என்னவென்றே தெரியாமல்
எதை எழுதுவதென்றே தெரியாமல் தான்
என்னுடைய ‘கசியும் மௌனம்’
வலைப்பக்கத்தை தொடங்கினேன்...
கடந்து இரண்டு மாதங்களில்
கடினமான வேலைப்பளுவிற்கிடையே (!!!)
பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்..
நன்றாக இருப்பதாய் நினைத்த
பதிவிற்கு சில சமயம் குறைவான
கருத்துகள் மட்டுமே வரும் போது
மனது துவண்டுபோனதும் உண்டு...
சாதாரணமாக இருப்பதாய் நினைத்த
பதிவிற்கு கூடுதலாய் கருத்துகள்
வரும்போது மனது ஆச்சரியப்பட்டதும் உண்டு
நேற்று “எதுவுமே இழப்பாகத் தெரியவில்லை” என்று
ஒரு கவிதையை(!!!???)
பதிவேற்றிவிட்டு (25வது பதிவு வேற)
பின்னூட்டம் பெற கடைவிரித்திருந்த போது
இன்று காலை பிரியமுடன் வசந்த்
அனுப்பியிருந்த பின்னூட்டத்தில்
இளமை விகடனில்
கவிதை வெளிவந்திருப்பதாக.. வாழ்த்த
சிறிது நேரம் தலைகால் புரியவில்லை
எங்கே என்று தேடி
கண்டுபிடிக்கமுடியாமல்
தள்ளாடி, மூச்சு திணறிய போது
நாகா அவர்கள் அனுப்பிய
http://youthful.vikatan.com/youth/index.asp
சொடுக்க மனது பரவசமானது.
விகடனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள், நன்றி பிரியமுடன் வசந்த் மற்றும் நாகா)
நட்புடன்
கதிர்
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
10 comments:
வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள். நான் இங்கு பின்னூட்டமிடாது போனாலும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றேன்.
செந்தழல் ரவி
ராமலக்ஷ்மி
எம்.எம்.அப்துல்லா
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
வாழ்த்துக்கள்!
மேலே கூறப்பட்டுள்ள வாழ்த்துக்களுடன் நானும் இணைகிறேன். தொடருங்கள் என்போன்றோர்கள் உங்களுடன்.
நன்றி
பாலாஜி
தொடருங்கள் அண்ணா..... என்னுடைய வாழ்த்துக்களும் உங்களுக்கு......
நன்றி
சப்ராஸ் அபூ பக்கர்
உங்களோட அனைத்து படைப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதயம் கனிந்த வாழ்த்துகள் கதிர்
Post a Comment