இன்னும் என்னிடம் எனக்குப் பிடிக்காத பத்து


1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.


2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.

3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.


4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.


5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.


6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில வலைப்பூ புகழ்னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.


7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது பிடிக்கலை.

8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.


9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல வலைப்பூ சிங்கம்னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.


10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.


11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.


12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல மொக்கைனு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை

13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல

___________________________________

50 comments:

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி......

மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்....

தமிழ் அமுதன் said...

///ஈரோடு கதிர் said...

இஃகிஃகி......

மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்....///

மீள் இடுகைன்னு சொல்லி நீங்களே
முதல் கமெண்ட்டு போட்டீங்க பாருங்க அது ரொம்ப புடிச்சு இருக்கு..!;;))

கலகலப்ரியா said...

//13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல//

இன்னும் எத்தன வாட்டி இந்த இடுகைய பப்ளிச்சு பண்றதா ஐடியா... எனக்கு ஓட்டு குத்தியே கையெல்லாம் வலிக்குது... முடியல முடியல... இதுக்கு பழிவாங்காம விட மாட்டேன்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.//

முன்னாடி 12 பாயிண்ட் தான் இருந்ததுனு நினைக்கறேன்.

இந்த தடவை 13 வச்சதுல ஏதாவது நுண்ணரசியல் அல்லது மெஸேஜ் வச்சிருக்கீங்களோ?

:))

vasu balaji said...

// பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//

இதுக்கு மீள்குத்து விழுமே பர்வால்ல்லியா:))

//நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.//

ங்கொய்யால. இது போறாதுன்னு இப்போ ஸ்டேடஸ்ல கொல்றத சொல்லாம விட்டது பிடிக்கலை.

vasu balaji said...

என்னதான் சிங்கை சிங்கம் குடுத்த கேமரால எடுத்தாலும் நேரா எடுத்த போட்டோல மண்டைதான் தெரியுதுன்னு செவப்பு பனியன், பச்ச சட்டைல சைட் போஸ் கொடுக்கிற போங்கு கூட புடிக்கலை.

dheva said...

என்னங்க..கதிர்....பதிவர்கள் பொழப்பா...ஒரு நாள் விடாம வாட்ச் பண்ணி எழுதுற மாதிரி இருக்கு...

டாப் காமெடி என்ன தெரியுமா.....கதிர்....


வலைப்பதிவு சிங்கமும்....மூணே முக்கால் அடி பதிவும்.....


மீள் பதிவாய் இருந்தாலும் சூப்பருங்க சாமியோவ்!

எறும்பு said...

//மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்....//

But இது எனக்கு பிடிச்சிருக்கு..

அ.முத்து பிரகாஷ் said...

// பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை. //
இப்போ கண்ணாலம் ஆயிடுத்தா சார் ...
தெரிஞ்சுமா பண்ணினாங்க ...
நல்ல தைரியம் தான் ...

அம்பிகா said...

பிடிக்காத பதிமூணு ல எதெல்லாம் உண்மை?
எல்லாமே உண்மையா?

ஈரோடு கதிர் said...

//தமிழ் அமுதன் (ஜீவன்) said...
முதல் கமெண்ட்டு போட்டீங்க பாருங்க அது ரொம்ப புடிச்சு இருக்கு..!;;))//

நீங்க ரொம்ப நல்வருங்கண்ணே


//கலகலப்ரியா said...
இன்னும் எத்தன வாட்டி இந்த இடுகைய பப்ளிச்சு பண்றதா ஐடியா... எனக்கு ஓட்டு குத்தியே கையெல்லாம் வலிக்குது... முடியல முடியல... இதுக்கு பழிவாங்காம விட மாட்டேன்...//

வச்சிக்கிட்டா இல்லேங்குறோம்... ஏதோ... பழைய சரக்க வச்சி காலத்த ஓட்றது புடிக்கலையா

பழி... ஓ... இடுகை வருதா....
ஓடிர்றா கைப்புள்ள

//ச.செந்தில்வேலன் said...

இந்த தடவை 13 வச்சதுல ஏதாவது நுண்ணரசியல் அல்லது மெஸேஜ் வச்சிருக்கீங்களோ?//

அட... பழைய சரக்குக்கு கொஞ்சம் கலர் சேர்த்தா வுடமாட்டீங்ளா


//வானம்பாடிகள் said...
இதுக்கு மீள்குத்து விழுமே பர்வால்ல்லியா:))

பாலாசி ஊர்ல இல்ல இஃகிஃகி

//ங்கொய்யால. இது போறாதுன்னு இப்போ ஸ்டேடஸ்ல கொல்றத சொல்லாம விட்டது பிடிக்கலை.//

அட.. ஆமாம்ல... அடுத்த இடுகை இதுதான்

// என்னதான் சிங்கை சிங்கம் குடுத்த கேமரால எடுத்தாலும் நேரா எடுத்த போட்டோல மண்டைதான் தெரியுதுன்னு செவப்பு பனியன், பச்ச சட்டைல சைட் போஸ் கொடுக்கிற போங்கு கூட புடிக்கலை.//

இத்தன பொறாம ஆகாது சாமி


//dheva said...
என்னங்க..கதிர்....பதிவர்கள் பொழப்பா...ஒரு நாள் விடாம வாட்ச் பண்ணி எழுதுற மாதிரி இருக்கு...//

அடப்பாவி மக்கா..
இது சொந்தக் கதைங்க

//எறும்பு said...
But இது எனக்கு பிடிச்சிருக்கு..//

படிக்கட்டும்..படிக்கட்டும்..

//
நியோ said...
இப்போ கண்ணாலம் ஆயிடுத்தா சார் ...
தெரிஞ்சுமா பண்ணினாங்க ...
நல்ல தைரியம் தான் ...//

அதெல்லாம் ஏழெட்டு வருசம் ஆச்சுங்க

இப்போதான் யாரும் புதுசா பொண்ணு தரமேட்டேங்குறாங்க

ஈரோடு கதிர் said...

//அம்பிகா said...
பிடிக்காத பதிமூணு ல எதெல்லாம் உண்மை?
எல்லாமே உண்மையா?//

இப்படியெல்லாம் உண்மைய கேக்கப்படாதுங்க... மீ பாவம்

r.v.saravanan said...

நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.

ஹி ...ஹி

நல்லா இருக்கு கதிர்

Radhakrishnan said...

ஹா ஹா! இதுமாதிரி மீள்பதிவு என்னை மாதிரி ஆளுகளுக்குப் படிக்க உதவும். அது சரி, நல்லாத்தானேப் போய்க்கிட்டிருக்கு ;)

ஈரோடு கதிர் said...

//r.v.saravanan said...
ஹி ...ஹி

நல்லா இருக்கு கதிர்//

இருக்காதுங்ளா பின்ன... நீங்களும் ராத்திரி SMS அனுப்பிப் பாருங்க அப்போத் தெரியும் எம்பட கஷ்டம்


//V.Radhakrishnan said...

ஹா ஹா! இதுமாதிரி மீள்பதிவு என்னை மாதிரி ஆளுகளுக்குப் படிக்க உதவும். அது சரி, நல்லாத்தானேப் போய்க்கிட்டிருக்கு ;)//

நல்லாத்தானேப் போய்க்கிட்டிருந்துச்சு

காமராஜ் said...

Blogger வானம்பாடிகள் said...

// பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//

இதுக்கு மீள்குத்து விழுமே பர்வால்ல்லியா:))

oohh. super baala...

அத்திரி said...

//மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்....
//

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,...........கிகிகி......

மதன்செந்தில் said...

இவ்ளோ மொக்கை போட்டும் உங்களுக்கு மொக்கை தளபதின்னு யாரும் பட்டம் தரலையா..

www.narumugai.com

செ.சரவணக்குமார் said...

// வானம்பாடிகள் said...

என்னதான் சிங்கை சிங்கம் குடுத்த கேமரால எடுத்தாலும் நேரா எடுத்த போட்டோல மண்டைதான் தெரியுதுன்னு செவப்பு பனியன், பச்ச சட்டைல சைட் போஸ் கொடுக்கிற போங்கு கூட புடிக்கலை.//

இதுதாங்க ரொம்பப் பிடிச்சிருக்கு.

செ.சரவணக்குமார் said...

//இஃகிஃகி......

மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்....//

நடத்துங்க தல‌..

க ரா said...

என்ன வானாம்பாடிகள் ஐயா இதுக்கு இன்னும் எதிர் இடுக்கை போடாம இருக்கறாரு. எப்படிங்கனா இந்த மாதிரி மொக்கையெல்லாம். ஆபிஸ்ல ஒக்காந்து சூப்பரா யோசீக்கிறீங்க :-).

butterfly Surya said...

பிடிக்கலைன்னு சொன்ன இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு..

ராமலக்ஷ்மி said...

:)))))))))))))!

நல்லா எண்ணிப் பார்த்துக்குங்க. 13 ஸ்மைலி இருக்கும்.

எல் கே said...

veetla ammani padichacha ithai

நிலாமதி said...

நானும் வாசித்து சிரிச்சணுங்க

அனு said...

மீள் இடுகை போட்டதால தானே எங்களை மாதிரி மக்களால எல்லாம் படிக்க முடிஞ்சது.. இடுகை + பின்னூட்டங்கள் எல்லாமே சூப்பர்..

//இஃகிஃகி//
ஆமா, இதை எப்படி pronounce பண்ணனும்?? இஃகிஃகி-னா?

பழமைபேசி said...

யாராவது, பிடித்த பத்துன்னு போடுங்க... அது ஏற்கனவே போட்டாச்சுன்னா, பிடித்தும் பிடிக்காத பத்து போடுங்க...இஃகிஃகி!!

Kousalya Raj said...

மீள் இடுகைனாலும் நான் இப்பதான் படிக்கிறேன். நல்லா எழுதுறீங்க. பாராட்டுகள்

Kumky said...

இன்னிக்கு

சவிக்கிள்ள, பைக்குல, கார்ல , பச்சுல , லாரில , ப்ளைட்ல , கப்பல்ல...........
யாரும் குறுக்க வரலியாக்கும்.

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
oohh. super baala...//

அவரு சூப்பர் டூப்பர் பாலாங்க

//அத்திரி said...

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,...........கிகிகி......//

பிடிக்கட்டும்...பிடிக்கட்டும்


//மதன்செந்தில் said...

இவ்ளோ மொக்கை போட்டும் உங்களுக்கு மொக்கை தளபதின்னு யாரும் பட்டம் தரலையா..//

சீக்கிரம் குடுங்கப்பா... அப்படியே ஒரு பாராட்டு விழாவும்


//செ.சரவணக்குமார் said...
இதுதாங்க ரொம்பப் பிடிச்சிருக்கு.
நடத்துங்க தல‌..//

இருக்கட்டும்...இருக்கட்டும்

//இராமசாமி கண்ணண் said...
என்ன வானாம்பாடிகள் ஐயா இதுக்கு இன்னும் எதிர் இடுக்கை போடாம இருக்கறாரு.//

போட்ட்ட்ட்டுட்டாருங்க

இப்ப சந்தோசமா?

//எப்படிங்கனா இந்த மாதிரி மொக்கையெல்லாம். ஆபிஸ்ல ஒக்காந்து சூப்பரா யோசீக்கிறீங்க :-).//

அதுவ்வ்வ்வ்வ்வா வர்றதுங்


//butterfly Surya said...
பிடிக்கலைன்னு சொன்ன இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு..//

சந்தோசம்ங்னா

//ராமலக்ஷ்மி said...

:)))))))))))))!//

நல்லா எண்ணிப் பார்த்துக்குங்க. 13 ஸ்மைலி இருக்கும்.//

எண்ணிட்டேனுங்க

ஆனா,
கண்ணு வலிக்குதுங்க


//LK said...
veetla ammani padichacha ithai//

எப்பவோ....

//நிலாமதி said...
நானும் வாசித்து சிரிச்சணுங்க//

நல்லாச் சிரிச்சீங்

//அனு said...
மீள் இடுகை போட்டதால தானே எங்களை மாதிரி மக்களால எல்லாம் படிக்க முடிஞ்சது.. இடுகை + பின்னூட்டங்கள் எல்லாமே சூப்பர்..//

ஆஹா

// ஆமா, இதை எப்படி pronounce பண்ணனும்?? இஃகிஃகி-னா?//

அப்படியே

//பழமைபேசி said...
யாராவது, பிடித்த பத்துன்னு போடுங்க... அது ஏற்கனவே போட்டாச்சுன்னா, பிடித்தும் பிடிக்காத பத்து போடுங்க...இஃகிஃகி!!//

மாப்பு சொன்னதுக்காக,
சீக்கிரம் போடுங்கப்பா

//Kousalya said...
மீள் இடுகைனாலும் நான் இப்பதான் படிக்கிறேன். நல்லா எழுதுறீங்க. பாராட்டுகள்.//


//கும்க்கி said...
இன்னிக்கு
சவிக்கிள்ள, பைக்குல, கார்ல , பச்சுல , லாரில , ப்ளைட்ல , கப்பல்ல...........
யாரும் குறுக்க வரலியாக்கும்.//

அண்ணே.. பத்து கேள்வி அனுப்பறேன் ஒரு பேட்டி கொடுங்களேன்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அத்தனையும் சரி - ஜாதகம் - பசை இங்க் சூப்பர் - பெளெக்ஸ் பானெர் - விசிட்டிங்கார்டு - ரப்பர் ஸ்டாம்பு - ஆகா ஆகா - இதெல்லாம் செய்யலாம் போல இருக்கே

நல்லாருக்கு கதிர் - நல்வாழ்த்துகள் கதிர்

நட்புடன் சீனா

விக்னேஷ்வரி said...

:)

Jackiesekar said...

பதிவுலகத்தை கரைச்சி குடிச்ச பதிவுலக சிங்கம் கதிருக்கு வாழ்த்துக்கள்..

vasu balaji said...

ஜாக்கி சேகர் said...

/பதிவுலகத்தை கரைச்சி குடிச்ச பதிவுலக சிங்கம் கதிருக்கு வாழ்த்துக்கள்..//

இதுக்குத்தான் ஃபோட்டோ மாத்துங்க கதிர்னா கேட்டாத்தானே. ஜாக்கி பாருங்க பிடரிலதான் முடியிருக்குன்னு சிங்கம்னு சொல்லிட்டு போறாரு.

ஹேமா said...

கதிர்...எத்தனை தரம்தான் மீள்பதிவுன்னாலும் சில பதிவுகள் போடுறப்போ இருக்கிற சந்தோஷமே தனிதான்.அது அந்த நேரத்தில புதுசுதான் !

settaikkaran said...

படிக்கும்போது சிப்பு சிப்பா வந்திச்சு. ஏன்னா, நிறைய விஷயங்கள் மேட்ச் ஆச்சு!! :-)

Jerry Eshananda said...

ரசித்தேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடடா அப்படியா...

சீமான்கனி said...

மீள் பதிவா இல்லை இது சிலருக்கு முள் பதிவான்னு தெரியலங்கோ.. நல்லாவே பிடிச்சிருக்கு...கதிர அண்ணே,,,,....

ஜெட்லி... said...

ஹ்ம்ம்.... இந்த இடுகையே எப்போ போட்டாலும்... பொருந்தும்...

தாராபுரத்தான் said...

நிஜமாய் வாழ கனவைத் தின்னு!

சத்ரியன் said...

//இஃகிஃகி......

மீள் இடுகைங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்..//

கதிர்,

நான் தெரியாமத்தான் கேக்கறேன், அதென்ன //இஃகிஃகி..// - உனக்கு
திக்கு வாயா?

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) said...
அத்தனையும் சரி - ஜாதகம் - பசை இங்க் சூப்பர் - பெளெக்ஸ் பானெர் - விசிட்டிங்கார்டு - ரப்பர் ஸ்டாம்பு - ஆகா ஆகா - இதெல்லாம் செய்யலாம் போல இருக்கே//

அண்ணே... இன்னும் நீங்க செய்யலையா

//விக்னேஷ்வரி said...

:)//

அட சத்தமா சிரிங்கக்கா


//ஜாக்கி சேகர் said...
பதிவுலகத்தை கரைச்சி குடிச்ச பதிவுலக சிங்கம் கதிருக்கு வாழ்த்துக்கள்..//

அனுஷ்கா பேரு போடமா படிக்க வந்த ஜாக்கி சிங்கமே வருக வருக


//வானம்பாடிகள் said...
இதுக்குத்தான் ஃபோட்டோ மாத்துங்க கதிர்னா கேட்டாத்தானே. ஜாக்கி பாருங்க பிடரிலதான் முடியிருக்குன்னு சிங்கம்னு சொல்லிட்டு போறாரு.//

பொறாஆஆஆஆஆஆமை


//ஹேமா said...

கதிர்...எத்தனை தரம்தான் மீள்பதிவுன்னாலும் சில பதிவுகள் போடுறப்போ இருக்கிற சந்தோஷமே தனிதான்.அது அந்த நேரத்தில புதுசுதான் !//

என்னமோ ஆறுதல் சொல்றீங்க...ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க


//சேட்டைக்காரன் said...
படிக்கும்போது சிப்பு சிப்பா வந்திச்சு. ஏன்னா, நிறைய விஷயங்கள் மேட்ச் ஆச்சு!! :-)//

நீ என் இனமடா.... வா.. வந்து கட்டிக்கோ

//ஜெரி ஈசானந்தன். said...
ரசித்தேன்.//

நல்லதுங்க ஜெரி


//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அடடா அப்படியா...//

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியே


//seemangani said...
மீள் பதிவா இல்லை இது சிலருக்கு முள் பதிவான்னு தெரியலங்கோ..//

ஏஏஏஏஏஏன் செல்லம்... இந்த உள்குத்து நல்லாத்தானே போயிட்ருக்கு

//நல்லாவே பிடிச்சிருக்கு...கதிர அண்ணே,,,,....//
இஃகிஃகிஃகி... டேங்ஸ் கனி


//ஜெட்லி said...
ஹ்ம்ம்.... இந்த இடுகையே எப்போ போட்டாலும்... பொருந்தும்...//

இன்னொருவாட்டி போட்ருவோம்


//தாராபுரத்தான் said...

நிஜமாய் வாழ கனவைத் தின்னு!//

ஏனுங்ணே என்ன்னாச்சுங்


//சத்ரியன் said...
உனக்கு திக்கு வாயா?//

மனுச வாயிதான்யா

smart said...

இப்படியும் பதிவர்கள் இருக்கிறார்கள் என காட்டிக் கொடுத்ததற்கு நன்றிகள்

Mahi_Granny said...

எனக்கு பிடித்திருந்தது. மீள் இடுகை என்றபோதிலும் .

அன்புடன் அருணா said...

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,...........கிகிகி!!

கே. பி. ஜனா... said...

அட நல்லாத்தான் இருக்கு!

சாமக்கோடங்கி said...

பிடிச்சிருக்கு..

Thenammai Lakshmanan said...

வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.//

மூணுதானே பார்த்து இருக்கோம் கதிர்.. மிச்சம் எங்கே..?

அன்புடன் நான் said...

இதுக்குதான்.... அதா?