கொள்ளி - கொஞ்சம் தள்ளி நில்லு


-------------------------------------------------------------------------

இயற்கையாய் வரும் மரணம் வரம். யாரும் எதிர்பாராத கணத்தில் இயற்கைச் சீற்றத்தால் வரும் மரணம் தடுக்க, தவிர்க்க இயலாத ஒன்று. விபத்தில் வரும் மரணத்தில் கூட இன்னொருவனின் தவறு இருக்கிறது.

அன்றெல்லாம் எங்கேயோ, புற்று நோயால் இறந்து போய் விட்டாராம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. இன்று... நண்பன் இறந்தான், நண்பனின் நண்பன் இறந்தான், ஒன்று விட்ட சித்தப்பாவின் நெருங்கிய உறவில் இறந்தார் என்பது வாடிக்கை...

தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு செத்துப் போவதில் என்னதான் சுகமோ?

சராசரியாக நூறில் ஒருவருக்கு புற்று நோய் தாக்கி வருகிறது என்பது, அதிர்ச்சிகரமான தகவல்.

கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு நண்பர்களை புற்று நோய்க்குப் பலி கொடுத்திருக்கிறேன். ஒருவருக்கு சிறுநீரகத்தில் புற்று, இன்னொருவருக்கு தொண்டையில் புற்று (தொடர்ச்சியாக இவர் பான்பராக்-ஐ உட்கொண்டதுதான் காரணம்). இருவருக்குமே வயது முப்பதுகளின் சமீபத்தில். ஒருவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை, இன்னொருவருக்கு திருமணமாகி ஆறு மாதம்.

இருவருமே, புற்று நோய் என்று தெரிந்த பின் தங்கள் மரணம் வரை தவித்த தவிப்பும், மரணத்தை தவிர்க்க போராடிய போராட்டமும், தவிர்க்க முடியாது என்றான பின் தள்ளிப்போட பதை பதைத்ததும், ஹீமோ தெரபி சிகிச்சை எடுத்து உடல் உபாதையில் பரிதவித்ததும் என்றும் மறக்கவே முடியாத துன்பம்.

ஒரு கட்டத்திற்கு மேல், வலியின் கொடுமை தாளாமல், இந்த விநாடியே மரணம் வந்து விடக்கூடாதா என்று கண்ணீரோடு கதறியதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.

வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.


நீங்கள் புகை பிடிப்பவரானால் அடுத்து பிடிக்க எடுக்கும் முதல் சிகரெட்டை உடைத்து எறியுங்கள். உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

51 comments:

பழமைபேசி said...

Have a great day,

from Iphone!

நிகழ்காலத்தில்... said...

\\“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை\\

எப்படி நொந்து சாகிறான் என்பது உற்றுக் கவனிப்போருக்கு தெரியும்.

தனக்குத்தானே கொள்ளி வைப்பதை நண்பர்கள் சிலரேனும் உணர்ந்தால் மகிழ்ச்சியே

விழிப்புணர்வும், ஆதங்கமும் கலந்த இடுகைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் கதிர்...

கலகலப்ரியா said...

ரொம்ப தேவையான இடுகை கதிர்.. பிரமாதம்.. இடித்துச் சொல்லுங்க..! கொள்ளிக்கு எதிரா கொடி புடிக்கிறதுக்கு நான் ரெடி..!!!

நிகழ்காலத்தில்... said...

இந்த இடுகையையும்
பாருங்க., பொருத்தமான படங்கள் உள்ளது...

வால்பையன் said...

உடைத்து எறிவதற்கு பதில் குடித்து எறிவது சுலபமாக இருக்கும் போலயே!

vasu balaji said...

/இவர் பான்பராக்-ஐ உட்கொண்டதுதான் /

3ம் வகுப்பு புத்தகம் கையில் வைத்திருந்த சிறுவன் ஒரு பொட்டலம் வாங்கிப் பிரித்து வாயில் கொட்டிக் கொண்டு போனான்.

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு நண்பரே ..!

புகை பழக்கத்தை விட்டது பற்றி என் பதிவு .

http://pirathipalippu.blogspot.com/2008/11/blog-post_10.html

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ நிகழ்காலத்தில்... said...
(ஆமாங்க சக்தி, வலி கொடூரமானது)

நன்றி @@ ப்ரியா
(தொடர் இடுகையாகக் கூட இது குறித்து எழுதலாம்)

Unknown said...

எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை, அதனால் நான் தூக்கி எறியத் தேவையில்லை. ஆனால் என் நண்பர்கள் பிடிக்கும்போது பிடுங்கி எறிந்தால் நட்பு தான் முறிந்துபோகும். பிடுங்கி எறிவதனால் பயனில்லை, அன்பால் வேண்டுமானால் மாற்ற நினைக்கலாம்.

க.பாலாசி said...

//நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.//

உண்மையான வரிகள்... சுருங்க சொல்லியிருக்கிறீர்கள்...அழத்தமான வார்த்தைகளில். தேவையான சிந்தனை இடுகை....

ஈரோடு கதிர் said...

//நிகழ்காலத்தில்... said...
இந்த இடுகையையும்
பாருங்க., //

சக்தி, பார்த்தேன்... அருமை

நன்றி @@ வால்பையன்
(அருண், எறிவது, எரிவது எது சுலபமாக?)

நன்றி @@ வானம்பாடிகள்
(நாசமாப்போற அரசாங்கம்தான் தடை பண்ணித் தொலைய மாட்டேங்குதேங்க)

நன்றி @@ ஜீவன்
(உங்கள் இடுகை படித்தேன். பெருமையாக இருக்கிறது)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராஜா
(சரிங்க அன்பாலதான் மாத்துங்களேன்)


நன்றி @@ பாலாஜி
(ஆமாம் பாலாஜி)

Rekha raghavan said...

குடிப்பவர்களை (சிகரெட்/மது) கண்டால் அவர்கள் என் நண்பராக இருக்கும் பட்சத்தில் இதை எப்போ விடப்போறிங்க என்று முதலில் கேட்டுவிடுவேன். அடுத்த முறை நான் பார்த்தால் என் எதிரில் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் (ஒரு மரியாதைக்காக). அந்த வேளையிலாவது அதை தடுத்தோமே என்று சின்ன மகிழ்ச்சி. நல்ல பதிவு நண்பரே!

ரேகா ராகவன்.

பிரபாகர் said...

//உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...//

உடைத்து எறியப் போய் நட்பினை உடைத்திருக்கிறேன்... தேவையான ஒரு பதிவு. மிக அருமை கதிர்....

பிரபாகர்.

நிலாமதி said...

உள்ளத்தால் உணரப்படவேண்டிய வரிகள். நல்லதொரு பதிவு ....திருந்துபவர்கள் திருந்தட்டும் .பாராட்டுக்கள்.

Ashok D said...

ஒரு நாளைக்கு ஒன்னுதான் அதுக்கும் தடான்னா .. எப்படிங்க?

நல்ல பதிவுங்க.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

விடுவது கஷ்டம் என்றால் ,விடவைப்பது அதைவிடக் கஷ்டம் .

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விழிப்புணர்வு இடுகை... வாழ்த்துகள்

விஜய் said...

நல்ல பதிவுதான் ஆனாலும் மறுக்கபட்வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. முதலில் புகை மட்டும் carcinogenic கிடையாது. பல காரணங்கள் உண்டு. ஏன் நாம் சாப்பிடும் சாப்பாடே விஷமாய் மாறிக்கொண்டு வருகிறது. இயற்கை விவசாய முறைக்கு மாறுவதே சிறந்த வழி. இல்லையேல் பெயர் தெரியாத பல வியாதிகள் உறவாகும்.

Jerry Eshananda said...

ஐ ஹேட் சுமொக்கிங் அண்டு ச்மொகர்ஸ் .

கபிலன் said...

நல்ல பதிவு தான் !
ஆனா, எனக்கு இந்த மாதிரி சொல்றது பிடிக்காதுங்க..! ஏன்னு தெரியல...
நண்பர் என்கிற முறையில் சொல்வதால், உங்கள் அக்கறையை எண்ணி சந்தோஷப்படுகிறேன்.!

Unknown said...

படிக்கும் போது நல்லாருக்கு, நடைமுறைப்படுத்துரதுல கொஞ்சம் சிரமம்தாங்க..

:-(

நசரேயன் said...

//நீங்கள் புகை பிடிப்பவரானால் அடுத்து பிடிக்க எடுக்கும் முதல் சிகரெட்டை உடைத்து எறியுங்கள். உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...//

நானும் நண்பனும் பீடி தான் குடிக்கிறோம்

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை கதிர்

வெட்கமும் அவமானமும் மட்டுமே மிஞ்சுகிறது என்னிடம்...

Anonymous said...

சிகரெட் பழக்கத்தை விட்டு விடச்சொன்னால் , நாங்கள் உங்களை குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோமா என்று ஒரு கேள்வியும் வரும். அவசியமான பதிவு.

ஹேமா said...

தனக்குத் தானே கொள்ளி வைத்துக்கொள்வது என்பது பொருத்தமே.ஒவ்வொரு சிகரெட்டுக்கும் தன் ஆயுளின் ஒவ்வொரு நிமிடத்தைக் குறைத்துக்கொள்வதாகவும் சொல்வார்கள்.நல்ல பதிவு கதிர்.

Anonymous said...

விழிப்புணர்வு தரும் பதிவு..இனி உரிமையோடு கண்டிப்பும் கொண்டு தான் நாம் நம் நண்பர்களை திருத்தனும் என்பது புரிந்தது...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராகவன்
(ஏதோ முடிந்த வரையில் சில சிகரெட்டை குறைக்கலாம்)

நன்றி @@ பிரபாகர்
(உடைத்து எறியுங்கள் என்பது உரிமையாக சொல்வது. நாம் சொல்வொம் விடுவதும் விடாததும் அவரவர் விருப்பம்)

நன்றி @@ நிலா


நன்றி @@ Ashok
(இஃகிஃகி... இப்படி ஒரு சமாளிப்பா... ம்ம் நடத்துங்ணா)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஸ்ரீ
(நன்றாக சொன்னீர்கள்)

நன்றி @@ ஞானசேகரன்

நன்றி @@ கவிதை
(நண்பரே... புகை மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. புகை முக்கியக் காரணம் என்பதுதான் என் கருத்து. உணவே விஷமாக மாறியிருப்பதும் உண்மைதான்)

நன்றி @@ ஜெரி ஈசானந்தா
(ஈஸ் இட்)

நன்றி @@ கபிலன்
(பிடிக்கலைனா... சிகரெட்ட விட்டுருங்க)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பட்டிக்காட்டான்
(எல்லாமே அப்படிதானுங்க)

நன்றி @@ நசரேயன்
(சரி கைதட்டிடுவோம்)

நன்றி @@ வசந்த்
(அப்படியா!)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சின்ன அம்மிணி
(சொல்வது நம் கடமை என்று நினைப்போம்)

நன்றி @@ ஹேமா
(ஆமாங்க)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை கதிர். புகைப்பழக்கம் இன்றைக்குப் பெருமைப்படக்கூடிய விசயமாகிவிட்டது. என்ன செய்ய?

கண்ணகி said...

நல்ல பதிவு.. ஊதற சங்கை ஊதுங்க. கேட்பவர்கள் கேட்கட்டும். கேளாதவர்கள் படட்டும். அப்புறம் என் பேரை வாத்துக்கோழி என்று சரியாகச் சொன்ன ஆள், நீங்கதான். எங்ககூட்டுக்காரர் எனக்கு வாய்த்த செல்லப்பேர் அது. அதுக்கொரு நன்றி

பழமைபேசி said...

மாப்பு, பிறந்த நாள் வாழ்த்துகள்! எந்நாளும் பொன்னாளாய் மலர்ந்து, களித்திட வாழ்த்துகிறோம்!!

மணிஜி said...

தேவையான ஒரு பதிவு. மிக அருமை கதிர்....

tamil missing sorry..have a great day..any treat? i may come to erode on saturday

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தமிழ்

நன்றி @@ செந்தில்வேலன்
(பந்தாவானது தான் கொடுமையே)

நன்றி @@ கண்ணகி
(அது ஏங்க வாத்துக்கோழினு பெயர்)


நன்றி @@ பழமைபேசி
(மாப்பு மிக்க நன்றி)

நன்றி @@ தண்டோரா
(வாருங்கள் சந்திப்போம்)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல இடுகை நண்பா.. நானும் இது பற்றி தனக்குத் தானே கொள்ளி என்று ஒரு இடுகை எழுதி இருக்கிறேன்

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

மாதேவி said...

"தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு" சரியாகச் சொன்னீர்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டால் மகிழ்ச்சிதான்.

ஷண்முகப்ரியன் said...

புகைப் பழக்கத்தை விட முடியவில்லை என்று ஓஷோவிடம் ஆலோசனை கேட்கும் ஒருவருக்கு அவர் சொன்னதின் சாராம்சம் நினைவுக்கு வருகிறது,கதிர்.

’சிகரெட்டை நீஙகள் முழுமையாக்ப் பிடியுங்கள்,அதனை விட்டு விடுவீர்கள்’ என்றார் ஓஷோ.

பற்ற வையுங்கள்.புகையை இழுங்கள்.அதனை மட்டும் ரசியுங்கள்! வேறெதனையும் சிந்திக்காதீர்கள்.

இப்போது சிகரெட் உங்களுக்குப் படு சிரமமாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.

எதில் முழுமை அடைகிறீர்களோ அதிலிருந்துதான் விடுதலையும் கிடைக்கும்!
சிகரெட்டை இழுப்பதை எல்லோரும் சப்கான்ஷசாகத்தான் செய்கிறார்கள்,பல வேளைகளில் நாம் தேவை இல்லாமல் உண்பதைப் போல.

அடிப்படையில் இதெல்லாம் மூலாதாரத்தில் நடக்கும் சிக்கல் என்பார் இன்னொரு இடத்தில்.

சளசளவென்று பேசுவது,சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பது,சூயிங் கம் மெல்வது,புகை பிடிப்பது எல்லாம் ஒன்றே.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
(தேடி வாசிக்கிறேன்)

நன்றி @@ துபாய் ராஜா

நன்றி @@ மாதேவி

நன்றி @@ ஷண்முகப்ரியன்
(மிகச் சிறந்த விளக்கம். நன்றி)
//சளசளவென்று பேசுவது,சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பது,சூயிங் கம் மெல்வது,புகை பிடிப்பது எல்லாம் ஒன்றே.//

சரிதான்

S.A. நவாஸுதீன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா

ஆரூரன் விசுவநாதன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்....


அன்புடன்
ஆரூரன்

RAMYA said...

நல்ல அருமையான இடுகை. சரியான நேரத்தில் சரியான விதத்தில் கூறி இருக்கிறீர்கள்!

RAMYA said...

//
வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.
//

அருமை! அருமை நல்லா இருக்கும்போது நல்லதையே நினைத்து நல்லவைகளையே செய்து கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டால் என்றுமே விடியல்தான் கதிர்.

ராமலக்ஷ்மி said...

//“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை.//

வருத்தம் தரும் வாதங்கள்:(!

//ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.//

உணர்ந்தால் உத்தமம்.

//ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.
//

உணர்வார்களா?

புகையைப் பற்றிய எனது பதிவு:'புகை'ச்சல்

அத்திரி said...

நல்ல அறிவுரையான பதிவு

பின்னோக்கி said...

இப்பொழுது புகைப்பிடிக்கும் பழக்கம் கொஞ்சம் கம்மியான மாதிரி தான் தெரிகிறது (பொது இடங்களிலாவது).

ஆனால், பஸ், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, லாரியிலிருந்து வரும் புகையினால், புற்று நோய்க்கான வாய்ப்பு மிக அதிகம்.

Unknown said...

I request these four idiots on this no smoking day to stop manufacturing cigarettes and change over to any healthy products as they are doing now like biscuits, wheat flour, tractors etc. ITC Limited,VST Limited,GTC Industries Limited and Godfrey Phillips India Limited the major four cigarette manufacturing companies in India.

Prapavi said...

Nice

Unknown said...

மரணம் அதுவாக வரவேண்டும்....தீயப்பழக்கத்தால் நோயில் வருவது மிககொடுமை...இந்த பதிவை படித்து யாரேனும் மனம் மாறினால் வெற்றி உங்க எழுத்துக்கு....