌனமாக இருக்கும் நாம் விக்கிலீக்ஸ் ஆவணங்களையா கண்டுக்கப் போகிறோம்?
ம்ம்ம்ம்....
செய்தியே மனதை பதற வைத்தது. வீடியோ பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
இந்த வீடியோ பார்க்கும் துணிவு எனக்கு எப்பவுமே வரலை.. வராது...
மத்தது... சொல்ல ஏதுமில்ல...
மனசாட்சியோடு வாழ்ந்தும் காட்டலாம்
உங்களை போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள்
மனித நேயம் இன்னும் செத்து விடவில்லை.
ஆழ்ந்த இருட்டின் புதை குழிக்குள்
வலியையும் வேதனையையும் தாண்டி
நம்பிக்கை என்ற ஒளி மட்டுமே
இப்போதைய எங்கள் பலம்.
கண் கொண்டு பார்க்க முடியல ....
என்ன சொல்ல...........
கண்கள் கூசும் வெளி வந்தவைகள் இவை..........வெளிவராமல் எவ்வளவு இருக்குமோ? ....அக்கிரமங்கள் நடக்கும் உலகில் வாழ்கிறோமே ...அதைக்கண்மூடி மெளனமாய் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம்.................ஏன் இந்த மனிதப்பிறப்பு ...........
அனாதைகள் ஆகிப் போனோம்; ஆகிக் கொண்டு இருக்கிறோம்....
மூங்கில்தொழுவுங்ற ஊர்ல ஒருத்தரை பட்டப்பகலில் அரசியல் குண்டர்கள் அடித்துக் கொன்றார்கள் என்பதற்காக, கிட்டத்தட்ட பத்து ஊர் மக்களும் ஒன்று திரண்டார்கள்.. 20 ஆண்டுகளுக்கு முன்னர்...
பக்கத்து வீட்டுல ஒன்னுன்னாக் கூட, எட்டிப் பார்க்க மாட்டாங்க இப்ப... காரணம் என்ன?
கிராமியக் கட்டமைப்பு நாளுக்கு நாள் சிதைந்து, மனிதனுக்கும் மனிதனுக்குமான ஒட்டுதல் இல்லை நாட்டுல!
அமெரிக்காவுக்கு சரி... குடியேறிகள் புகுந்த நாடு.... பொருளாதார வளம் கொண்டு எதையும் ஆட்டிப் படைக்க முடியும்...
நம்ம நாட்டுக்கு முதுகெலும்பே, மக்கள் பிணைப்புதான்... அப்பிணைப்பானது தளரும் போது... மனிதனுக்கு மனிதன் ஆறுதல் சொல்லக் கூட நேரமும் இல்லை; மனசும் இல்லாமப் போய்டிச்சி.... :-0( காலக் கொடுமைடா சாமி!!
//திருப்பதியில் கால் வைத்து திருப்தியாய் திரும்பிய உலகத்தின் வக்கிரம் நிறைந்த கொலை பாதகனை கோடானு கோடிப்பேர் கும்பிடும் கடவுளால் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை, ஆனாலும் இன்னும் அந்தக் கோவிலுக்கு கூட்டம்தான் குறைந்த பாடில்லை. //
சபாஷ்.சரியான ஆத்திரம்.
இதற்குப்பிறகும் என்ன செய்ய.
இதுவும் கூட வலையில் மட்டும் பேசப்படுகிறது.பிரபல ஊடகங்களுக்கு வெறு வேறு அஜெண்டாக்கள் இருக்கிறது.
இன்னும் வேடிக்கை பார்ப்போம்...
வார்த்தை வித்தையில் மயங்கி
ஏமாற்றப்படுகிறோம் ..
ஏற்கனவே பார்த்திருக்கேன் :(((( ஈனப் பொறப்பு :(
தெய்வம்.. நின்னாவது கொல்லுமா??
என் உடன்பிறப்பின் கொடூரச் சாவை காணும் மன தைரியத்தை நான் இன்னும் பெறவில்லை...உங்கள் எழுத்துக்களின் ஒவ்வொரு வரியும் ஈட்டிகளாய் மனதில் தைக்கின்றன....வேதனை
//கொலை பாதகனை கோடானு கோடிப்பேர் கும்பிடும் கடவுளால் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை.//
கதிர்,
எப்போதும் சிரித்த முகத்துடனும், சாந்த குணமும் கவசமாய் கொண்ட உங்களையே இவ்வளவு கோபப்பட வைத்திருக்கும் இந்த காணொளியைக் கண்டு, மிக எளிதில் கோபம் கொள்ளும் என் நிலைமை எப்படி இருந்திருக்கும்...?
தமிழகத்தில் இருக்கும் (வெறும் இருக்கிரோமெயொழிய நாம வாழவில்லை.)தமிழர்கள் நமக்குள் ஏன் இதைக்கண்டும் ஏன் எந்த சொரணையும் இன்றி கிடக்கிறோம்.
சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடின “சே குவேரா” வாழ்ந்திருந்த இந்த உலகத்தில் தானே நாமும் பிறப்பெடுத்திருக்கிறோம்.
நம் சொந்த இனத்தின் விடுதலைக்கு ஒன்றிணைந்து போராட ஏன் நமக்கு உணர்வு இல்லாமல் போய் விட்டது...?
துளைக்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு.
எழவு வீட்டில் நாம் அழுதுக்கொண்டிருக்கிறோ. மானங்கெட்ட “இறையாண்மை” மிக்க நாட்டின் ஊடகத்துறை ஒன்று ”விடுதலைப்புலிகள் கேரளாவில் மீண்டும் ஒன்றிணைகின்றனர்” என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.
அதையும் செய்தியாக படித்துவிட்டு அடுத்த செய்திப் பக்கத்தைப் புறட்டிக்கொண்டிருக்கிறோம்.
December 4, 2010 8:24 AM
வேறு வழி இல்லை வாழ்ந்து தொலைப்போம்
வலிதான்...கொடுமைதான்....கன்றாவிதான்...என்ன செய்யலாம் என்று ஒரு solution -ஐ சொல்லுங்கள் சாமி...சும்மா சும்மா இந்திய அரசியல்வாதிகளையும், ராஜபக்ஷேயையும் திட்டிக்கொண்டேயிருப்பதால் நாம் ஏதெனும் மயிரைப் புடுங்குகிறோமா என்ன?
@ Lollurasa
சொல்ல முடியாதுங்க யாராலையும் .... இதனை மக்கள் சாக எத்தனை தூரம் தமிழ் உணர்வாளர்கள் என கூறிகொள்ளும் மக்கள் யார் யார் மீது பலி போடுகிறார்களோ அதே அளவிற்கு விடுதலை புலிகள் பிரபாகரனுக்கும் உண்டு என்பதை உணராதவரை இதற்கான தீர்வை வைக்கவே முடியாது யாராலும் எப்போதும்.
உயிர் மட்டுமே இருக்கிறது
வாழ்கிறோமா நாம் !
All the atrocities are being done by politicians and we are so cowardice that even a single opposition we could not make , just we remain to be spectators..as ever
cannot understand this!why do the evil ones enjoy their life,while the better ones,suffer?
ஈழக்கொடுமையயும் அரசியல் செய்த நம்ம ஊர் அரசியல்வாதிகளும்(எரியும் வீட்டில் பிடுங்கி திங்கும் எச்சகலைகள்) ராஜபக்சேக்கு இணையவானவர்களே அண்ணா......
வாழ்ந்து தொலைப்போம்…..
கூடவே தேடுவோம் மனசாட்சியையும்....
எல்லாம் வல்ல இயற்கை ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கை மட்டும் மிச்சமிருக்கு.
இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு. இன்னும் என்னென்ன சிங்கள வெறியர்களுக்கு நடக்கப்போகுதுன்னு பாருங்க.
ம்ம்....மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வாழ்ந்து தொலைப்பவர்கள் கூட குறைவு தான் இங்கு...தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இனம் கூண்டோடு கொலைசெய்யப்படுகிறதே என்ற குறைந்தபட்ச உணர்ச்சிகூட இல்லாமல் எத்தனைபேர்...
எது எப்படி இருந்தாலும் வாழ்ந்துதொலைக்கத்தானே வேண்டியிருக்கிறது
Post a Comment