பகிர்தல் (17.05.2010)துண்டுச் சீட்டு

தனியார் பள்ளிகள் புத்திசாலித்தனமாக, அடுத்த ஆண்டின் முதல் பருவக் கட்டணத்திற்கான ஓலை கொடுத்து, அதற்கான கெடு விதித்து பல பெற்றோர்களை ஏற்கனவே பணம் செலுத்த வைத்துவிட்டன. இந்நிலையில் தமிழக அரசு, இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என புதிய கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கட்டணத்தை அறிவிக்கவிருந்த அரசாங்கம், தாங்கள் அறிவிக்கும் வரை, எந்த பள்ளிகளும் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று ஆணையை ஏன் பிறப்பிக்கவில்லை?. கட்டணத்தை வாங்கிய பள்ளிகள் நிச்சயமாக தாங்கள் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தருவார்களா? இன்னும் சில பள்ளிகளில் செலுத்தும் கட்டணத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ரசீதும், மீதித் தொகைக்கு துண்டுச் சீட்டும் தருவார்களாம்.


ஈர்க்கும் வெள்ளை

தமிழனால் கோயில் கட்டிக் கும்பிடப்பட்ட அந்த நடிகை, வண்ணமயமாக, ஆளும்கட்சியில் இணைந்த கையோடு, அமைச்சர்கள் முன்னிலையில் அளித்த பேட்டியை ஆங்கிலத்தில் வழங்கி பெருமைப் படுத்தினார். செம்மொழி மாநாடு குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசும் போதும் கூட ஆங்கிலத்தை மிக அதிக அளவில் பார்க்க முடிகிறது. வெள்ளத் தோலுனாலும் சரி, வெள்ளக்காரன் மொழியினாலும் சரி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது போலும்.


படியும் கரி

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துரையாடும் போது, ஒரு போக்குவரத்துக் காவலர் சொன்ன வலியான செய்தி நெரிசல் மிகுந்த சந்திப்பில், பகல் நேரங்களில் பணியாற்றிவிட்டு ஓய்வறைக்குச் சென்று ஒரு வெள்ளைக் காகிதத்தை விரித்து, சட்டையைக் கழற்றி உதறினால், காகிதத்தில் கரித்துகள்கள் படிவதை கண்கூடாக பார்க்க முடியும், அந்தக் கரித்துகளையே நாங்கள் தினம் தோறும் பல மணிநேரம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

கொதிக்கும் கோடையின் மதியங்களில் அலையலையாய் அடிக்கும் வெப்ப அலையில் காய்ந்து கருகும், போக்குவரத்துக் காவலர்களைக் காணும் பொழுதெல்லாம் கண்ணுக்குள் அந்த கரித்துகள்கள் உதிர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அழகும், அழுக்கும்

கோவை நோக்கும் அனைத்துச் சாலைகளில் புத்தம் புதிய தாழ்தள அரசுப் பேருந்துகளும், மரங்களை சிரைத்து மொட்டையடிக்கப்பட்ட நகர சாலைகளும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டிய புதிய அடையாளங்களாக  கோவையில் மாறியிருக்கின்றன.
அதிக குழந்தைகளின் தவிர்க்க முடியாத புகலிடமாகப் போன ஆங்கிலப் பள்ளிகளில், குழந்தைகள் தாய் மொழி தமிழில் பேசுவது குற்றம் என தண்டனை வழங்கப்பட்டு வரும் நேரத்தில், நகரையும், பேருந்தையும் இன்னபிறவற்றையும் அழகு படுத்த பலகோடி செலவு செய்து ஒரு மாநாட்டை நடத்துவது மட்டும் தாய்மொழி மீது புதிய ஆர்வத்தை எப்படி ஊட்டும் எனத் தெரியவில்லை.

 

இளவேனில் - வலைப்பக்கம்

வலிமையாக, அழுத்தமா மனதில் பதியும் வண்ணம் தனது இளவேனில்.. வலைப்பக்கத்தில் எழுதிவருபவர் பதிவர் தமிழ்நதி. சமீபத்தில் அவர் எழுதிய காணக் கிடைக்காத யாழ்ப்பாணம் படித்த பின், அதிலிருந்து மீண்டு வர நெடு நேரம் ஆனது. அன்னிய வாசம் படியும் யாழ்பாணத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை வலியோடு பதிவு செய்திருக்கிறார். வாசிக்க வாசிக்க மனம் கனத்தது.

கதறியழும் போது சிந்தும் கண்ணீர்த் துளியை படம் பிடிப்பவனாய் அந்த எழுத்தையும் மனசு வலியோடு ரசித்தாலும், தொடர்ந்து ஒரு வலியை மனதிற்குள் தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது அந்த இடுகை

________________________________

35 comments:

dheva said...

உண்மைதான் கதிர்....காவலர்கள் என்றாலே...ஏளனம் செய்யும் நமது மக்களுக்கு அவர்களின் வேறு முகங்கள் தெரிவதில்லை....! நிஜமாகவே நெஞ்சம் தொட்டது " படியும் கரி"

சூப்பர்!

vasu balaji said...

ஒரு வேளை சீர்திருத்த தமிழ் படிச்சிப்பாங்களோ? அல்லது இவங்க பேசுற தமிழ்தான் தமிழ்னு சீர் திருத்துவாய்ங்களோ? தமிழ்நதி நானும் படித்தேன். தமிழுக்காக போராடியவர்களை ரத்தத்தில் மிதக்கவிட்டதில் பங்கு பற்றியதால் செம்மொழியின் அர்த்தம் மாறினாலும் தகும்! போங்க ஐயா:((

மணிஜி said...

வாங்கி(உள்) கொண்டேன் கதிர்

யாசவி said...

நன்றாக இருந்தது தோழர்

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு

பத்மா said...

எல்லாமே நல்ல கருத்துக்கள்.
TRAFFIC POLICE பற்றிய இரக்கம் எப்போதுமே மனதில் உண்டு .அவர்களும் மனிதர்கள் தானே ?

பள்ளிகள் வாங்கிய பணம் திரும்ப கிடைக்குமா? பதில் நிதர்சனம்

வலைபக்க அறிமுகத்திற்கு நன்றி .படிக்கிறேன்

VELU.G said...

//எந்த பள்ளிகளும் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று ஆணையை ஏன் பிறப்பிக்கவில்லை?. கட்டணத்தை வாங்கிய பள்ளிகள் நிச்சயமாக தாங்கள் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தருவார்களா?
//

நல்ல கேள்விகள் தான் பதில் தான் இல்லை

1ந்தேதி பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

VELU.G said...

//எந்த பள்ளிகளும் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று ஆணையை ஏன் பிறப்பிக்கவில்லை?. கட்டணத்தை வாங்கிய பள்ளிகள் நிச்சயமாக தாங்கள் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தருவார்களா?
//

நல்ல கேள்விகள் தான் பதில் தான் இல்லை

1ந்தேதி பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

சத்ரியன் said...

கதிர்,

குன்றாத ஒளியுடன்... பகிர்வு.

Anonymous said...

நல்ல பகிர்வு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஏன் கதிர்? இங்கு யாருக்கு எதுதான் தெரியாது? எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாதது போல் வாழ நாம் நன்றாகப் பழகிவிட்டோம். வாழ்க சனநாயகம்!

-ப்ரியமுடன்
சேரல்

சுதர்ஷன் said...

// செம்மொழி மாநாடு குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசும் போதும் கூட ஆங்கிலத்தை மிக அதிக அளவில் பார்க்க முடிகிறது//.

என்ன செய்வது ...
உண்மைத்தமிழர்களையும் அவரால் பாதுகாக்க முடியவில்லை . தமிழையும் பாதுகாக்க முடியவில்லை போலும் .


காணக்கிடைக்காத யாழ்பாணம் புத்தகம் பற்றிய பகிர்தலுக்கு நன்றி

தனி காட்டு ராஜா said...

//அதிக குழந்தைகளின் தவிர்க்க முடியாத புகலிடமாகப் போன ஆங்கிலப் பள்ளிகளில், குழந்தைகள் தாய் மொழி தமிழில் பேசுவது குற்றம் என தண்டனை வழங்கப்பட்டு வரும் நேரத்தில், நகரையும், பேருந்தையும் இன்னபிறவற்றையும் அழகு படுத்த பலகோடி செலவு செய்து ஒரு மாநாட்டை நடத்துவது மட்டும் தாய்மொழி மீது புதிய ஆர்வத்தை எப்படி ஊட்டும் எனத் தெரியவில்லை.//

இன்றைய உலகம் பொருளாதரத்தின் அடிப்படையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது ........
பொருளாதார ரீதியில் ஏதாவது புதிதாக நாம் சாதித்தோமா என்றால் .....பெரியதாக எதுவும் கிடையாது ........
சரி...டெக்னாலஜி ரீதியாக ஏதாவது புதிதாக நாம் சாதித்தோமா என்றால் .....பெரியதாக எதுவும் கிடையாது ........
நாம் செய்வதெல்லாம் பிழைப்புக்காக டெக்னாலஜி யை எவ்வாறு use செய்வது என கற்று கொண்டு தொழில் செய்து வருகிறோம்........
Train,Bus,Flight இதில் எதனை நாம் கண்டு பிடித்தோம் ........
தமிழை வளர்க்க வேண்டுமானால் புதிதாக நெறைய கண்டுபிடித்து .....தமிழ் -லில் குறிப்புகளை வெளியிடுங்கள் ......தமிழ் வளரும் .......
இந்த கபட வேடதாரிகள் தமிழை வளர்த்து கிழிக்கிறேன் என்று உளறி கொண்டுள்ளார்கள் ..............

சுதர்ஷன் said...

வானம்பாடிகள் said...
//தமிழுக்காக போராடியவர்களை ரத்தத்தில் மிதக்கவிட்டதில் பங்கு பற்றியதால் செம்மொழியின் அர்த்தம் மாறினாலும் தகும்! போங்க ஐயா:(//

உங்கள் கமென்ட் கவலையுடன் ரசிக்க வைக்கிறது ...

☀நான் ஆதவன்☀ said...

பகிர்ந்தமைக்கு நன்றி கதிர்.

க.பாலாசி said...

//அந்தக் கரித்துகளையே நாங்கள் தினம் தோறும் பல மணிநேரம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் கூறினார். //

கஷ்டமாத்தான் இருக்கு... எந்த தொழில்லதான் கஷ்டமில்ல... ஏ.சி.ரூம்ல உட்காந்திருக்குறவன் சுவாசிக்கிற காற்றுலக்கூட அந்த அசுத்த துகள்கள் கலந்திருக்கும்.... இதுல பொதுவெளியில பொழுதுக்கும் நின்னுகிட்டிருக்கிற போலீஸ்காரங்களும் விதிவிலக்கில்லையே....இதுவே இப்டின்னா சாலையோரக்கடைகள், பிளாட்பாரத்துல மற்றும் தள்ளுவண்டியில யாவாரம் பண்றவங்க இப்டி பெரிய லிஸ்டே இருக்குங்க கரித்துகளை சுவாசித்துக்கொண்டே......

//குழந்தைகள் தாய் மொழி தமிழில் பேசுவது குற்றம் என தண்டனை வழங்கப்பட்டு வரும் நேரத்தில், நகரையும், பேருந்தையும் இன்னபிறவற்றையும் அழகு படுத்த பலகோடி செலவு செய்து ஒரு மாநாட்டை நடத்துவது மட்டும் தாய்மொழி மீது புதிய ஆர்வத்தை எப்படி ஊட்டும் எனத் தெரியவில்லை.//

கண்டிப்பா இது ஒருசாரார் மார்தட்டிக்கறதுக்காக பண்ற விசயமே தவிர வேறெந்த மொழிப்பற்றும் மண்ணாங்கட்டியும் கிடையாது........

நேசமித்ரன் said...

நன்றாக இருந்தது கதிர்

நாடோடி இலக்கியன் said...

போக்குவ‌ர‌த்து காவ‌ல‌ர்க‌ள் ப‌ரிதாப‌த்துக்குரிய‌வ‌ர்க‌ள்.சென்னை போன்ற‌ பெரு ந‌க‌ர‌ங்க‌ளில் இன்னும் கொடுமை.

கலகலப்ரியா said...

நல்லா சொல்லுங்க... டமில்மொலி மானாட.. ஐ மீன்.. மாநாடு.. கொடுமைடா சாமீ..

||தமிழனால் கோயில் கட்டிக் கும்பிடப்பட்ட அந்த நடிகை, வண்ணமயமாக, ஆளும்கட்சியில் இணைந்த கையோடு,||

இது என்ன கிசுகிசு எழுதக் கத்துக்கறீங்களாஆ... வாங்கொடுமைடா சாமி.. பேர சொல்லுங்க பேர சொல்லுங்க..

இளவேனில் வாசிக்கணும்..

அகல்விளக்கு said...

// செம்மொழி மாநாடு குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசும் போதும் கூட ஆங்கிலத்தை மிக அதிக அளவில் பார்க்க முடிகிறது//.

என்ன செய்வது ...
உண்மைத்தமிழர்களையும் அவரால் பாதுகாக்க முடியவில்லை . தமிழையும் பாதுகாக்க முடியவில்லை போலும் .//

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

Thenammai Lakshmanan said...

கதறி அழும்போது கூட கண்ணீர்த்துளியைப் படம் பிடிப்பவன்....ம்ம்ம் எல்லாமே வலிதான் கதிர்

க ரா said...

நல்ல பகிர்வு.

Chitra said...

ஒவ்வொரு செய்தியிலும் நாட்டு நடப்பின் அவலங்கள் தெளிவாய்........ ம்ம்ம்ம்...... வேதனையான உண்மைகள்.

மோனி said...

மெளனம் பேசுகிறது...

Paleo God said...

வலிக்கும் பகிர்வு!

Sanjai Gandhi said...

//கட்டணத்தை வாங்கிய பள்ளிகள் நிச்சயமாக தாங்கள் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பித் தருவார்களா? //

ஆசைய பாரு ஆபிசருக்கு.. கட்டணம் பற்றிய உத்தரவையே மதிக்கலையாம்.. இதுல திருப்பித் தரனுமாம்ல..

அம்பிகா said...

நல்ல பகிர்வு.
\\பள்ளிகள் வாங்கிய பணம் திரும்ப கிடைக்குமா?\\
பதில் நிதர்சனம்

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி சார்

Romeoboy said...

வந்த வரை லாபம் என்கிற மனப்பான்மை தான் அவர்களுக்கு இருக்கும்.

ஹேமா said...

நன்றி கதிர்.உங்கள் மூலமாக
"இளவேனில்" பதிவு வாசித்தேன்.

பழமைபேசி said...

வணக்கம்...

அன்புடன் நான் said...

பகிர்தல்.... பகீர்

தமிழ்நதி said...

எனது பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கதிர். வலியின் வடிகால் எழுத்தானது:(