உங்களைப் பற்றி ஆழமாக நான் ஏதும் வாசித்ததில்லை, ஆராய்ந்ததில்லை. நீங்கள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிமை, சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமை என ஒரு நேர்மையான தலைவருக்கான சிறந்த அடையாளமாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி... உண்மையான உதாரணமாக இருந்து மிக அற்புதமான ஒரு சரித்திரத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள்.
கடந்த சில நாட்களாக நீங்கள் மிகக்கடுமையான உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததினால் செய்திகளில் அவ்வப்போது உங்களைக் காண நேர்ந்தது. 95 வயதை கடந்த உங்கள் முதுமை, உங்களை உடல் நலக் குறைவிலிருந்து மீட்க உதவாது என்பதாகவும் மனதிற்கு பட்டது. ஒருவேளை நீங்கள் இறந்தால் உங்கள் கண்கள் தானமாக அளிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்றும் கூட நினைத்தேன். இன்று அது நடந்ததை நினைக்கும் போது, மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
இந்த தேசத்து மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்த நீங்கள், இறந்த பின்னும் கூட தொடர்ந்து இந்த தேசத்தை பார்த்து மகிழ உங்கள் இரண்டு கண்களை தானம் செய்துவிட்டதை அறியும் போது, நீங்கள் இருந்த திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.
நீங்கள் அளித்த கண்களிலிருந்து பெறப்பட்ட கருவிழிகள் பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு தலா ஒன்று வீதம் அளிக்கப்படும் என்பதை அறிவேன். அந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையில் இருந்த இருட்டை முற்றிலும் உங்கள் விழிகள் துடைத்து எடுக்கும். நீங்கள் தானமாக அளித்த விழிகள் மூலம் அவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் வெளிச்சத்தை, வண்ணங்களை, இருளை, நிலாவை, நட்சத்திரங்களை இதையெல்லாம் தாண்டி சக மனிதர்களை, தன் உறவுகளை பார்த்து மகிழ முடியும்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு
நீங்கள் செய்த நல்ல காரியங்களும்...
நீங்கள் வகுத்த நல்ல கொள்கைகளும்...
வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...
........கூடவே உங்கள் இரண்டு விழிகளும் மிகப் பிரகாசமாக.
குறிப்பு: ஜோதிபாசு அவர்களின் உடலும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்படவுள்ள செய்தி மனதை நெகிழச் செய்கிறது. இந்த தேசத்தில் தன்னுடைய உடலையும் தானமாகக் கொடுத்த தலைவர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.
57 comments:
அருமையான விஷயம். அவர் மறைந்தாலும், கண் வாழ்கிறது.
நல்ல பகிர்வு..
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்
:)
ஜோதிபாசு அவர்களின் கண்தானம் அறிந்து மனம் நெகிழ்கிறது...
நிச்சயம் அவர் பெயர் நிலைத்திருக்கும்...
அஞ்சலிகள்..
எளிமையான அவருக்கு அருமையான அஞ்சலி. :(
எளிமையான அரசியல்வாதி . இவரின் படங்களை இனி எல்லா கம்யூனிஸ்ட் மன்றங்களில் பார்க்கலாம்.
நல்ல பதிவு. கண் தானம் குறித்து நீங்கள் ஏற்கனவே சொல்லி வருகிறீர்கள். நட்சத்திர வாரத்தில் முதல் பதிவாக உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம் எழுதி உள்ளீர்கள்
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்...
நல்ல பகிர்வு..ஜோதிபாசு இறந்த செய்தியே நீங்கள் எழுதிதான் எனக்கு தெரியும்.
எளிமையான தலைவருக்கு எனது அஞ்சலிகள்..,
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்
பாசு உடலையும் தானம் செய்திருக்கிறார்.
உங்க அறச்சீற்றத்துக்கு ஒரு அளவே இல்லையா?:((
முதலில்.. நட்சத்திர வாழ்த்துக்கள்..
தொடருங்கள் தொடர்வோம்.
உடல் தானமும் செய்து உள்ளார் என்பதை பகிர்கேறேன்
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்
அருமையான பதிவு...
பதிவுக்கு நன்றி அண்ணே....
நட்சத்திர பதிவராகி, முதல் பதிவே, மனித நேயம் மிக்க ஒரு பொதுநலவாதியைப் பற்றி.......
மிகப் பொருத்தம்.....
வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர் அண்ணா. நம் காலத்தின் சிறந்த தலைவரை அருமையான முறையில் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். அன்னாருக்கு என் அஞ்சலிகள்.
நல்ல மனிதர். வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்.
அறச் சீற்றத்திற்கு அளவுகோல் ஏது?
நட்சத்திற்கு வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்.
நர்சத்திர வாழ்த்துக்கள் கடமை வீரரே...
முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை, மகத்தான தலைவருக்கு அஞ்சலியாக்கி இருக்கிறீர்கள். கிரேட்...!
நல்ல மனசுக்கு நன்றிகள்..
வாழ்த்துகள் மாப்பு!
அவர் மறைந்தாலும் பார்வை ஒளிவழங்கி வாழ்ப்போகிறது இனி...
ஆத்மா சாந்தியடைய வாழ்த்துவோம்...
தமிழ்மணத்தில் நட்சத்திரமாய் ஒளிர்வதற்கு வாழ்த்துக்கள் கதிர்...
அருமையான பகிர்வு! நட்சத்திர வாழ்த்துகள் கதிர்!
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கதிர்... நட்சத்திர வாழ்த்துகள்.... பதிவு அப்புறம் படிச்சுக்கறேன்...
பாசு உன்மையான தலைவர்...
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்...
டிரீட் எப்போ தலைவரே......
நன்றி @@ பின்னோக்கி
நன்றி @@ கண்ணா
நன்றி @@ அகல்விளக்கு
நன்றி @@ butterfly Surya
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ Romeo
நன்றி @@ மோகன் குமார்
நன்றி @@ முகிலன்
(ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமா நேற்று தமிழ் தொலைக்காட்சிகள் கூட பல மணி நேரம் இது குறித்தே ஒளிபரப்பு செய்தார்கள்)
நன்றி @@ பேநா மூடி
நன்றி @@ தண்டோரா
(உடல் தானம் குறித்தும் இப்போது சேர்த்திருக்கிறேன்)
நன்றி @@ சாலிசம்பர்
(அதென்ன அறச்சீற்றம்)
நன்றி @@ நர்சிம்
நன்றி @@ பாலாஜி
நன்றி @@ seemangani
நன்றி @@ ஆரூரன்
நன்றி @@ செ.சரவணக்குமார்
நன்றி @@ மாதேவி
நன்றி @@ ஜோதிஜி
நன்றி @@ வடகரை வேலன்
நன்றி @@ கும்க்கி
நன்றி @@ மாதவராஜ்
நன்றி @@ அண்ணாமலையான்
நன்றி @@ பழமைபேசி
நன்றி @@ தமிழரசி
நன்றி @@ சந்தனமுல்லை
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ jaffer
நீங்க வலைப்பூ ஆரம்பித்த பின்)
நல்ல பகிர்வு..
நட்சத்திர வாழ்த்துக்கள்
touchy kathir... he's simply great..!
நட்சத்திர வாழ்த்துக்கள் தலைவரே..:)
நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்.
தொடர்ந்து செல்லுங்கள்.
அன்புடன்
சந்துரு
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..
சரியான நேரத்தில் கசியும் மெளனம்.வாழ்க வளமுடன்.
நட்சத்திர வாழ்த்துகள்..
நல்ல பகிர்வுங்க..
great post about a great personality in great time.. nice:-)
அஞ்சலிகள்..:-(
இறந்தும் வாழ்கிறார் அன்புத் தோழர்.
நல்லதொரு அரசியல்வாதிக்கு அவர் உதாரணமாக வாழ்ந்தவர்.
எழுத்தின் மூலம் நீங்கள் செலுத்திய அஞ்சலியில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.
//முதுமையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்ற பெருமை கொண்டவர் நீங்கள். ஆனால் உங்களைப் பின்பற்ற ஓரிருவரைத் தவிர, வேறு அரசியல்வியாதிகளுக்கு இன்னும் அந்த மனப் பக்குவம் வரவில்லை...//
தூள் மக்கா தூள்.
வாழ்த்துகள் கதிர்.
நல்ல பகிர்வு.
நட்சத்திர வாரத்தில் கலக்க மற்றுமொரு முறை வாழ்த்துகள்.
கனத்த மனத்துடன் அந்த புனிதரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். அருமையாய் நினைவுகூர்ந்திருக்கிறீர்கள் கதிர்...
பிரபாகர்.
கண்தானம் என்ற விசயத்தையும் தாண்டி, அவர் மிகச்சிறந்த 'நல்ல' - 'நேர்மையான' அரசியல்வாதியாக இருந்தார் என்றே அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறேன் (அரசியலில் பழுத்த பெரியவர்கள் சரியா/தவறா என்று கூறவும்) இல்லாவிட்டால் 23 வருடங்கள் "தொடர்ந்து' ஒரு மாநில முதலமைச்சராக இருந்திருக்க முடியுமா?
தங்கள் இடுகைக்கு ஒரு 'ஓ'! :)
Good one !!!!!
உங்களை பார்த்து திருந்தடும் என் அரசியல்வாதிகள் நன்றியுடன்
அன்பின் கதிர்
முதலில் நடசத்திரமாய் ஒளிர்வதற்கு நல்வாழ்த்துகள்
மறைந்த மாபெரும் மனிதர் ஜோதிபாஸுவிற்கு செலுத்திய அஞ்சலி அருமை அருமை. தன் உடலையே தானமாகக் கொடுத்த முதல் முதல்வர் அவர்.
நல்வாழ்த்துகள் கதிர்
தன் வாழ் நாட்கள் முழுவதும் மக்களுக்காக தன்னை அர்பணித்த தோழர் இறந்த பின்பும் தன் உடல் உறுப்புக்க்களை தானம் செய்ததில் வியப்பில்லை.
அவரை வழிகாட்டியாக கொண்டு நடப்போம்.
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்...
நன்றி @@ T.V.Radhakrishnan
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ வினோத்கெளதம்
நன்றி @@ தாமோதர் சந்துரு
நன்றி @@ முனைவர் இரா.குணசீலன்
நன்றி @@ தாராபுரத்தான்
நன்றி @@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)
நன்றி @@ இயற்கை
நன்றி @@ ரோஸ்விக்
நன்றி @@ ச.செந்தில்வேலன்
நன்றி @@ பிரபாகர்
நன்றி @@ ஊர்சுற்றி
(அரசியலில் பழுத்த பெரியவர்கள் சரி /தவறு என்பதைவிட... தள்ளாத வயதில் விலகினால் நன்று என்பதே என் கருத்து)
நன்றி @@ Pradeep
நன்றி @@ அ.ராமநாதன்
நன்றி @@ cheena (சீனா)
நன்றி @@ ஹரிகரன்
நன்றி @@ நிலாமதி
நல்ல பகிர்வு.அவரை பற்றி சொல்ல வார்தைகைள் இல்லை.
தோழர். ஜோதிபாசு எளிமையும், நேர்மையும் மிக்க சிறந்த தலைவர். அவரது வாழ்வு, உழைப்பு, உடல் யாவையும் பொதுவுடமை கொள்கையின் வழி மக்களுக்காக...
தோழர் ஜோதிபாசுவிற்கு வணக்கங்கள்!
நன்றி @@ malar
நன்றி @@ திரு/thiru
எழுத்தின் மூலம் நீங்கள் செலுத்திய அஞ்சலியில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.
நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துகள்.
ஜோதிபாசு ஒரு சிறந்த அரசியல் வாதி. பிரதமர் பதவியை மறுத்தவர். ஆனால் கம்யூனிசம் சார்ந்திருந்ததால் அவர் செயல்படுத்த நினைத்த பல திட்டங்களை செயல்படுத்தாமலே போய்விட்டது. அவர் மகனின் மீதும் ஊழல் குற்றங்கள் இருந்தும் அவை நிரூபிக்கப்படவில்லை.
23 ஆண்டுகள் ஆட்சியில் கல்கத்தாவை மிக சிறப்பான இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அவரால் முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்பது உண்மை.
வரிகளுக்கிடையில் கசிந்த உங்கள் தேடல் நெகிழ்ச்சியூட்டியது. நம்மஊர்த் தலைவர்களும் இருக்காங்களே... என்னும் நினைவு எரிச்சலூட்டியது.
நன்றி கதிர். இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்
Post a Comment