இரட்டைக் கொலை
சடசடவென முறிகிறது மரம்
பிடிபடாத கவிதைக்காக
கசக்கி எறிந்த காகிதத்தோடு
வலி
விழுங்கும் கோழித்துண்டு
தொண்டையில் குத்துகிறது
கூண்டுக்கோழி அனத்தலில்
பைத்தியம்
பிரிவுகளின் மையத்தில் நின்று
நாலா திசையும் வழி சொல்கிறான்
பைத்தியக்கார உலகத்துக்காக
சிறை
மதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை
குடுவைகளில் சேமிக்கிறேன்
பிடித்த வடிவத்தில் சிறைவைக்க
_____________________________________
40 comments:
சிதைவுகளின் சிறைப்பிடிக்கும் வரிகள். அருமை கதிர்.
//சிறை
மதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை
குடுவைகளில் சேமிக்கிறேன்
பிடித்த வடிவத்தில் சிறைவைக்க//
அருமையான கவிதை..எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க?
நாளும் நறுக்குப் போல இருக்கு... :-)
இரட்டைக் கொலை...
அருமை ரசித்தேன் அண்ணே...
ரொம்ப நல்லாருக்கு கதிர்..! பைத்தியக்காரன் பைத்தியக்கார உலகத்துக்கு வழி காட்டுறதில என்ன தப்புங்கிறேன்...!
ஓவ்வொரு வரியும் யோசிக்க வைக்கிறது. நல்ல பகிர்வு கதிர்
வரிகள் அருமை
நல்லாயிருக்கு நண்பா
//இரட்டைக் கொலை
சடசடவென முறிகிறது மரம்
பிடிபடாத கவிதைக்காக
கசக்கி எறிந்த காகிதத்தோடு//
ஐ நாமதான் நெட்ல எழுதுறோமே. என்ன பன்றது தல முன்னல்லாம் பிளாஸ்டிக்கை நெனச்சி வருத்தப்பட்டு கிட்டிருந்தோம். பேப்பர் கப் பேப்பர் ப்ளேட், பேப்பர் இலைன்னு வந்து மரங்கள் அழிக்கப்படுவதை நினைத்தும் கவலை வேண்டியிருக்கிறது. ரீசைக்கில் முறை சரியாக பயன்படுத்தப் படாததே இதற்கு முக்கிய காரணம்.
சிதைவுகள் அனைத்தும் உண்மையை பிரதிபலிக்கிறது
சிறை... மற்றவர் மனதைச் சிறை பிடிக்கும்!
மரமும், கோழியும், மனிதமும், இரக்கம் தண்ணீராக...சபாஷ் தம்பி.
நச்சுன்னு ஒரு கவிதை....
நறுக்குன்னு நாலு கவிதை! அய்யா மாதிரி இந்த தலைப்பில நீங்க கவிதை போடலாம் கதிர்!
ரொம்ப நல்லா இருக்கு.
காகிதம் - கொலை, பைத்தியம் - வழி, கோழி - வலி என யாவும் அருமை.
பிரபாகர்.
சிதைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை சிறப்பாய் சொல்கிறது கதிர்....
கடைசி இரண்டு கவிதைகளிலும், கடைசி வரிகள் இல்லாமலும் நல்லா இருக்கு.
பைத்தியம்
பிரிவுகளின் மையத்தில் நின்று
நாலா திசையும் வழி சொல்கிறான்
பைத்தியக்கார உலகத்துக்காக//
ரொம்ப ஆழம்..:))
எல்லாமே அருமைங்க..:)
முதலிரண்டைவிடவும்..,
பின்னிரண்டு அபாரம்.
பெருங்கவிதைகள் சுறுங்குவதன் மர்மம் யாதோ..?
//வலி
விழுங்கும் கோழித்துண்டு
தொண்டையில் குத்துகிறது
கூண்டுக்கோழி அனத்தலில்//
ஓ....எத்தனத்துண்டுக்கு அப்பறம்...
எனக்கும் அந்த சிறைக்கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு...
அனைத்தும் அருமை அண்ணா...
குறிப்பாக தண்ணீர் சிறை...
vada poche! i may be ask you to write poetry for vellinila...
இனிமே சாப்டும் போது கூண்டு கண்ல படாம பாத்துக்கணும்
நான்கும் அழகு. கடைசி மிக கவர்ந்தது
சிந்திக்கத் தூண்டும் சிதறல்கள் .
நல்ல இருக்கு வாழ்த்துகள் !
பிடிபடாத கவிதை, கூண்டுக்கோழி, பிரிவுகளின் மையம், பிடித்த வடிவத்தில் சிறை...
நான்கும் அருமை..
அருமை அருமை கதிர்
கசக்கி எறிந்த காகிதம் - மரம்
கூண்டுக் கோழி அனத்தல் - தொண்டையில் கோழித் துண்டு
நாலாதிசையும் வழி
தண்ணீர் சிறையில்
அத்தனையும் அருமை - நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள் கதிர்
அட்டகாசமான கவிதைகள்.
சரிங்க..
நல்லா இருக்கு கதிர்.சிறை கூடுதல் அடர்த்தி.
இரட்டைக் கொலை
சடசடவென முறிகிறது மரம்
பிடிபடாத கவிதைக்காக
கசக்கி எறிந்த காகிதத்தோடு
////
அருமை
காகிதம் - கொலை, பைத்தியம் - வழி, கோழி - வலி என யாவும் அருமை.சிந்திக்கத் தூண்டும் சிதறல்கள் .
வலி ஏற்கெனவே படித்த ஒரு கவிதையை ஞாபகப்படுத்தியது.
சிறையில் உறைந்துபோனேன்.
கவிதை அருமையாக உள்ளது.
நான் ஈரோடு அருள்மணி கவிதை நன்றாக உள்ளது http://usetamil.forumotion.com/forum.htm
கதிர்.. நான் யோசிக்கறது என்னன்னா.. நீங்க எப்படி இப்படி யோசிக்கறீங்கன்னு?
அசத்தறீங்க கதிர். அனைத்து கவிதைகளும் அர்த்தம் நிறைந்தவை. இரட்டைக் கொலையும், சிறையும் சிறப்பு!!
எல்லாமே நல்லா இருக்கு கதிர்.
அனுஜன்யா
உயிர்ப்புள்ள கவிதை.
வாழ்த்துக்கள்.
இரட்டைக் கொலை இல்லை என்னையும் சேர்த்து மூக்கொலை
வலிக்கும் பைத்தியமானேன் உங்களில் சிறைப்பட்டு
உங்கள் கவிதைகளை மிகவும் இரசித்தேன். அருமையான வரிகள்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
//
சிறை
மதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை
குடுவைகளில் சேமிக்கிறேன்
பிடித்த வடிவத்தில் சிறைவைக்க
//
SUPER
Post a Comment