வரையாத புள்ளி


பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!

-0-

நிதமும் பழகிய ஒத்திகை
இறுதியாய் அரங்கேற்றம்
மரணிக்கும் நொடிகளில்
நீள் உறக்கமாய்!

-0-

கிட்டாத மதுச்சொட்டு
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது 
நாவிலும் மனதிலும்

-0-

முடிவாய் வைத்த புள்ளியை
உற்றுப் பார்க்கிறேன்
என்னை எட்டிப் பார்க்கின்றன
புள்ளிக்குள் நான் வைக்காத புள்ளிகள்!

-0-24 comments:

ராமலக்ஷ்மி said...

//

முடிவாய் வைத்த புள்ளியை
உற்றுப் பார்க்கிறேன்
என்னை எட்டிப் பார்க்கின்றன
புள்ளிக்குள் நான் வைக்காத புள்ளிகள்!//

அருமை.

முதலும் நன்று.

அம்பிகா said...

\\நிதமும் பழகிய ஒத்திகை
இறுதியாய் அரங்கேற்றம்
மரணிக்கும் நொடிகளில்
நீள் உறக்கமாய்!\\
-:))

arasan said...

நல்லா இருக்குங்க அனைத்தும்...

//கிட்டாத மதுச்சொட்டு
ஏக்கப் போதையாய்!
தள்ளாடுகிறது
நாவிலும் மனதிலும்//

அருமையான வரிகள்...

'பரிவை' சே.குமார் said...

//முடிவாய் வைத்த புள்ளியை
உற்றுப் பார்க்கிறேன்
என்னை எட்டிப் பார்க்கின்றன
புள்ளிக்குள் நான் வைக்காத புள்ளிகள்!//

அருமையான வரிகள்...

cheena (சீனா) said...

கவிதை நன்று. நினைவு ஒரே சுற்றாய் ச் சுற்றுகிறதே !

நிலையில்லாத நினைவுகள். முடிவா - துவக்கமா ?

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

செல்வா said...

/பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!
/

அருமை அண்ணா ..!!

ஹேமா said...

எல்லாமே ஆழ்ந்த சிந்தனை.கடுகதியான வாழ்வில் இப்படிச் சிந்திப்பது நிறையக்
கஸ்டம் கதிர் !

சத்ரியன் said...

கதிர்,

வரையாத புள்ளிகள், வருவோர் எல்லோரையும் தொட்டுப்பார்க்கிறது.

பழமைபேசி said...

ம்ம்ம்

சென்னை பித்தன் said...

//பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!//
அதுதான் வாழ்க்கை.
நல்ல கவிதை!

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்கு...

தலைப்போடடொட்டிய கவிதை க்ளாஸ்...

பழமைபேசி said...

சேது ஐயா பின்னூட்டக் கவிதை பிழையின்றி எழுதுவார்!!!

sakthi said...

முடிவாய் வைத்த புள்ளியைஉற்றுப் பார்க்கிறேன்என்னை எட்டிப் பார்க்கின்றனபுள்ளிக்குள் நான் வைக்காத புள்ளிகள்!

ரொம்பவே பிடித்திருக்கு இக்கவிதை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எல்லாமே சிறப்பா வந்திருக்கு கதிர்.

1,4ஐ, இன்னும் சற்று திருத்தினால் சிறப்பான ஹைக்கூவாகியிருக்கும்.

;)

Unknown said...

என்னா இது பழமை. தளபதி வேலையை என்கிட்ட, அதுவும் பிழையில்லாம! உங்க ஈரோட்டு மாப்பு அந்த பக்கம் வந்தா கல்லடிச்சுத் துரத்திருவாறு!

Unknown said...

'கல்' ங்கனா 'கள்' இல்ல. நல்லாப் பார்த்துகிடுங்க.

பழமை: Note the point.

Unknown said...

புள்ளிகளை வரையமுடியாத கற்பனை கோலமென
மனச்சித்திரங்களின் பிரதிபலிப்பாக சில கவிதைகள் ...

நிலாமதி said...

பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!..

...அருமையான வரிகள்....


அதுதான் வாழ்க்கை.
நல்ல கவிதை

நிலாமதி said...

பாதங்களில் கலைந்து போகும்
அலைகளில் கரைந்தும் கூட
தெரிந்தும் கட்டுகிறோம்
மணற்கோட்டைகள்!..

...அருமையான வரிகள்....


அதுதான் வாழ்க்கை.
நல்ல கவிதை

shammi's blog said...

அருமையான கவிதை

தாராபுரத்தான் said...

என்னை எட்டிப் பார்க்கின்றன

kavitha said...

அருமை சகோதரரே

தீபா நாகராணி said...

நிதமும் பழகிய ஒத்திகை
இறுதியாய் அரங்கேற்றம்
மரணிக்கும் நொடிகளில்
நீள் உறக்கமாய்!// ம்ம்... முடிவு தெரிந்த பயணமாய் இருந்தாலும்
பல நேரங்களில் மறந்து விட்டு, வேடிக்கை மனிதராய் இருக்கிறோம்!

Unknown said...

...............