காக்கை கூட்டமும் கண்தானமும்


இன்னும் நகரத்து சாயல் அதிகம் படியாத கிராமம், நகரத்தில் மகன் வீட்டிற்கு சென்ற பாட்டி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதால், நகரத்தில் அடக்கம் செய்ய விருப்பமில்லாமல், தன் சொந்த கிராமத்திற்கே உடலைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.

இறந்தவுடன் தகவல் வந்தது கண்தானம் செய்ய விரும்புவதாக. உடனே கண்வங்கி பிரதிநிதிகளுடன் விரைந்து சென்றோம். இன்னும் உடல் வந்து சேரவில்லை. இரவு பதினொரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் அங்கே குழுமியிருந்தனர். பத்து ஆண்டுகளாக நகரத்து வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுப்போன மனதிற்கு ஆச்சரியமாக இருந்தது.

சில இளவட்டங்கள் சட சடவென அந்த வீட்டை சுத்தம் செய்யவும்,

“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”

“இருபது லிட்டர் பால் வேணும்னு சொல்லீறு”

“ஏப்பா.. லைட்டுக்கு சொல்லீட்டீங்களா?”

“சமையக்காரனுக்கு சொல்லிட்டேன், காத்தால டிபனுக்கு”

என உரிமையோடு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.

நாங்கள் மட்டும் அந்த சூழலுக்கு கொஞ்சம் புதுமையாக தெரிந்தோம். “யார் என” விசாரித்து “கண் தானம் பெற வந்திருக்கிறோம்” என்றவுடன், எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும், தங்களுக்குள் மெலிதாக பேசுவதுமாக இருந்தனர்.

சிறிது நேரத்தில் பாட்டியின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு மேல் ஆண்களும், பெண்களுமாக கூட்டம் பிதுங்கியது. ஒருவழியாக உடலை வீட்டினுள் வைத்து சில பூசைகள் செய்த பின் கண்களை எடுக்க அனுமதித்தனர். செவிலியர்கள் தங்கள் சீருடையுடன் செல்வதைப் பார்த்ததும் எல்லோர் பார்வையிலும் ஒரு ஆச்சரிய மின்னல்

“அட கண்ண தானம் பண்றாங்கப்பா”

“அட நாளைக்கு சாம்பலா போற ஆயா கண்ணு, இன்னொருத்தருக்குத்தான் பிரயோசனப்பட்டுட்டு போகட்டுமே”

“ஏனுங்க நான் எம்பட கண்ண தானம் பண்றதுன்னா என்ன பண்ணனுங்க”

“ஏ... மாமா அவசரப்படறே... நீ செத்துப்போனா நாஞ் சொல்லியுடறேன் அவிகளுக்கு”

இப்படி ஆச்சரியமும், கொஞ்சம் நகைப்புமாக கூட்டம் கலகலத்தது.

வயதானவர்களின் மரணம் ஒரு விடுதலையாக பார்க்கப்படுகிறது. கீழே விழுந்தோ அல்லது நோய் கண்டு கட்டிலில் கிடந்து சிரமப்படாமல் வரும் மரணம் கடவுளின் பரிசாக, நல்ல சாவாக பார்க்கப்படுகிறது.

“ஆத்தாவுக்கு நல்ல சாவுப்பா... கண்ண வேற கொடுத்திட்டுப் போகுது பாரேன்”
இது மாதிரியான பேச்சுகள் மெலிதாய் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஒரு வழியாக கண்களை தானம் எடுத்துக்கொண்டு புறப்படும் போது,

“சார்... உங்க செல் நெம்பர் கொடுத்துட்டு போங்க, ஊர்ல இருக்கிற, எல்லாம் பெருசுக கண்ணையும் புடுங்கிக் கொடுத்திடறோம், முதல்ல எங்க பெரிய பாட்டி கண்ணுதான்” ஒரு குறும்பு பிடித்த இளசு

“அய்யோ... எங் கண்ண குடுக்கமாட்டேன், மேல் லோவத்துக்குப் போன கண்ணு தெரியவேணுமில்ல” மறுக்கும் பாட்டி

“அட கிறுக்குப் புடிச்ச கெழவி, செத்தப்பறம்... நீ என்ன சொல்றது, உம் பசவ புள்ளைவ செரின்னு சொன்னா, அவிங்க வந்து எடுத்துட்டு போயிருவாங்க, நீ கண்ணுக் குடுத்தீனா... உம்பட பிள்ள குட்டிவீளுக்கு புண்ணியஞ் சேரும்” அதே வயதொத்த பாட்டி உரிமையாகச் சொல்ல...

நாங்கள் கிளம்பும் போது கிட்டத்தட்ட நள்ளிரவு பனிரென்டு மணியிருக்கும், கூட்டம் வந்து கொண்டேயிருந்தது. பந்தல் போட குழிகள் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. நாற்காலிகள் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

மரணம் நிகழ்ந்த வீடு, பரபரப்பாக இருந்தது, விடிய விடிய அந்த கூட்டம் கலைவதாக தெரியவில்லை. எண்ணற்ற கிண்டல்கள், நகைப்புகள், கதைகள் விடிய விடிய பேசித் தீர்க்கப்படும். துக்க நிகழ்வுகளை தங்கள் வீட்டு துக்கமாக பார்த்து, கலந்து கொண்டு உடன் இருக்கும் அந்த கிராமத்து மனிதர்களின் சீண்டலும், விளையாட்டுப் பேச்சும் மனதிற்குள் மெலிதாக இனித்தது.

படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்

(கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் 55க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்கள் நகரத்து வாசனை இன்னும் அதிகம் படராத உள்ளடங்கிய கிராமங்களிலிருந்துதான்)


அந்த கிராமத்து மக்களைப் பார்த்தபோது, உணவு கிடப்பதைக் கண்டோ அல்லது ஒரு காகம் இறந்து கிடப்பதைக் கண்டோ, ஒரு காகம் கரைந்தவுடனே பலநூறு காக்கைகள் அந்த இடத்தில் சட்டென ஒன்று கூடுவதுபோல் உணர்ந்தேன்.


விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு உச்சமான அலைபேசியின் மின் காந்த அலைகளால் நகர்ப்புறங்களில் காக்கைகள் அற்றுப் போய்விட்டதாக சமீபத்தில் படித்ததாக நினைவு..............
காக்கைகள் மட்டுமா...!!!




-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

56 comments:

நாடோடி இலக்கியன் said...

நெகிழ்ச்சியான,அவசியமான பதிவுங்க கதிர்.

தமிழ் அமுதன் said...

//“ஆத்தாவுக்கு நல்ல சாவுப்பா... கண்ண வேற கொடுத்திட்டுப் போகுது பாரேன்”//

உயிருள்ள வரிகள் ..!

//கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் 55க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்கள் நகரத்து வாசனை இன்னும் அதிகம் படராத உள்ளடங்கிய கிராமங்களிலிருந்துதான்//

ஆஹா ....! பாராட்டுக்கள் ..!

எங்கள் ஊரும் ஒரு நடுத்தர சிறிய நகரம் தான்..! அங்கும் அரிமா சங்கத்தின் முயற்சியால் பல கண் தானங்கள் பெறப்பட்டுள்ளன.!

வாழ்க அரிமா சங்கம் ..! உங்களுக்கும் என் வாழ்த்துகள்..!

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றிங்க கதிர் அண்ணே. கிராமங்களில் இன்னமும் மனிதத்தன்மை மிச்சம் இருக்கின்றது என்பது நிஜம்.

// கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.//

வாழ்த்துகள் கதிர் அண்ணே.

இளவட்டம் said...

அருமையான பதிவு சார்.
வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாடோடி இலக்கியன்

நன்றி @@ ஜீவன்
(மிக்க மகிழ்ச்சி ஜீவன்)

நன்றி @@ இராகவன் நைஜிரியா
(ஆமாங்க இராகவன்)

நன்றி @@ இளவட்டம்

கலகலப்ரியா said...

//
“சார்... உங்க செல் நெம்பர் கொடுத்துட்டு போங்க, ஊர்ல இருக்கிற, எல்லாம் பெருசுக கண்ணையும் புடுங்கிக் கொடுத்திடறோம், முதல்ல எங்க பெரிய பாட்டி கண்ணுதான்” ஒரு குறும்பு பிடித்த இளசு

“அய்யோ... எங் கண்ண குடுக்கமாட்டேன், மேல் லோவத்துக்குப் போன கண்ணு தெரியவேணுமில்ல” மறுக்கும் பாட்டி//

=))..

//மரணம் நிகழ்ந்த வீடு, பரபரப்பாக இருந்தது, விடிய விடிய அந்த கூட்டம் கலைவதாக தெரியவில்லை. எண்ணற்ற கிண்டல்கள், நகைப்புகள், கதைகள் விடிய விடிய பேசித் தீர்க்கப்படும். துக்க நிகழ்வுகளை தங்கள் வீட்டு துக்கமாக பார்த்து, கலந்து கொண்டு உடன் இருக்கும் அந்த கிராமத்து மனிதர்களின் சீண்டலும், விளையாட்டுப் பேச்சும் மனதிற்குள் மெலிதாக இனித்தது.//

இதமான இடுகை..

நிகழ்காலத்தில்... said...

\\\கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் 55க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்கள் நகரத்து வாசனை இன்னும் அதிகம் படராத உள்ளடங்கிய கிராமங்களிலிருந்துதான்\\

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்

தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்

தங்களின் இந்த பணி போற்றத்தகுந்தது,

பெருமைப்படுகிறேன்

வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

தங்களின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

vasu balaji said...

/“அய்யோ... எங் கண்ண குடுக்கமாட்டேன், மேல் லோவத்துக்குப் போன கண்ணு தெரியவேணுமில்ல” மறுக்கும் பாட்டி/

=))
/“அட கிறுக்குப் புடிச்ச கெழவி, செத்தப்பறம்... நீ என்ன சொல்றது, உம் பசவ புள்ளைவ செரின்னு சொன்னா, அவிங்க வந்து எடுத்துட்டு போயிருவாங்க, நீ கண்ணுக் குடுத்தீனா... உம்பட பிள்ள குட்டிவீளுக்கு புண்ணியஞ் சேரும்” அதே வயதொத்த பாட்டி உரிமையாகச் சொல்ல.../

அய்யோ சாமி முடியல.

/கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். /

பாராட்டுகள் கதிர். அருமையான அவசியமான இடுகை.

Rajan said...

மிக ஆரோக்யமான பதிவு;

வாழ்த்துகள்....

பிரபாகர் said...

இதுபோன்று சமுதாய விழுப்புணர்வு பதிவுகளை என் அருமை நண்பர் கதிரிடமிருந்து மட்டும்தான் அதிகம் வருகிறது. கண்தானம் பற்றிய விழிப்புணர்வு இதழ் ஒன்றை வெளியிட்டால் முத்தாய்ப்பாய் இச்சம்பவத்தை வெளியிடலாம்..

நன்றி கதிர், மிகவும் பயனுள்ள இடுகை.

பிரபாகர்.

velji said...

உங்கள் பணிக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள் நண்பரே.

Pradeep said...

தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

கண்ணகி said...

மனித நேயத்துடன் சிந்திப்பதும், செயல்படுவதும்............ நீங்கள் ஒரு உதாரண மனிதர்

அகல்விளக்கு said...

I don't have any exact or such words to express my feelings...

Its a feel.
That cannot be explained.

Thanks for sharing!

Unknown said...

சார், உங்களுடைய ஒவ்வொரு பதிவுமே அவசியமான பதிவாகவே இருக்கிறது.

Kumky said...

கதிர்., எழுதிய விடயம் மிகவும் கணம்.
அதை நீங்கள் நீரோடை போல சொல்லிச்சென்றிருக்கும் விதம் மிக அருமை.
கடைசியாக சொல்லியிருப்பதுதான் உச்சம்...ஆமாம் காக்கைகள் மட்டுமில்லைதான்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ சக்தி (நிகழ்காலத்தில்)
(திருப்பூர்ல யாராவது இறந்து கண்தானம் செய்யனும்னா தகவல் கொடுங்க)

நன்றி @@ முரளிகண்ணன்

நன்றி @@ வானம்பாடிகள்
(பாட்டிகள் உரிமையா பேசும் கிண்டல்களில் வடிவேலு கூட சில சமயம் திணறனும் போங்க)

நன்றி @@ rajan RADHAMANALAN

நன்றி @@ பிரபாகர்
(கண்தானம் பற்றிய பெரிய ஆசைகள் உண்டு பிரபா, முயற்சிப்போம்)

நன்றி @@ velji

நன்றி @@ Pradeep

நன்றி @@ வாத்துக்கோழி
(அக்கா, ஊத்துகுளியில யாராவது இறந்து கண்தானம் செய்யனும்னா தகவல் கொடுங்க)


நன்றி @@ அகல் விளக்கு

நன்றி @@ ராஜா | KVR

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கும்க்கி
(ஆமாங்க கும்க்கி, காக்கைகள் மட்டுமல்ல, இன்னும் நிறைய)

Jerry Eshananda said...

kathir, iam very proud of you,and you are such a great personality.

மணிநரேன் said...

நெகிழ்ச்சியான இடுகை.
தொடரட்டும் தங்கள் நற்பணி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மிக நல்ல இடுகை.உங்கள் நற்பணியைத் தொடருங்கள்.நானும் செய்திருக்கிறேன்.

தீப்பெட்டி said...

நல்ல பதிவு..
தொடரட்டும் உங்கள் நற்பணி..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெரி


நன்றி @@ மணிநரேன்

நன்றி @@ ஸ்ரீ
(மிக்க மகிழ்ச்சி ஸ்ரீ)

நன்றி @@ தீப்பெட்டி

காமராஜ் said...

அருமை கதிர் மனசுக்கு இதமாக இருக்கிறது.
கிராமங்களில் இன்னும்வாழ்கிற மனிதாபிமானம் பெரிது.

Unknown said...

///விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு உச்சமான அலைபேசியின் மின் காந்த அலைகளால் நகர்ப்புறங்களில் காக்கைகள் அற்றுப் போய்விட்டதாக சமீபத்தில் படித்ததாக நினைவு..............
காக்கைகள் மட்டுமா...!!!///

வயித்துக்கு மேலே, கழுத்துக்குக் கீழே இடதுபக்கமா ஏதோ வலி சகா..

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery

ஷண்முகப்ரியன் said...

சொற்களால் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான், செயல்களாலும் பணிபுரியும் உங்களைக் கண்டு பெருமைப் படுகிறேன் கதிர்.

வாழ்க உங்கள் தொண்டுள்ளம்.

பழமைபேசி said...

நல்ல கேள்வியும் சிந்தனையும், வாழ்த்துகள்!

ஈ ரா said...

சாதாரணமாக கிட்ட, தூரப் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சில மணிநேரங்கள் முக்கியமான செயல்களில் ஈடுபடும்போது கண்ணாடி இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அப்படியிருக்க வாழ்நாள் முழுதுமே கண் இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு கொடுமை?

உண்மையிலேயே கண்தானம் செய்பவர்கள்தாம் பிறரது வாழ்வில் விளக்கேற்றி வெளிச்சம் தருகிறார்கள்...

உங்களைப் போன்ற நல்லவர்களின் பங்களிப்பால் இத்தொண்டு மென்மேலும் பிரகாசம் அடையட்டும்....

வாழ்த்துக்கள் கதிர்,

இந்த பதிவிலேயே உங்களை தொடர்பு கொள்ளும் வழியையோ அல்லது வேறு ஏதேனும் தொடர்பு தகவலையோ கொடுத்தால் நன்றாக இருக்கும்..

நன்றி

அன்புடன்

ஈ ரா

யாசவி said...

touching and nice

:)

சந்தனமுல்லை said...

மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்!
பகிர்வுக்கு நன்றி! மிகவும் நல்ல இடுகை!!

ப்ரியமுடன் வசந்த் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் கதிர்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ காமராஜ்
(மனிதாபிமானமே...)

நன்றி @@ Kiruthikan Kumarasamy

நன்றி @@ ஷண்முகப்ரியன்

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ ஈ ரா
(தங்கள் ஆர்வம் பெரு மகிழ்ச்சிக்குரியது. என் அலைபேசி / மின் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்)

நன்றி @@ யாசவி

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான சிந்தனைப் பகிர்வு கதிர்.

என் சின்னத்தாத்தா, தனது 92 வயதில் கண்தானம் செய்தார். அவரது உயிலில் என்ன எழுதியிருந்தது, "என் கண்கள் சுதந்திர இந்தியாவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்". விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர். அவரது கண்கள் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் இரு சிறுமிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

//படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//

நல்ல விழிப்புணர்ச்சிகாண பதிவு தோழரே

V.N.Thangamani said...

கிராமத்திலும் நகரத்திலும் மனிதம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனால் அது செய்தியாக வருவதில்லை. தப்புகளும் தவறுகளுமே உடகத்தில் செய்தியாகிறது. நன்றி கதிர். ஒரு நேயத்தை செய்தியாக்கியதற்கு... இவன் வி.என். தங்கமணி

தமிழ் நாடன் said...

அருமையான பகிர்வு. மனிதம் இன்றும் என்றும் வாழ்வது கிராமங்களில்தான்.

க.பாலாசி said...

//“பந்தல் காரனுக்கு சொல்லப்பா”
“இருபது லிட்டர் பால் வேணும்னு சொல்லீறு”
“ஏப்பா.. லைட்டுக்கு சொல்லீட்டீங்களா?”
“சமையக்காரனுக்கு சொல்லிட்டேன், காத்தால டிபனுக்கு”
என உரிமையோடு ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.//

இதேபோல எங்கள் கிராமத்திலும் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. நல்லதுகெட்டது என்றால் தெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் ஒவ்வொரு வேலையை இழுத்துபோட்டு செய்துகொண்டிருப்பார்கள்.

//படித்தவர்கள் மத்தியிலேயே கண்தானத்திற்கு பல சொத்தை மறுப்புக் காரணங்கள் இருக்கும் நிலையில் “வீணாகப் போவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே” அல்லது “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//

உண்மைதான்.

இதற்கான உங்களின் முயற்சியும் பாராட்டுக்குறியதே.

நல்ல இடுகை...

புலவன் புலிகேசி said...

// “புண்ணியமா இருக்கட்டுமே” என்ற எண்ணத்தில் கண்தானம் கொடுக்க ஆர்வமாக இருக்கும் கிராமத்து மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்//


என்னுடைய வணக்கங்கள்...மனிதநேயம் கிராமங்களில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.......நல்ல இடுகை....

பின்னோக்கி said...

கண் தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Maheswaran Nallasamy said...

நல்ல பதிவு ..........

நாஞ்சில் நாதம் said...

// கடந்த ஆண்டு முதல் எங்கள் அரிமா சங்கத்தின் கண் தானக் குழுத் தலைவராக இது வரை 68 நபர்களின் கண்களை தானமாக பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.//

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

இதுக்கு எவன்யா மைனஸ் ஓட்டு குத்தியது!

கதிரு படா பிரபலம் ஆகிட்டாரு போல!

தல நம்ம கண்ணையும் நோண்டிக்கோங்க!

ஜோதிஜி said...

உங்களின் ஒரு மனிதாபிமான செயல் மட்டும் தானே வெளிப்படுத்தி உள்ளீர்கள்? மற்ற விசயங்களை அடக்கத்தின் காரணமாக அடக்கி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். சரிதானே? வாழ்த்துக்கள். ஊத்துக்குளியில் வாழ்ந்து கொண்டுருப்பவர் கூட உங்களை உரையாடலின் போது வாழ்த்துவது இதனால் தானோ?

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்
(சின்னத்தாத்தா செய்தது பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டியது)

நன்றி @@ ஞானசேகரன்

நன்றி @@ VN.THANGAMANI
(பல நேரங்களில் தப்புகளும் தவறுகளுமே உடகத்தில் செய்தியாகிறது)


நன்றி @@ தமிழ் நாடன்

நன்றி @@ பாலாசி

நன்றி @@ புலவன் புலிகேசி


நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ Maheswaran Nallasamy

நன்றி @@ நாஞ்சில் நாதம்

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ ஜோதிஜி.தேவியர் இல்லம்

நசரேயன் said...

அவசியம் தலைவரே

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான இடுகை நண்பா.. கடைசி வரிகளின் உண்மை நெஞ்சை சுட்டெரிக்கிறது..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமையான பதிவு கதிர்.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு.

அருமை

Stalin Felix said...

அருமையான பதிவு

Anonymous said...

Nice post sir

Anonymous said...

dear kathir,

keep involvimg in thr nice project . keep osting . it is good.

N.Senapathy
advocte erode-11

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை அருமை - கண் தானம் செய்வது கிராமப்புறங்களில் அதிகம் என்ற செய்தி மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது. அரிமா சங்கத்தில் கண் தானம் பெறும் குழுவிற்குத் தலைவராக இருந்து ஆற்றிய செய்லகளுக்கு பாராட்டுகள்.

துக்கம் சூழும் நிலையிலும் - முதியவர்களிண் சாவுகள் விழாக்களாகத்தான் கொண்டாடப்படுகின்றன. கிராமச் சூழ்நிலை அனுபவித்தி எழுதப்பட்டிருக்கிறது. படித்து ரசித்து மகிழ்ந்தேன்.

இறுதி வரி : காக்கைகள் மட்டுமா ..... நெஞ்சம் வலிக்கிறது கதிர்

நல்லதொரு இடுகை நல்லதொரு செயலைப் பற்றி - நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

பல்பம் said...

நன்றி கதிர் அண்ணா !!!

Rathnavel Natarajan said...

ஈரோடு கதிர் சார் - உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம்.
அருமை சார் - கண் தானம்.