மூன்று முடிச்சு

ரெல்லாம் ஒரே பேச்சு, எங்கும் நடக்காத அதிசயம். இப்படியும் நடக்குமா? என ஆளாளுக்கு பேசிக்கொண்டார்கள். அந்தச் செயல் ஒவ்வொரு பகுதியாக பரவிக் கொண்டேயிருந்தது. அந்தச் செய்தியை காசாக்க ஊடகங்கள் போட்டி போட்டன. 

அந்த நகரத்தின் தலைவரிடம் அந்த செய்தி உண்மையா எனக் கேட்ட போது, ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், ஆனால் உண்மைதானா என உறுதியாகத் தெரியவில்லை என்றார். 

அந்த வீதியில் இருக்கும் மற்ற மனிதர்களிடம் விசாரித்த போது அவர்களும் அது உண்மை போல்தான் தோன்றுகிறது என்றார்கள். 

கடைசியா அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணை விசாரித்த போது ஆமாம் உண்மைதான் என ஒப்புக்கொண்டார். 

அந்த செய்தி “ஒரு பெண் நாயை திருமணம் செய்து கொண்டார்” என்பதே.. 

ஆச்சரியுமும் அதிர்ச்சியும் தாக்க அந்த பெண்ணிடமே “இது உனக்கே நல்லாயிருக்கா?, போயும் போயும் ஒரு நாயைக் கல்யாணம் பண்ணியிருக்கியே, அப்படி என்னதான் காரணம் ஒரு நாயைக் கல்யாணம் செய்ய?என கேட்டார்கள். 

அமைதியான, அழுத்தமான புன்னகையோடு காரணங்களைச் சொன்னாள் அந்த பெண்மணி......


* நான் திருமண செய்த நாளன்று இந்த நாய் எப்படி அன்பாக வாலாட்டியதோ, அது போலவே, வாழ்நாள் முழுதும் என்னிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும்.

* எந்த உணவைப் போட்டாமலும் லொள்ளு பேசாமல் சாப்பிட்டுக் கொள்ளும், தினமும் ஒரே உணவைப் போடுகிறாயே என்றோ, ஏன் அத சமைக்கலை, இத சமைக்கலை என்று ஒரு போதும் சண்டைக்கு வராது


* தண்ணியடித்து விட்டு, ஃபுல் மப்பில், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒரு போதும் கதவைத்தட்டாது.


பொறுப்பி: சொந்தச் சரக்கல்ல, ஒரு கூட்டத்தில் கேட்ட மொழிமாற்றுக்கதை. 
__________________________________________________

52 comments:

ரோகிணிசிவா said...

superb explanations,
she forgot to add dog is faithfull too

Radhakrishnan said...

அடடா! எப்படியெல்லாம் பெண்கள் தரம் இழந்து போகிறார்கள். ;)

vasu balaji said...

ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி

ரோகிணிசிவா said...

//சொந்த சரக்கு அல்ல ,,,,,//

யோசிக்க வைக்குதே ,
சரி அது அவங்க நேத்து சொல்லிட்டு இருந்தது தானே ,
"அவங்க" என்பது "MRS.KATHIR",என பொதுசனம் நினைத்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லைங்க!!!

பனித்துளி சங்கர் said...

//////முதல் காரணம்:
இந்த நாய் நான் திருமண செய்த நாளன்று எப்படி அன்பாக வாலாட்டியதோ, அது போலவே, வாழ்நாள் முழுதும் என்னிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும்./////


உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் .

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//

அதானே...

வாழ்நாள் ஃபுல்லா வாலாட்டறது மட்டும்தான் புருஷனோட வேலையா?

2. நாய் துணித்தொவச்சிப்போடுமா?
3. நாய் பெட் காபி போட்டுக்கொடுக்குமா?
4. நாய் பட்டுப்பொடவ, நெக்லஸ் எடுத்துக்கொடுக்குமா?

இப்டி நெறைய கேட்கலாம்... பட்........

நிஜமா நல்லவன் said...

:)

ரோகிணிசிவா said...

@V.Radhakrishnan said...
//அடடா! எப்படியெல்லாம் பெண்கள் தரம் இழந்து போகிறார்கள். ;)//

“ஏனுங்னா... அது மொக்கை... சுட்ட கதைன்னுகூட உங்களுக்குத் தெரியலையா...;(

நிஜமா நல்லவன் said...

/ பொறுப்பி: சொந்தச் சரக்கல்ல, ஒரு கூட்டத்தில் கேட்ட மொழிமாற்றுக்கதை. /

அண்ணே....மொழி மாற்றும் போது கதையையும் சேர்த்து மாத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்:))

ஈரோடு கதிர் said...

//ரோகிணிசிவா said...
she forgot to add dog is faithfull too//

கத சொன்னவரு அந்த மேட்டர சொல்லலையே

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//

ஏங்கண்ணே பாலாசிக்கு எதுவும் பொண்ணுபாக்குறாங்களா?

ஈரோடு கதிர் said...

// V.Radhakrishnan said...
அடடா! எப்படியெல்லாம் பெண்கள் தரம் இழந்து போகிறார்கள். ;)//

அப்படிப்போடு அருவாள...

அடேய்.. கதிரு... இனிமே மொக்கை எழுதுவியா!!? எழுதுவியா!!!? எழுதுவியா!!!!!!?

ஈரோடு கதிர் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் .//

நெனைக்கவெல்லாம் வேணாம் சங்கர்...

ஈரோடு கதிர் said...

//நிஜமா நல்லவன் said...
அண்ணே....மொழி மாற்றும் போது கதையையும் சேர்த்து மாத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்:))//

க்க்கும்... அட நீங்க வேற..... அந்த அளவுக்கு நமக்கெங்கே இருக்குது... கதை சொன்னவர் வேணா மாத்தியிருக்கலாமுங்க

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அதானே...

வாழ்நாள் ஃபுல்லா வாலாட்டறது மட்டும்தான் புருஷனோட வேலையா?

2. நாய் துணித்தொவச்சிப்போடுமா?
3. நாய் பெட் காபி போட்டுக்கொடுக்குமா?
4. நாய் பட்டுப்பொடவ, நெக்லஸ் எடுத்துக்கொடுக்குமா?

இப்டி நெறைய கேட்கலாம்... பட்........//

தம்பி நமக்கெதுக்கு வம்பு... கல்யாணம் ஆகுறவரைக்கும் கொஞ்சம் வால சுருட்டி வைப்போம்

நிஜமா நல்லவன் said...

கதிர் அண்ணே...இதெல்லாம் ரொம்ப அநியாயம்....நாயை அடிச்சா குலைக்கும்....கடிக்கும்.....நாம எல்லாம் அப்படியா......ஏகப்பட்ட உள்காயம்....வெளிகாயத்தோட ஊமையா தானே போயிட்டு இருக்கோம்...:))

ஈரோடு கதிர் said...

//நிஜமா நல்லவன் said...
இதெல்லாம் ரொம்ப அநியாயம்....நாயை அடிச்சா குலைக்கும்....கடிக்கும்.....நாம எல்லாம் அப்படியா......ஏகப்பட்ட உள்காயம்....வெளிகாயத்தோட ஊமையா தானே போயிட்டு இருக்கோம்...:))//

அய்ய்ய்யோ ... நீங்களூமா?

பாலாசி... நோட் திஸ் பாயிண்ட்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//

இதுவும் நல்லாவே இருக்குங்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//

I like this..

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
தம்பி நமக்கெதுக்கு வம்பு... கல்யாணம் ஆகுறவரைக்கும் கொஞ்சம் வால சுருட்டி வைப்போம்//

என்னாது.... 60ம் கண்ணாலம் ஆகுறவரைக்குமா..... நான் இன்னும் 20ம் கண்ணாலமே பண்ணலைங்க.....

Radhakrishnan said...

@ ரோஹினி சிவா “ஏனுங்னா... அது மொக்கை... சுட்ட கதைன்னுகூட உங்களுக்குத் தெரியலையா...;(//

நாங்களும் கண்ணடிச்சி தானே மொக்கையா சொன்னோம் தங்கச்சி :)

@ ஈரோடு கதிர் //''அப்படிப்போடு அருவாள...

அடேய்.. கதிரு... இனிமே மொக்கை எழுதுவியா!!? எழுதுவியா!!!? எழுதுவியா!!!!!!//

ஹா ஹா! எழுதுங்க, எழுதுங்க. என்னை மாதிரி மொக்கையா நினைக்கிறவங்களும் இருப்பாங்கள :)

நிஜமா நல்லவன் said...

ரோகிணிசிவா said...

superb explanations,
she forgot to add dog is faithfull too/

எவ்ளோ பூரிக்கட்டை உடைஞ்சி வீட்டில இருக்குன்ற உண்மைய இதுவரைக்கும் வெளில சொன்னதே இல்ல....நாங்க மட்டும் faithfull இல்லையா????

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
என்னாது.... 60ம் கண்ணாலம் ஆகுறவரைக்குமா..... நான் இன்னும் 20ம் கண்ணாலமே பண்ணலைங்க.....//

உன்ன...உன்ன... உன்ன சொன்னேன்

ஈரோடு கதிர் said...

// ச.செந்தில்வேலன் said...

// I like this..//

// இதுவும் நல்லாவே இருக்குங்..//

கல்யாணம் ஆனாவே மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி டபுள் டபுள் டைம் சொல்றாங்கப்பா!!!

ஹேமா said...

கதிர்...தமாசு என்று எழுதிட்டீங்க.
சென்ற 4 நாடக்ளுக்கு முன்னம் ஜேர்மனியில் இதேபோல ஒருவர் உண்மையிலேயெ தான் வளர்த்த பூனைக்குட்டியத் திருமணம் செய்துகொண்டார்.//

பூனையை மணம்முடித்த மனிதர்!!
********************************

மழைக்காக பிரார்த்தனை செய்து அல்லது வேறு வினோதமான நோக்கங்களுக்காக ஆடு, பாம்பு போன்ற விலங்குகளை திருமணம் செய்து கொள்வது பற்றி படித்திருக்கிறோம். ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் தான் வளர்க்கும் குண்டான பூனையை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாராம். அந்த பூனையை

எப்போதும் கொஞ்சி மகிழ்வது தனது வழக்கம் என்றும், இரவில் கூட பூனை தன்னோடு படுத்துத் தூங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாசமாக வளர்த்து வரும் அந்த பூனையை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். விலங்குகளை திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடம் இல்லாததால் ரகசியமாக இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறாராம்.
மாமூலான திருமணம் போலவே மணமக்களுக்கு திருமண ஆடை அணிவிக்கப்பட்டு இந்த திருமண வைபவம் நடைபெற்றதாம்.

http://paadumeen.blogspot.com/2010/05/blog-post_239.html#more

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

சத்ரியன் said...

//இப்டி நெறைய கேட்கலாம்... பட்......//

கொஞ்சம் பொருங்கப்பா, தம்பி வந்துட்டிருக்கேன் இல்ல...

5.பண்டிகை காலத்துல துணியெடுக்கப் போனா, கடை வாசல்ல வந்து “நாயா”
காத்துக்கிட்டிருக்குமா?

6.தப்பித் தவறி புள்ள குட்டி பெத்துக்கினா தோள்ள வெச்சி தூக்கிட்டு போகுமா?

பிந்தொடர நான் அழைப்பது “சிங்கை சிங்கத்தை”

பிரபா, நீ என்ன சாமி பண்ணிக்கிட்டிருக்கே..?

vasu balaji said...

ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?

காமராஜ் said...

எழுத்தாளர்பிரபஞ்சன்,எங்கள் ஆசான் மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஏ.பி,எழுத்தாள்ர் எஸ்.ராமகிருஷ்ணன்
இந்த மூன்றுபெரும் இந்தக்கதையை மேடையில் பேசக்கேட்டிருக்கிறேன்.எழுத்தில் அற்புதமாக கொண்டுவந்துவிட்டீர்கள் தோழா.அருமை.

ஈரோடு கதிர் said...

//ஹேமா

சென்ற 4 நாடக்ளுக்கு முன்னம் ஜேர்மனியில் இதேபோல ஒருவர் உண்மையிலேயெ தான் வளர்த்த பூனைக்குட்டியத் திருமணம் செய்துகொண்டார்.//

இஃகிஃகி...
நல்லாயிருக்கட்டும்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்

ஈரோடு கதிர் said...

//’மனவிழி’சத்ரியன் said...
5.பண்டிகை காலத்துல துணியெடுக்கப் போனா, கடை வாசல்ல வந்து “நாயா” காத்துக்கிட்டிருக்குமா?

6.தப்பித் தவறி புள்ள குட்டி பெத்துக்கினா தோள்ள வெச்சி தூக்கிட்டு போகுமா?//

அய்யோ, இந்தப் பயபுள்ள ரவுசு தாங்கலையே

// பிந்தொடர நான் அழைப்பது “சிங்கை சிங்கத்தை”
பிரபா, நீ என்ன சாமி பண்ணிக்கிட்டிருக்கே..?//

சிங்கம் மாமா பொறந்த நாளுக்கு.. இந்தோனேசியாவுல கொண்டாட போயிடுச்சோ என்னவோ?

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?//

இது எதுக்குங்கய்யா? எனி உள்குத்தூஸ்

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
எழுத்தாளர்பிரபஞ்சன், எங்கள் ஆசான் மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஏ.பி,எழுத்தாள்ர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த மூன்றுபெரும் இந்தக்கதையை மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். //

மிக்க நன்றி...
இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. சென்ற ஆண்டு எங்கள் கூட்டத்தில் திரு. பிரபஞ்சன் அவர்கள்தான் இந்தக் கதையைச் சொன்னார்.

தங்களுக்கும், பிரபஞ்சன் அவர்களுக்கும் நன்றிகள்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/இது எதுக்குங்கய்யா? எனி உள்குத்தூஸ்/

இந்த ரவுசு தானே வேணாங்கறது. போலீஸ்காரன் அடியும் பொண்டாட்டி அடிக்கிற அடியும் வெளிய தெரிஞ்ச வரலாரு இருக்கா?

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ஏம் பாலாசி! குரைச்சா திருப்ப குரைக்குமே பரவால்ல்ல்ல்லயாமா?//

அதுகூட பரவாயில்லையே... கண்ணாபின்னான்னு கண்டமேனிக்கு கடிச்சில்ல வச்சிடும்....

//வானம்பாடிகள் said...
இந்த ரவுசு தானே வேணாங்கறது. போலீஸ்காரன் அடியும் பொண்டாட்டி அடிக்கிற அடியும் வெளிய தெரிஞ்ச வரலாரு இருக்கா?//

அதெப்படி.... சும்மா கும்முன்னு கும்முன்னு குனியவச்சி குத்தினாலும் வெளிய மூச்சே வராதே.....

dheva said...

கதிர் சார்....மனுசன் தப்பிச்சுட்டான்.....பாவம் நாய் மாட்டிக்கிடுச்சே.....! ஹா...ஹா....ஹா! வாழ்த்துக்கள்

பத்மா said...

விளையாட்டுனாலும் கஷ்டமா இருக்கு .தாம்பத்தியம் என்பது எத்தனை உசத்தி?

r.v.saravanan said...

நான் திருமண செய்த நாளன்று இந்த நாய் எப்படி அன்பாக வாலாட்டியதோ, அது போலவே, வாழ்நாள் முழுதும் என்னிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும்

ha...ha...

*இயற்கை ராஜி* said...

:-)))))

ஈரோடு கதிர் said...

நன்றி @@ dheva

நன்றி @@ padma
(((((:

நன்றி @@ r.v.saravanan

நன்றி @@ இயற்கை ராஜி*

தேவன் மாயம் said...

நான் ஒன்னும் சொல்லவில்லை!! எல்லாம் முடிந்துவிட்டது!!!!!!!!!

Thenammai Lakshmanan said...

ம்கும். நாய் ஆஃபீஸ் போகுமா? சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்குமா?மிச்சம் நீ பார்த்துக்க பாலாசி//


ஹா ஹா ஹா நானும் ஒண்ணும் சொல்றதுக்கில்லை ...எல்லாரும் சொல்லிட்டாங்க...கதிர்

வால்பையன் said...

ஏழு வருசத்துக்கு முன்னாடி இந்த கதையை என் பொண்டாட்டி படிச்சிருந்தா என் கதி என்னாகுறது!

Chitra said...

ஒரே stupid of the nonsense of the idiot of the கதை - எந்த மொழியாய் இருந்தாலும். ஹா,ஹா,ஹா,ஹா....

Madumitha said...

தப்பிச்சான்
ஒரு மனுஷன்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தேவன் மாயம்

நன்றி @@ thenammai

நன்றி @@ வால்பையன்
//ஏழு வருசத்துக்கு முன்னாடி இந்த கதையை என் பொண்டாட்டி படிச்சிருந்தா என் கதி என்னாகுறது!//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

நன்றி @@ Chitra
//stupid of the nonsense of the idiot of the கதை//

ஹை... இது நல்லாயிருக்கே

நன்றி @@ Madumitha
சித்ராக்கா இந்த மதுமிதாவ என்னன்னு கொஞ்சம் கேளுங்க

சீமான்கனி said...

//தண்ணியடித்து விட்டு, ஃபுல் மப்பில், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒரு போதும் கதவைத்தட்டாது.///

:)))))))))....

கல்யாணத்துக்கு பின்தான் சிலரின் விஸ்வரூபம் தெரியுமாம் அம்மணிகிட்ட சொல்லுங்க....

கலகலப்ரியா said...

இப்டித்தான் கிறிஸ்துவுக்கு முன்.. அர்ர்.. இருக்கட்டு நான் அப்பால கண்டுக்கறேன்..

Anonymous said...

என்னத்த சொல்ல அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே..... ஏன் கதிர் நீங்க எழுத கதையா இல்லை?

செந்தில்குமார் said...

லொள்...லொள்...லொள்....

நல்லாவே குரைக்குது உங்கள் இடுகை

இன்னும் எதிர்பார்க்கிறேன் கதிர்

Thamira said...

நிஜ பத்திரிகைச் செய்தி மாதிரியே ஆரம்பித்து என்ன விளையாட்டு இது.? :-)