சிதையும் உண்மைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு நானும் என் மகளும் முன்னிரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தோம், எங்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தின் சைரன் ஒலி கேட்டது,உடனே என் மகள் "அப்பா அது ஆம்புலன்சா" என கேட்டாள், பின்னால் திரும்பி பார்த்தபோது ஒரு காவல் துறை வாகனமும், ஒரு அமைச்சரின் வாகனமும் வந்தன. நான் "இல்லை அது போலீஸ் வண்டி" என்றேன், உடனே அவள் "முதல் வண்டி போலீஸ், அதற்கு பின்னால் வருவது யார்" என்றாள், அப்போது அவள் வயது 5, நான் அமைச்சரின் வாகனம் என்று சொன்னாள் புரியுமா எனும் சந்தேகத்தோடு அவளிடம் "அது மினிஸ்டர் கார், மினிஸ்டர் வந்தால் போலீசும் கூட வரும்" என்று சொன்னேன், அடுத்த விநாடி அவள் "மினிஸ்டர்னா கெட்டய்விங்க, கொலகாரய்ங்க" என்று சொன்னபோது அதிர்ச்சியின் உச்சத்தில் சட்டென வாகனத்தை நிறுத்தினேன். அதிர்ச்சி மிகுந்த குரலில் "ஏய்.. என்ன குட்டி சொல்றே, யார் உனக்கு இப்படி சொன்னது, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என்றேன், "ம்ம் நான் டிவியில் பார்த்தேன்" என்றாள், "அப்படியெல்லாம் இல்லை, அப்படி சொல்லக்கூடாது" என்ற சொத்தை சமாதானத்தோடு, இறுகிய மனதோடு வாகனத்தை கிளப்பினேன்....


சமீபத்தில் ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சமீப காலமாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி நிறைய கற்றுக்கொடுத்து வருகிறார். குழந்தைகளின் நுண்ணறிவு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மேற்குறிப்பிட்ட நிகழ்வை கூறினேன். அப்போது அவர் கூறியதை கேட்ட பொழுது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது...சில வருடங்களுக்கு முன்பு ஒரு அரசியல் தலைவர் பற்றி தன் மகனிடம் சொல்லும் போது, அவர் நிறைய ஊழல் செய்கிறார், மக்கள் மேல் கவனம் இல்லை என்று எதிர்மறையான உண்மைகளை சொல்லியிருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் மகன் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அந்த அரசியல் தலைவரின் கால்களில், அதே கட்சியைச் சார்ந்த பெரிய, பெரிய தலைவர்கள் கடவுளை போல் சுற்றி வந்து காலில் விழுந்து கும்பிடுவதை பார்த்திருக்கிறான். அந்த நிகழ்வின் உச்சகட்டமாக அவர்களின் உறவினரும், அந்த பகுதியைச் சார்ந்த ஒரு அமைச்சர் ஒருவர் அந்த தலைவரின் காலில் விழுவதை கண்டு அதிர்ச்சியோடு தன் அம்மாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறான்... "ஏம்மா.... நீ அந்த தலைவர் மிக மோசம் என்றாய், ஆனால் இத்தனை பேர் அவர் கால்களில் விழுந்து வணங்குகிறார்கள், அதுவும் நம்ம சொந்தக்கார தாத்தா நல்லவர்தானே, அவரும் கூட காலில் விழுந்து கும்பிடும் போது, நீ சொன்ன மாதிரி அந்த தலைவர் எப்படி மோசமானவராக இருக்க முடியும். நீதான் தப்பு தப்பாக எனக்கு சொல்லிக்கொடுக்கிறாய்" என்று வருத்தப்பட்டிருக்கிறான். என்ன சொல்வதென்று தெரியாமல் இவரும் விழித்திருக்கிறார்.


குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முனையும் போது பெற்றவர்களுக்கு விழிபிதுங்குகிறது. புறக்கூறுகள் வேகமாக, வித்தியாசமாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. சில நேரம் சரியாக, பல நேரம் தவறாக.... குழந்தைகள் கேட்கும் அசாத்தியமான கேள்விகள் பல நேரம் அடி வயிற்றில் பயத்தை கிளப்புகின்றன. சில நேரம் ஆச்சரியத்தை கிளப்புகின்றன.


பல நேரம் நாம் சொல்லும் உண்மை அவர்களுக்கு பொய்யாக தெரிகிறது, அவர்கள் சொல்லும் உண்மை நமக்கு பொய்யாக தெரிகிறது.




குறிப்பு: மீள் இடுகை


-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

21 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், நீங்கள் சொல்வது உண்மை தான்.

அவர்களுக்குப் பதில் சொல்வதே ஒரு பெரிய கலை தான். கவனமாக ஆனால் சாதுர்யமாக பதில் சொல்ல வேண்டும் :)

Ashok D said...

உண்மையில் குழந்தைகளிடமிருந்து கற்றவையே அதிகம்.

Rekha raghavan said...

சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு போகிற போக்கில் பதில் சொல்லாமல் தெரியாதவைகளுக்கு பிறகு சொல்வதாக சொல்லி அதற்கு பிறகு நன்கு சிந்தித்து நமக்கு சரியெனப் பட்டதையே சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் தாக்கத்தை தவிர்க்கலாம். அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

vasu balaji said...

/பல நேரம் நாம் சொல்லும் உண்மை அவர்களுக்கு பொய்யாக தெரிகிறது, அவர்கள் சொல்லும் உண்மை நமக்கு பொய்யாக தெரிகிறது./

சரியாச் சொன்னீங்க.

கொஞ்சம் யோசிச்சி அவங்களுக்கு புரியறா மாதிரி சொல்லப் போனாலே சந்தேகம் வந்துடுது அதுங்களுக்கு.

ரோஸ்விக் said...

நீங்கள் கூறியது போல, நம்மை விட நம் புறக்கூறுகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த புறக்கூறுகளின் பங்கு தாரர்களான நாமும், நாம் உருவாகிய சமுதாயமும் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததிக்கு நல்ல பல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

நிலாமதி said...

இந்தக்கால குழந்தைகள் மிகவும் வேகமாக புரிந்து கொள்கிறார்கள். வாய்ப்புகள் அதிகம் .நாம் தான் அவதானமாக பக்குவமாக சொல்லிக்கொடுக்கணும்.
பதிவுக்கு நன்றி.

கலகலப்ரியா said...

பார்த்துக்குங்க..

Jerry Eshananda said...

தலைப்பு "நச் "

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்

நன்றி @@ Ashok

நன்றி @@ RAGHAVAN

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ ரோஸ்விக்

நன்றி @@ நிலா

நன்றி @@ ப்ரியா

நன்றி @@ ஜெரி

ரவி said...

ஓட்டு போட்டாச்சு....

மணிஜி said...

கதிர்...மிகவும் உண்மை...குழந்தைகளின் கேள்விகளில் நேர்மை இருக்கும் ..ஆனால் நம் சில பதிலகளில் பொய் ...

velji said...

ஆதங்கமான பதிவு! நுண்ணிய விஷயங்களை சீரமைக்கும் சூழல், நம் வலிமையை மீறியதாக இருக்கிறது. நாம் திகைக்கத்தான் வேண்டும்!

நாகா said...

டிவி பார்க்க செலவிடும் நேரத்தைக் குறைக்கலாமே. முக்கியமாக தமிழ் சினிமாக்களை பார்ப்பதற்கு பதில் சில தேர்ந்தெடுத்த வால்ட் டிஸ்னியின் டிவிடிக்களை வாங்கி வையுங்கள் அவர்கள் கற்பனை சக்தியை நிச்சயம் அதிகரிக்கும். இன்று Finding Nemo பார்த்ததனால் இந்த கமெண்ட்..

மாதவராஜ் said...

குழந்தைகள் இயல்பாக வளரட்டும். மனிதர்களின் சூது வாதுக்களை நாம் ரொம்பவும் கற்றுத் தந்து அவர்களை இம்சித்து விடவும் கூடாது. நமது புரிதல்களையெல்லாம் அவர்களிடம் கொட்ட வேண்டிய அவசியமுமில்லை என நினைக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//புறக்கூறுகள் வேகமாக, வித்தியாசமாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. சில நேரம் சரியாக, பல நேரம் தவறாக.... குழந்தைகள் கேட்கும் அசாத்தியமான கேள்விகள் பல நேரம் அடி வயிற்றில் பயத்தை கிளப்புகின்றன. சில நேரம் ஆச்சரியத்தை கிளப்புகின்றன.//

உண்மைதான் தோழரே...

காமராஜ் said...

அசத்றீங்க கதிர். குழந்தைகளோடு பேசுவது பெரியவர்களுக்கு நீதி சொல்லும்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ரவி

நன்றி @@ தண்டோரா

நன்றி @@ velji

நன்றி @@ நாகா

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ ஞானசேகரன்

நன்றி @@ காமராஜ்

ப்ரியமுடன் வசந்த் said...

சில நேரம் அவங்க நமக்கு சீனியரா மாறி அறிவுரையும் சொல்வது உண்டு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வசந்த்

பின்னோக்கி said...

என்ன சொல்றது ?? டிவி எல்லாத்தயும் சொல்லிக் குடுத்துடுது.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பின்னோக்கி