வெட்க வாசனை


இரவு இரண்டு மணி, ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு அலுத்துப்போய் கிளம்பினான் இவன். வழக்கத்திற்கு மாறாய் நான்கு உதை சேர்த்து வாங்கிய பைக்கை விர்ர்ர்ரென விரட்டினான். மதியத்தில் பரபரக்கும் சாலை, குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட நெடும் பயணத்திற்குப் பின் ஜி.எச். நிறுத்தத்தில் அவனை துப்பிவிட்டு போன பேருந்து கக்கிவிட்டுச் சென்ற புகை மட்டும் வாசனையாக மிஞ்சி நின்றது. ஆள் அரவம், ஆட்டோகூட இல்லை. மூனு கிலோ மீட்டர் நடக்கனுமே. முதுகை அழுத்திய பையோடு பெருந்துறை சாலையில் நடக்கத் துவங்கினான் .

இவன் ஜி.எச் கடக்கும் போது, பேண்ட் சர்ட், பேக், ஷூ என லிப்ட் கேட்பவனை ஏனோ தவிர்க்கத் தோணவில்லை. வண்டியை நிறுத்தி, விரைப்பாய் புருவம் உயர்த்தினான்.

சார்! டீச்சர்ஸ் காலனி வரைக்கும்

……ம்

இரண்டு மணி இரவும் கூட கசகசப்பாகவே இருந்தது.

பர்சில் இருந்த இருபத்திநாலாயிரமும், கழுத்தில் கிடக்கும் ஐந்து பவுன் செயினும், அவன் மேல் இனம்புரியா சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி மனதைப் புரட்டியது. அஞ்சு பவுன்னா... அறுபதுக்கு மேல வருமே... கத்தி, எய்ட்ஸ் ஊசி என என்னென்னவோ ஞாபகம் வர வண்டியை வேகமாக முறுக்கினான் இவன்.

இப்படி முறுக்குறானே வண்டியை, நடந்தே போயிருக்கலாமோ, அவசரப்பட்டு ஏறிட்டமோ, வசூல் பணம் நாற்பத்தியேழாயிரமும், காஸ்ட்லி போனும் அடிவயிற்றில் உருவமில்லா ஒரு காற்று உருண்டையை புரள விட்டது. ஓடும் வண்டியில் இருந்து எட்டிக் குதித்து, குட்டிக்கரணம் போட்டு தப்பிப்பது போல் மின்னலாய் ஒரு சினிமாத்தன கற்பனையோடியது அவன் மனதில்.

கேம்.எம்.சி.ஹெச், ரவி தியேட்டர், பழமுதிர்நிலையம், லோட்டஸ் ஷாப்பிங்... கடக்கக் கடக்க மனதில் எதுவோ கரைந்தது.

கலெக்டர் ஆபீஸ் தாண்டும் போது, கொஞ்சம் தெம்பு கூடியது.

“எங்க எறங்கனும்

“டீச்சர்ஸ் காலணி ஸ்டாப்ல விடுங்க சார்

“நான் உள்ளதாம் போறேன்

“அப்ப உள்ளேயே விடுங்க சார்

எந்த வீதி

“சார் தண்ணி டேங்கிட்ட

“தண்ணி டேங்கிட்ட எங்க

“இன்ஸ்பெக்டரம்மா அபார்ட்மெண்ட்ல, நாலாவது மாடி மேல இருக்கிற ரூம் சார்

இறக்கிவிட்டுவிட்டு, ஒட்டியிருந்த அபார்ட்மெண்ட்க்குள் வண்டியை நிறுத்தினான் இவன்.

அந்த வீதி முழுக்க ஏனோ வெட்க வாசனை காற்றில் அடித்தது.

______________________________________________

51 comments:

சத்ரியன் said...

”அவன் - இவன்” -பணம், மனுசன அழிச்சிடுச்சி கதிர்.

எதப்பாத்தாலும், எவனப்பாத்தாலும்...சந்தேகம் தவிர்க்க முடியாததாகி விட்டது.

புலவன் புலிகேசி said...

வெட்க வாசனை அடித்தது..அவர்கள் இருவரால் மட்டுமல்லக் கதிர்..நம் அனைவராலும்...

*இயற்கை ராஜி* said...

நகரங்களின் மிகக் கொடும் சாபங்களில் இதுவும் ஒன்று

Chitra said...

அவனும் இவனும் நமது சமூகத்தில் வெட்கப்பட வேண்டிய சில விஷயங்களை விளக்கி விட்டார்கள்.
Good one!

அகல்விளக்கு said...

நகர வாழ்க்கை கசப்பது இதனால்தானோ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெட்க வாசனை அடித்தது//

super

vasu balaji said...

பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரி வெட்கப் பட நேரிடுகிறது. சக மனிதனுக்கு பயந்து வாழ்வதே வாழ்வாகி விட்டது. புனைவென்றாலும் அப்பட்டமான யதார்த்தம்.

Thenammai Lakshmanan said...

எல்லோரும் நினைப்பது இப்படித்தான்..கதிர்..வெட்க வாசனை..வார்த்தை .புதிதாய் இருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

unfortunate but true

நாடோடி said...

அவ‌ன், இவ‌ன் .... அப்ப‌ட்ட‌மான‌ உண்மை... ந‌ல்லாயிருக்கு சார்..

ஷர்புதீன் said...

:)

தேசாந்திரி-பழமை விரும்பி said...

எல்லோருள்ளும் உள்ள அவன் தான் இவன்...

ஹேமா said...

உண்மையான
வெட்க வாசனைதான் கதிர்.

vasan said...

பார்க்கின்றா, கேட்கின்ற‌,நிக‌ழ்வுக‌ள்,
காட்சிக‌ள், செய்திக‌ளால் ச‌முதாய‌ம்,உருமாறுகிற‌து.
செய்தித்தாள்க‌ளும், தொலைகாட்சிக‌ளும், கிசுகிசுக்க‌ளும்,
வ‌த‌ந்திக‌ளும் அத‌ற்கு பெரிதும் உத‌வுகின்ற‌ன.
உத‌விக‌ளும், தியாக‌ங்க‌ளும், இந்த‌ சுய‌ம் ம‌ட்டும்
போதிக்கும் அந்நிய‌ க‌லாச்சார‌ பாதிப்பில்
ம‌றைந்து போய் விட்ட‌ன‌.
பைக் ப‌ய‌ண‌த்தில், த‌வ‌று ந‌ட‌ந்திருந்திருந்தால்,
நாம் `ஏமாளி` ஆக்கியிருப்போம், அந்த‌ அப்பாவியை.
வெட்க‌ வாச‌னை, தேச‌த்தில், தேக‌த்திலில்லை.

AkashSankar said...

என்னடா அவன்னு அரம்பிகிறாரேன்னு நெனச்சேன்.... கலக்கிடீங்க..

பிரபாகர் said...

அறிமுகமே இல்லாமல் அருகருகே வாழும் இந்த நகரச்சூழலுக்கான வெட்க வாசனை தான் இது. கிராமங்களினுல் தெரியாத ஒரு புது நபர் கூட வரமுடியாது!

பிரபாகர்...

Unknown said...

நகர வாழ்க்கை..

paramasivam.c said...

வெட்க வாசனை .. நகர வேதனை ...சுற்றுபுறம் தெரியாமல் வாழும் வாழ்க்கை வேறு எங்கே?

ரோகிணிசிவா said...

mm m , manusa puthi , kalakalla eluthirkeenga ,

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சக மனிதனை நேசிக்க முடியாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறோம், நாம்! வெட்கம்! வெட்கம்!!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரி வெட்கப் பட நேரிடுகிறது. சக மனிதனுக்கு பயந்து வாழ்வதே வாழ்வாகி விட்டது. புனைவென்றாலும் அப்பட்டமான யதார்த்தம்.

MAY 1, 2010 11:56 AM//

இது புனைவுன்னு நினைச்சது உங்க கற்பனை! இஃகிஃகி!!

dheva said...

மிக்க அருமை கதிர்! வாழ்த்துக்கள்!

settaikkaran said...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதையும், இன்றைய அச்சங்கள் பல அடிப்படையில் விபரீதமான கற்பனைகளின் விளைவு என்பதையும் அழகாய் சொல்லி விட்டீர்கள்.

Unknown said...

//பர்சில் இருந்த இருபத்திநாலாயிரமும், கழுத்தில் கிடக்கும் ஐந்து பவுன் செயினும்//
வெட்க வாசனைக்கு இதுவும் ஒரு காரணம். என்ன செய்வது இன்றைய நிலையில் எல்லோரையும் சந்தேகத்துடன் தான் பார்க்க முடிகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் கதிர். அவன்.. இவன்.. ரெண்டு பேரையும் வைத்து நிதர்சன உண்மையைத் தொட்டுள்ளீர்கள்.

Anonymous said...

தலைப்பு :)))

கருத்து :((

Thamira said...

ரொம்ப ரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்தால் தி பெஸ்ட்டாக வந்திருக்கும். இதைப்போன்ற தொடர் சிந்தனையை உருவாக்கக்கூடிய அதே நேரம் மெல்லிய விஷயங்களை எழுத வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்.

(செய்யறேனான்னா கேட்டா என்ன பண்றது.? ஹிஹி)

காமராஜ் said...

கொஞ்சமாய் யூகிக்கமுடிந்தாலும். சொல்லிய விதம் முற்றிலும் மாறுபட்டது.ரொம்பச்சின்னதா க்யூட்டா,நெத்திப்பொட்ல போட்டிருக்கு, கதை.
அழகு கதிர்.

ராமலக்ஷ்மி said...

இது தவிர்க்க முடியாததாகி விட்டது. நடக்கும் குற்றங்கள் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்பட வைக்கிறது. வெட்க வாசனைதான். தலைப்பும் நடையும் மிக அருமை.

அம்பிகா said...

யதார்த்தம்.
பணத்தை நேசிக்கும் அளவுக்கு சக மனிதனை நேசிக்க முடியவில்லை.

செ.சரவணக்குமார் said...

'வெட்க வாசனை' மிக அருமை.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான கதை - அவன் - இவன் - இருவரின் சிந்தனைகளும் முடிவும் கதையினைக் கொண்டு செல்லும் விதம் - அனைத்துமே நன்று

மிக மிக இரசித்தேன் - வெட்க வாசனை - புதிய சொற்பிரயோகம் - கற்பனை

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Rekha raghavan said...

அருமை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

Kumky said...

:))

எல்லோருக்குள்ளும் எப்போதும் அசைந்துகொண்டிருக்கும் மிருக எண்ணமது...

அனுபவங்கள் தந்த பாடங்கள்..
வேறு வழிகளில்லாமல் ஆக்கிவிட்டது புற வாழ்வு.

எப்போதும் ஏமாற்றப்படாமல் வீடு திரும்புவதே பெரும் ஆயாசமாக இருக்கிறது நிதமும்.

மதிநுட்பங்களால் அளவிட்டுக்கொண்டே இருக்கிறது சதா சர்வ காலமும் புத்தி..

புத்திக்கு தப்பி இறைந்து கிடக்கிறது எங்கெங்கும் அன்பும், ஏக்கமும், பச்சாதாபமும், கழிவிரக்கமும், கோரும் இன்னும் பல நான்”கள்.

'பரிவை' சே.குமார் said...

வெட்க வாசனை அடித்தது..அவர்கள் இருவரால் மட்டுமல்லக் கதிர்..நம் அனைவராலும்...

புலவனின் கருத்தே என் கருத்தும் கதிர் அண்ணா.

இரசிகை said...

pakkaththu veettu manusangalai kooda theriyaamal nakarum.., nakara vaazhkkai ithaithaane solla varreenga?

thalaippukku claps.....:)

vinthaimanithan said...

அழகு...அழகு...
ஆமா பஸ்ல சில்லறைபாக்கி வாங்குறதுக்கு முன்னாடி மனசு தறிகெட்டு நிக்குமே அதை ஃபீல் பண்ணி இருக்கீங்களா?

Paleo God said...

அன்ன்ன்ன்னிக்கி கார்(நின்னு) போனது இன்ன்ன்ன்ன்னிக்குத்தான் இடுகையாச்சா கதிர் சார்? :))

சொல்லிய விதம் அருமை. :))

ஈரோடு கதிர் said...

நன்றி

@@ சத்ரியன்
@@ புலிகேசி
@@ ராஜி
@@ Chitra
@@ அகல்விளக்கு
@@ T.V.R.K
@@ பாலாண்ணே
@@ thenammai
@@ ஆரூரன்
@@ நாடோடி
@@ ஷர்புதீன்
@@ தேசாந்திரி
@@ ஹேமா
@@ vasan
(வெட்க‌ வாச‌னை, தேச‌த்தில்) மிக உண்மை

@@ ராசராசசோழன்
@@ பிரபாகர்
@@ முகிலன்
@@ Paramesh
@@ ரோகிணிசிவா
@@ பழமைபேசி (மாப்பு...இஃகிஃகி)
@@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி @@ dheva
@@ சேட்டைக்காரன்
(விபரீதமான கற்பனைகளின் விளைவு) ஆமாங்க

@@ தாமோதர் சந்துரு
@@ செந்தில்வேலன்
@@ மயில்
@@ ஆதிமூலகிருஷ்ணன்
(ஆதி.. எதிர்பார்க்கிறேன்)

@@ காமராஜ்
(அண்ணே, கதை மட்டுமல்ல)

@@ ராமலக்ஷ்மி
(நடக்கும் குற்றங்கள் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.) ஆமாங்க

@@ அம்பிகா
@@ செ.சரவணக்குமார்
@@ cheena (சீனா)
(வெட்க வாசனை - புதிய சொற்பிரயோகம்) நன்றி அய்யா

@@ ரேகா ராகவன்

@@ கும்க்கி (தோழா... உங்களை அப்படியே நானும் வழிமொழிகிறேன்)

@@ சே.குமார்

@@ இரசிகை

@@ விந்தைமனிதன் (நிறைய்ய)

@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ (அட, பைக்குக்கே கொஞ்சம் ஓவர் விளம்பரமுங்க)

பா.ராஜாராம் said...

excelent kathir!! :-)

Anonymous said...

மிக மிக அருமை. அந்தத் தலைப்பும் அருமை. ஏதோ காதல் சம்பந்தப் பட்ட வெட்கமோ என்று நினைத்தேன்..... வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டி விட்டது.

கலகலப்ரியா said...

படிச்சேன்.. பின்னூட்டமிட முடியல... நல்லாருக்கு கதிர்..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பா.ரா

நன்றி @@ Sathananthan

நன்றி @@ ப்ரியா

க ரா said...

கதையின் கருத்தும் நடையும் அருமை.

தாராபுரத்தான் said...

எங்க உள் மனதை வெளியே கொண்டு காட்டியிருக்கீர்கள் .

க.பாலாசி said...

வீதியில் மட்டுமா!!!

உண்மை...

பிரேமா மகள் said...

நியாயமான விழிப்புணர்வுதான்... அதுக்காக பார்ப்பவனையெல்லாம்... எப்படி?

சுந்தரா said...

அலட்சியமா, அவசரமா, அச்சமா? அடுத்த வீட்டுக்காரனைக்கூட அறிந்துகொள்ளாதபடிக்கு சுருங்கிக்கிடக்கிறது மனித மனங்கள்.

இங்கும் அடிக்கிறது அதே வாசனை :(

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க......எதார்த்தம்...

r.v.saravanan said...

ந‌ல்லாயிருக்கு கதிர்

Anonymous said...

migavum yethartham kathir...neram kidaikkum podhu ellathayum padikkiren