அது ஒரு மூனு வருசம் இருக்கும். நான் ஷேர் மார்க்கட்டில் காலடி எடுத்து வைத்த ஆரம்பம் (பெரிய்ய்ய்ய்ய்ய்ய காலடி வைக்கிறாராம்... ங்கொய்யாலே பில்டப் வேறையா.... மேல சொல்லுய்யா). நானும் பெருசா பங்குச்சந்தையில வியாபாரம் பண்ணி பட்டாசு கிளப்பிடலாம்னு நம்பிக்கையோட தெனத்திக்கும் காத்தாலே ஒன்பதேமுக்காலுக்கு சோறு தின்னும் திங்காம வேகவேகமா ஷேர் புரோக்கிங் ஆபிசுக்கு ஓடீருவேன். வீட்ல ஷேர் மார்க்கட்டுக்கு போறதப் பத்தி ரொம்ப பெருமையா வேற பேசிக்குவாங்க. ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது.
அங்க பார்த்தாக்க, கம்ப்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பொளிச்சு பொளிச்சுனு ஒரே நெம்பரா ஓடிக்கிட்டிருக்கும்.... நானும் வேடிக்கை பார்த்துக்கிட்டேயிருந்தேன்... கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ளே பல தடவ மாறிடுது, ஆனாலும் ஒன்னும் புரியல.... ஆனா அதே கம்ப்யூட்டரச் சுத்தி ஏழெட்டு பேர் ஒக்காந்துக்கிட்டு உடா...............ம பார்த்துக்கிட்ருந்தாங்க... சரி நாமளும் தொழில கத்துக்குவோம்னு அவங்கள மாதிரியே கம்யூட்டர் ஸ்கிரீனையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பேன். இப்படியே ஒரு வாரம் ஓடுச்சு, ஒன்னும் புரிபடலை. புரிபட்ட ஒரே விசயம் 11 மணி ஆச்சுன்னா, மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. அந்த ஏழெட்டு பேர்ல ரெண்டு பேர் மட்டும் ரொம்ப பிசியா எந்நேரமும் ஏதாவது சொல்லிட்டேயிருப்பாங்க... ”அத பை பண்ணுங்க சார், ம்ம்ம்ம் அடிங்க அவன பார்த்துக்கலாம்” (அடிங்கன்னா.. விக்கிறதாம்....அது தெரிய 30 நாள் ஆச்சு. ரெபிடெக்ஸ்ல முப்பது நாளில் பங்குச்சந்தை வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம்னு புக்கு வரமா போனதால எனக்குத் தெரியல) அப்படினு பிசியாவே இருப்பாங்க.
நானும் இந்த ரெண்டு பேரையும் நல்லாப் பார்த்து தொழில கத்துக்கிடலாம்டானு நம்ம்ம்ம்ம்ப்பிக்கையா அவங்களையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க வட சாப்புடறது, டீ குடிக்கிற ஸ்டைல கூடப் பார்ப்பேன்... காலையில வந்த உடனே ரொம்ப பிசியா இருக்கிற ஆளுக... மத்தியானம் ஆகஆக கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பிச்சிருவாங்க... அப்புறம் மேனேஜர் கிட்ட கேப்பாங்க... குருட் ஆயில் (கச்சா எண்ணைங்க) என்ன ரேட்டுன்னு..... அவ்வளவுதான் குருடு எறுது... மார்க்கெட்ட சாத்திருவாங்கனு சொல்லுவாங்க, நான் கேட்பேன்.. ”குருட் ஏறுனா ஏன் சந்தைய மூடிறுவாங்கனு” அதுல ஒருத்தரு அசோகன் (அதாங்க பழைய நடிகர்) மாதிரி சிரிப்பாரு, ”சாத்துவாங்கன்னா, மார்க்கட்ட அடிச்சிருவாங்னு அர்த்தம்”னு.
எனக்கு ஒரு கருமாந்திரமும் புரியல ”சந்தைய யார் வந்து அடிப்பாங்க, எப்புடி அடிப்பாங்க”னு, அப்புறம் தான் புரிஞ்சுது சாத்திருவாங்க, அடிச்சிருவாங்கன்னா... சந்தை இறங்கிடும்னு (மவனே ரெபிடெக்ஸு நீ மட்டும் கையில கிடைச்சா கொலைதான்)
தெனமும் காலையில உற்சாகமா வந்தவங்க... மூனரை மணிக்கு சந்தை முடிவடையும் போது காத்து போன பலூன் மாதிரி டல்லா வேற போவங்க. ரொம்ப நம்பிக்கையா வேற பேசிக்குவாங்க ”இன்னிக்கு தப்பு பண்ணிட்டோம், அந்த ஒன்ன மட்டும் மாத்திப் பண்ணியிருந்தா லாட்டரிதான், நாளைக்கு பார்த்துருவோம் ஒருகை”. எனக்கு அந்த தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் (ஹ்ஹும், கெட்ட நேரம் வந்துதுன்னா... எல்லாம் பிடிக்கும்டா)
இப்பிடியே போச்சு... தெனமும் பத்தாயிரம் ரூவா பணத்தோட நானும் போவேன்... வெளியே வரும் போது பத்தாயிரம் ரூவா லாபத்தோட திரும்பிவருவேன்(!!!!). அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே.
நாமதான் கம்னு இருக்க மாட்டோமே... சரி இந்த பத்தாயிரத்துல ரிஸ்க் எடுத்து அவங்க ரெண்டு பேரும் எந்த ட்ரேடில் (ஒரு தடவை வாங்கி விற்பதை ஒரு ட்ரேடு என்பார்கள்) சம்பாதிக்கிறாங்களோ அதுல நாமும் இறங்கனும்னு தயாரா இருந்தேன்... ஒரு மாசம் பார்த்ததில ஒரு ஃபார்முலா புரிஞ்சுது... சராசரியா மூன்று ட்ரேடு நஷ்டம் ஆச்சுன்னா அடுத்த ட்ரேடு லாபம் எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி நாலாவது ட்ரேடுல நானும் குதிச்சேன்... ரெண்டு பேரும் கைகுடுத்து... ”ஆர்டர் போடுங்க சார்... நாங்க கூட இருப்போம்னாங்க....” அட அந்த இடத்தில அந்த தன்னம்பிக்கைதான் முக்கியமாத் தெரிஞ்சுது. எவனொருவன் ஒரு காரியத்தை தொடங்கும் போது, அதே தொழிலில் இருப்பவனிடம் தன்னம்பிக்கையை பெறுகிறானோ... அவன் அதீத வெற்றி பெறுவான்... இந்த அருமையான தத்துவத்தை நானே கண்டுபிடிச்சு, எனக்குள்ளேயே திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டேன்...
நானும் இறங்கினேன்... எதை, எங்கே வாங்கனும்னு அதுல பாண்டிங்கிறவருதான் சொன்னார். வாங்கினேன். அரை மணி நேரம் கழிச்சு.. இப்போ வித்துடுங்கன்னு சொன்னார்... கணக்கு பார்த்தா ஆயிரம் ரூபா லாபம்..... அட.... சாமி... கையில பிடிக்க முடியல.... ஏங்க பத்தாயிரம் போட்டு... அரை மணி நேரத்துல ஆயிரம் ரூபானு சொன்னா.. எப்பிடி இருக்கும்..
அடுத்த நாள் ஒன்பதை மணிக்கே ஆஜர்.... பாண்டியை தலைவரேனு கூப்பிட ஆரம்பிச்சேன்... முதல் நாள் செய்த அதே தந்திரம் வெறும் 200 ரூபாதான் கிடைத்தது. வீட்டில் போன் செய்து நேற்று போட்ட சட்டையை துவைத்து அடுத்த நாளுக்கு தயார் படுத்தச் சொன்னேன் (..ஸ்ஷ்ஷ்ஷ் சென்டிமென்டுங்க). ஆனா... அடுத்த நாள் பால் பாண்டி வரல. போன்லயே என்னென்னவோ ட்ரேட் பண்ணினார்.... இப்படியே இரண்டு வாரம் ஆனது... கையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகியிருந்தது..... அட பாண்டிக்கு இல்லைங்க... எனக்கு... எனக்கு
அந்த ஆபீஸ் மேனேஜர் மெல்லமா என்னிடம் பேச்சுக்கொடுக்கதார். ”ஏன் சார்.. இவ்வளவு வேகமா பண்றீங்க... நீங்க தனிப்பட்ட முறையில மார்க்கட்ட ஸ்டடி பண்ணுங்க... மத்தவங்களை ஒட்டு மொத்தமா ஃபாலோ பண்ணாதீங்க” என்றார். ஏனோ அவருடைய அட்வைஸ் பிடிக்க வில்லை...(அது பிடிச்சா உருப்பட்டுத் தொலைச்சிடுவோமே) இத்தனைக்கு பாண்டி ஷேர் மார்க்கட்ல இருபது வருச அனுபவம்(!!!!!) வேற.
பாண்டி ஷேர் புரோக்கிங் ஆபிஸ்க்கு அடிக்கடி வருவது குறைந்தது.... சில சமயம் வருவார், பத்து நிமிடம் கூட உட்கார முடியாது, அவருடைய மனைவியிடமிருந்து ஷேர் ஆபிஸ் நெம்பருக்கு போன் வரும்.... “எங்க வீட்டுக்காரி கேட்டா, நான் இங்க வரலைனு சொல்லிடுங்க”னு சொல்லிட்டு ஓடிப்போயிடுவார். எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு, அட நம்ம ஹீரோ இல்லாம எப்படி தொலைச்ச ஐம்பதாயிரத்த திருப்பி எடுக்கிறதுன்னு...
அடுத்த சில நாட்களில் திடீர்னு வர்றதும், கொஞ்ச நேரத்துக அவருக்கு போன் வர்றதும் சகஜமா இருந்துச்சு. ஒருநாள் பார்த்தா அவரோட சம்சாரம் ஆட்டோவுல ஷேர் ஆபிஸ்க்கு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாண்டி வரவேயில்லை. நானும் மார்க்கெட்ல ஒன்னும் பண்ணாம இருந்தேன். ”பணம் ரெடியா இருக்கு, ஆள் அனுப்புங்கன்னு” பாண்டிகிட்டேயிருந்து போன் வந்தது. பணம் வாங்கப்போன ஆள் என்னிடம் கள்ளச்சிரிப்பாய்”சார் உங்க தலைவர பார்க்கப் போறேன், வர்ரீங்களா” என்று கேட்டார்.
அட நம்மாளை போய் பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் சந்தோசமா போனேன். அவர் வீடு இருக்கும் பகுதிக்குப் போய் ஆள் நடமாட்டம் குறைவான வீதியில் நின்னுக்கிட்டு “பாண்டி சார், நான் ஸ்பாட்ல இருக்கேன்” னு இவர் போன் பண்ண, எனக்கு ஒரே மர்மமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு இவரோட செல் போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு. இவரு அண்ணாந்து பார்க்க மாடியிலிருந்து ஜன்னல் வழியாக ஒரு மஞ்சப்பை முடிச்சு விழுந்துச்சு. இவரு எடுத்துகிட்டு ஆபிஸ்க்கு போலம்னார். பாண்டி என்ன பார்த்து கைய அசைச்சாரு.
ஆபிஸ் வந்தும் எனக்கு ஆச்சரியம் அடங்கல என்ன நடக்குதுன்னு. அதுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது,
நம்ம பாண்டி மாசத்தில இருபதுக்கு குறைஞ்சது பதினாறு நாளாவது நஷ்டம் செய்வார்னு. ரெண்டு வருசத்துல இந்த ஆபிஸ்ல மட்டும் குறைந்தது பத்து லட்சம் நஷ்டம்னு.
பெரிய அளவில் பரம்பரையாக நடக்கும் கடை இருக்கிறதால பணம்பத்துன கவலை இல்லையாம். கொஞ்ச நாளாக அவரோட சம்சாரம் ரொம்ப கெடுபிடி பண்றதால, போன் பண்ணி ஜன்னல் வழியா பண முடிச்ச வீசுவாராம். அவருக்கு கம்பெனி, பணமே இல்லாம கூட ட்ரேடு பண்ணலாம், அதிக பட்சம் ஐந்தாயிரம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா அன்னிக்கு ட்ரேடு அவ்வளவுதானு சலுகை கொடுத்திருந்தாங்க. ஐந்தாயிரம் என்னைக்கெல்லாம் ஆகுதோ, அன்னிக்கு உடனே கூப்பிட்டு பணம் முடிச்ச வீசிடுவாரம்.
எனக்குள்ள கேள்வின்னா கேள்வி அத்தன கேள்வி. இத்தன வருசம் பண்ணி, கிட்டத்தட்ட தெனமும் நஷ்டமா? சரி தெனமும் நஷ்டம்னா அந்தக் கருமத்த ஏன் பண்ணனும்? இப்படி பல கேள்வி... ஒருநாள் பெரிசா லாபம் சம்பாதிச்சப்போ எல்லார்த்துக்கும் விருந்து வச்சாராம் ஒரு ஹோட்டலில். அப்போ மேனேஜர் ”ஏன் சார் இப்படி நிறைய நஷ்டம் பண்றீங்கன்னு” கேட்டப்போ “சார், சொத்து பலகோடிக்கு இருக்குங்க. நான் தண்ணி, தம்மு, சீட்டு இப்புடி எந்தக் கெட்ட பழக்கத்திலேயும். பணத்த அழிக்கிறதில்லை... மார்க்கட் மட்டும்தான் சார்... வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல, அதனால சரி இதுவாவது இருந்துட்டுப் போகுதேன்னு பண்ணிக்கிட்டிருக்கேன்”னு சொன்னாராம்
அதக் கேட்டுட்டு அன்னிக்கு ஓடிவந்தவன்தான் ட்ரேட் பண்றேன்னு அந்த ஷேர் ஆபிஸ்க்குள்ள மார்க்கெட் நடக்கிற நேரத்துல இதுவரைக்கும் போனதில்லை.. பாண்டியையும் பார்க்கவேயில்லை.
_______________________________
46 comments:
/ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது. /
இது வேற! மத்த இடத்துல ராஜ பார்வையோ?
/ஒரு வாரம் ஓடுச்சு, ஒன்னும் புரிபடலை. புரிபட்ட ஒரே விசயம் 11 மணி ஆச்சுன்னா, மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்./
வடைக்கு எலிதான் மாட்டும் கதிருமா?
/அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே./
இது நல்லாருக்கே:))
:))..தாங்கல சாமி
=)))) சூப்பர் மொக்கை....!!! அம்புட்டுதேன்... ஆனா எனக்கு வயிறு வலிக்கலை.. :>
வராது வந்த... இஃகி... வராதுன்னீங்க...வந்துருச்சே!
//ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது//
அருமையான அனுபவ பகிர்வு அண்ணே ...
படிக்கும் பொது அழுகாச்சியா வருது அண்ணே...
:))))
12 வயதில் பங்கு சந்தையில் இறங்கிய சிறுவன் இன்று உலகின் பெரிய பணக்காரார்.
எந்த தொழிலும் லாப நஷ்டங்கள் இருக்கும், தொழில் பற்றி கற்றுக்கொண்டால் வெற்றிதான்.
இனியும் பங்கு சந்தையில் இறங்க மனம் வரவில்லை.
எடுக்கப் போகும் பணத்தை விட, தொலைக்கப் போகும் பணம் தான் கண்ணுக்குத் தெரிகிறது, இருக்கிறதே போதும் என இருக்கத் தோணுகிறது.
நல்லதொரு இடுகை.
அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே//
100% லாபம்க.. உண்ணிப்பா பார்க்க வேண்டிய மிக பெரிய விஷயம் இது..
நல்லா எழுதி இருக்கீங்க கதிர், நிறைய பேர் சரியா தெரியாம மாட்டிகிட்டு அவஸ்தை படறாங்க.
//அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது.//
இதுவும்மா????
நல்ல நகைச்சுவையான எழுத்து நடை...மிகவும் ரசித்தேன்
ஊருக்கு வர்றப்போ பணத்தோட வர்றேனுங்க! பாண்டிய லின்க் பண்ணிவுடுங்க (சனியன பனியன்ல எடுத்து உட்டுக்கறது இதுதானே?)...
ரொம்ப காமெடியா இருக்கு(பணத்த உட்டத சொல்லல சாமி!)
பிரபாகர்.
:-))))
:-))
புரியாத ஏரியா,
புரிகிற மாதிரி எழுதியிருக்கீங்க.
//ஒன்பதேமுக்காலுக்கு சோறு தின்னும் திங்காம //
ஒன்பதே முக்காலுக்கு போகவே தின்னும் திங்காமயா? அப்போ ஏழே முக்காலுக்கு போக சொன்னா?:)))
//12 வயதில் பங்கு சந்தையில் இறங்கிய சிறுவன் இன்று உலகின் பெரிய பணக்காரார்//
He didn't trade. He invested. Some of his investments are more than 30 years old.
நல்ல அனுபவம்...
இப்ப கம்பெனி எப்படி போகுது? நல்லா எழுதியிருக்கீங்க!!
:) அனுபவிச்சு எழுதி இருக்கீங்க
////12 வயதில் பங்கு சந்தையில் இறங்கிய சிறுவன் இன்று உலகின் பெரிய பணக்காரார்//
He didn't trade. He invested. Some of his investments are more than 30 years old.//
He also not invested in INDIAN Market..! :)
தலைப்பில் ஒரு உட்பொருள் ஒன்று உண்டு.
ஒரு விட்யத்தில் மனத்தை பறிகொடுத்து, அதுவே வாழ்க்கையென, ஆழ்ந்து கிடப்பவர் வேறொன்றைப்பற்றியும் நினைக்கமாட்டார். அங்கே போகவும் மாட்டார்.
எனவே, பாண்டிக்கு ‘கெட்ட பழக்கங்கள்’ இல்லயென்பது அவர் விரும்பியே, விரும்பாமலே இல்லை. அவரையும் அறியாமல் வந்த பிரிவினை அது.
Obsession with one and only thing makes a person become unaware of all other things. Sometimes, his family relationship will also suffer.
//அவங்க வட சாப்புடறது, டீ குடிக்கிற ஸ்டைல கூடப் பார்ப்பேன்... //
இதிலும் ஒரு பொது உண்மையுண்டு.
ஒரு தொழிலை முறையாகக் கண்டுகொள்பவர் உண்டு.
சிலர் அத்தொழில அருகிலேயே இருக்கவேண்டிய சூழலில் தங்களையறியாமல் அத்தொழிலிலேயே ஒரு விருப்பமும் வளர வைத்துக்கொள்வர். இவர்கள் சாதாரணமானவர்.
எடுத்துக்காட்டு.
Ball boys. Ball girls.
டென்னிஸ் கோர்ட்டில் இவர்கள் வேலை செய்வர். சிறுப்ராயத்திலிருந்தே. பொதுவாக அங்கே வேலைசெய்யும் தோட்டக்காரன் போன்றவர்களின் பிள்ளைகள். அவ்விளையாட்டைக்கூர்ந்து கவனிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு வீரர்கள் செய்யும் தனிப்பட்ட செயலையும் கவனித்து அவர்களைப்போல ஆக வேண்டும் என ஆசை கொள்பவர்.
இவர்கள் பின்னர் விளையாட்டு வீரர்களாகவோ, அல்லது விளையாட்டைக் கற்றுத்தரும் பயிற்சியாளராகவோ மாறுவார்கள்.
செகப்பிரியர் (Shakespeare) ஒரு நாடக்ககொட்ட்கையில் குதிரை லாயத்தில் வேலை பார்த்த் சிறுவன். பின்னர் கொட்டகையில் திரைச்சீலையை இழுக்கும் ஆள். பின்னர், நாடகயாசிரியர்களுக்கு எடுபிடி. அவர்கள் எழுதிய காகிதங்களை எடுத்து அடுக்கி வைப்பதும், அதில் நகலகளை எடுப்பதும் அவர் பணி.
Rest is history.
எல்லாருக்கும் எப்படியோ தெரியல.. எப்பப்ப எல்லாம் மார்கெட் விழுதோ அப்ப் எல்லாம் ஏதோஒரு இண்ட்யூஷ்ன்ல எலலத்தையும் வித்துட்டு ஓடி வத்துருவேன்.
//(அடிங்கன்னா.. விக்கிறதாம்....அது தெரிய 30 நாள் ஆச்சு. //
Correct.
இதன் பெயர் ஆங்கிலத்தில் jargon.
எத்தொழிலிலும் இந்த ஜார்கான் பாஷை உண்டு.
இதில் பரிச்சயம் வந்தவுடன் நாம் அவர்களுல் ஒருவன் என்ற உணர்வு உண்டாக, நமக்கு தொழிலில் ஒரு பிடிப்பு உண்டாகும்.
First get to know the jargon thoroughly and use them freely and get acceptance in the profession.
That will open the gates for you.
:))
அய்யோ இப்பத்தான் ஆன்லைன்ல ட்ரேட் பண்ணலாம்னு ஒரு $1000/- இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன். இப்பிடி பயங்காட்டுறீங்களே?
உங்களது எழுத்து நடை சிறப்பானது.
வாழ்த்துக்கள்
//இப்பிடியே போச்சு... தெனமும் பத்தாயிரம் ரூவா பணத்தோட நானும் போவேன்... வெளியே வரும் போது பத்தாயிரம் ரூவா லாபத்தோட திரும்பிவருவேன்//
சரியா எந்த ரூட்டில் எத்தனை மணிக்கு போவீங்க திரும்பி எத்தனன மணிக்கு சரியா எந்த பாதையில் வருவீங்க என்ற டீடெயில்ஸ் கொஞ்சம் கொடுங்களேன்:)))கூட யாரும் வருவாங்களா அவுங்களிடமும் பணம் இருக்குமா என்று சொல்லுங்க!
எங்க கம்பெணி எடுக்கும் சர்வேவுக்கா இந்த டீட்டெயில்ஸ்.
ஸ்கெட்ச் போட்டு போட்டுதாக்கு பி.லிட் - ஈரோடு
நல்லா எழுதியிருக்கீங்க கதிர்:)!
ம்ம்ம்...நல்லாத்தா போய்க்கிட்டிருக்குது.
நமக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கறாதால, பங்கு சந்தையை 1990லயே, உட்டாச்சு. அப்ப வாங்குன குப்பையெல்லாம், இன்னும் பத்திரமா வச்சிருக்கறமுல்ல.
:-))))))
இவ்ளோ மேட்டர் இருக்கா..................நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதிவு
அன்பின் கதிர்
அருமை அருமை - பங்கு வர்த்தகத்தின் அடிப்படை - முதல் பாடம் நன்று
நல்வாழ்த்துகள் கதிர்
விட்றா விட்றா ... சண்டைல கிழியாத சட்டையா...?
//மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்./
//
இது மட்டும் தெளிவாப் புரிஞ்சிதோ:-)
அற்புதமான பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே !
ஷேர் மார்க்கட் ஒரு போர் மார்க்கட்னு நினைச்சா அட, படா இன்ட்ரஸ்டிங்கா இருக்கே!(உங்க பதிவைச் சொன்னேன்!)
வடை :)) நீங்களுமா??
நகைச்சுவையுடன் இருந்தாலும் நல்லதொரு பயனுள்ள பகிர்வு. பங்கு சந்தையில் தின வர்த்தகம் கொஞ்சம் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பங்குகளை வாங்கி வைத்து பின் விற்பதில் நிச்சயம் வருமானம் பார்க்கலாம். என் நண்பர் ஒருவர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால் போதும் என போவார் அது கிடைத்ததும் வந்துவிடுவார். இப்படி பலர் உள்ளனர்.
பங்கு சந்தை ஒரு சூதாட்டம் போலத்தான். ஆனால் இது ஒரு பெரிய வியாபாரமும் கூட.
சரியாக கணித்து இறங்கினால் நல்ல வருமானம் இருக்கும்.
ஆழம் தெரியாமல் காலை விட்டால் எதிலும் ஆபத்து தான்.
மீண்டு வந்ததை பகிர்தமைக்கு நன்றி்.பாவத்தில் பங்கு பெற நீங்கள் விரும்பவில்லை.பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அட! இம்பூட்டு விஷயம் இதுலே இருக்கா!!!!!
சொல்லவிட்டுப்போச்சே....
மசால் வடை...ஆஹா.....
நல்லவேள அந்த ஏரியாவப்பத்தியே எனக்கு தெரியாது...கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன். ஆனாலும் மூக்க நொழைக்க விரும்பல. நாம வாங்குற அஞ்சுபத்துக்கு இதெல்லாம் தேவையான்னுட்டு விட்டுட்டேன்.
ம்..ம்.. 6 வருசமாச்சு. புலி வால புடிச்ச கதையா இன்னும் விட மாட்டேங்குது :(
Kathir - It’s good that you lost only 50K... [BTW, the flow is very very very nice and was laughing when I read this (I know that you are sharing the bitter experience) but I like your humor sense..]
ஆஹா...,
மறுபடியும் எப்பண்ணே பாண்டிய பார்க்க போவீங்க....?
தூள்! தலைப்பும் விசயமும் நச்!
candid article. Truth is clear! :-)
candid article. Truth is clear! :-)
Post a Comment