தூக்கணாங்குருவிக்கூடு

ஊட்டோரம் ஒசந்த தென்னையில
ஒய்யாரமா வளைஞ்ச மட்டையில
எங்கிருந்தோ வந்த ஒரு குருவி
என்னமோ மாயம் பண்ணுச்சு

ஓடியாடி வேல பாத்து தேடித்தேடி
எடுத்து வந்து அவசரமா கட்டுனதுல
ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல

ஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல
பத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு
மரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே
கூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா

ஐப்பசியில பேஞ்ச அடமழைக்கு
ஆறேழுபக்கம் ஒழுகுது ஊத்துது...
குருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு
ஒரு சொட்டு தண்ணி உள்ள படாம

மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட

________________________________________________

34 comments:

அமர பாரதி said...

கவிதை அழகு. நட்சத்திரப் பதிவுகள் அனைத்தும் இதுவரை அருமை.

கலகலப்ரியா said...

beautiful...!!!

பா.ராஜாராம் said...

பிடிச்சிருக்கு கதிர்.

Paleo God said...

அருமையான கவிதைங்க..:))
அசத்திட்டீங்க..:)

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை அருமை - கவிதை அருமை

தூக்கணாக்குருவி - உழைப்பு அருமை

நல்வாழ்த்துகள் கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

அட ஆமா.....

//ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//

சரியாச் சொன்னீங்க கதிர்

ஆ.ஞானசேகரன் said...

//ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//

ரொம்ப நல்லாயிருக்கு கதிர்

புலவன் புலிகேசி said...

ஒரு வார்த்தையில் சொன்னல் நறுக்

பிரபாகர் said...

ஆகா!

நம்ம வாரிசு வளைச்சி வளைச்சி இந்த கூட்ட பத்தி கேட்டுச்சே! மழையில, இடியில, புயல்ல, சுனாமிலன்னு கடைசியா கேட்டப்போ (நம்மூருக்கு சின்ன புள்ளையில எங்கபபாருகிட்ட பல வராது கடல் ரொம்ப தூரம்னு சமாளிச்சேன்... ஹி..ஹி) கூட நமக்கு தோனலயே!

அருமை கதிர் - தமிழ்மணம் ஸ்டார்!

பிரபாகர்.

Unknown said...

நல்ல சிந்தனை அது அழகான கவிதையாக வெளிவந்திருக்கிறது.

vasu balaji said...

குருவிக்கூடு மாதிரியே கவிதையும் அழகு. பாராட்டுகள் கதிர்.:)

க.பாலாசி said...

சூப்பர்...மிக ரசித்தேன்...

கண்மணி/kanmani said...

சூப்பருங்க கதிர்

அகல்விளக்கு said...

கழக்கிட்டீங்க அண்ணா....

V.N.Thangamani said...

உண்மை... எழிலும் அழகுமாய்.
வாழ்க வளமுடன்.

பின்னோக்கி said...

என் சிறு வயதில், நான் பார்த்த தென்னம் மரங்களில் இந்த கூட்டை பார்த்திருக்கிறேன்.

இப்பொழுதும் சென்னையில் நிறைய தென்னை மரங்கள் இருக்கின்றன (ஆச்சரியமான தகவல் தான் இது ஆனால் உண்மை), இந்த கூட்டை நான் இதுவரை பார்த்ததில்லை.

புத்தகக் காட்சியில், ஒரு ஸ்டாலில் இந்த கூட்டைத் தொங்கவிட்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பரே..
அழகாகச் சொன்னீர்கள்..

செவிவழிச் செய்தி ஒன்று..
ஆண்குருவி கட்டிய கூடு பெண்குருவிக்குப் பிடித்தால் தான் இரண்டும் சேர்ந்து வாழுமாம்..

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை அந்த தூக்கணாங்குருவி கட்டிய கூட்டினைப் போலவே.

ஜோதிஜி said...

நெகிழ வைத்து விட்டீர்கள்

பழமைபேசி said...

கிராமியம் மணக்குதுங்க!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் கதிர்.. உண்மைதான் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட முடியுமா?

தாராபுரத்தான் said...

நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்

Unknown said...

ரொம்ப நல்லாருக்குங்க(குருவி கூடும் உங்க கவிதையும்)..

*இயற்கை ராஜி* said...

அருமை:-)

காமராஜ் said...

மிக அருமையான சிந்தனைக்கவிதை.

ரோஸ்விக் said...

ம்ம்ம்.... கூடும் அசத்தல்... உங்க கவிதை கூப்பாடும் அசத்தல்.

இளமுருகன் said...

கிராமத்து வாசனை துள்ளல் ஆடுகிறது.தொடருங்கள்.

மாதேவி said...

அழகிய கவிதை.

"ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல"
நன்றாகச் சொன்னீர்கள் இதை நானும் பார்த்து ரசித்திருக்கேன்.

பனித்துளி சங்கர் said...

எதார்த்தமான வரிகள் !
உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம் வாழ்த்துக்கள் .

கும்மாச்சி said...

அசத்தல் கவிதை

Sri said...

//ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட//
அசத்திட்டீங்க

priyamudanprabu said...

////
மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட

///

அருமை

கிருத்திகாதரன் said...

நச் என்று முடிப்பது மிக அருமை.

Unknown said...

அருமை...