வாழ்க்கை அர்த்த‌ம் மிகுந்த‌து

நம்மை அறியாமல் தான் நமது பிறப்பு நிகழ்கின்றது. அந்த பிறப்பிற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் நமக்கு நாமே உருவாக்கும் பிறப்பின் மூலமாக நம் நேற்றைய வாழ்க்கையை விட இன்றைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்த முடியும். நமக்குள் நாமே இன்னொரு முறை பிறப்பது எளிதல்ல. ஒரு கடும் பிரசவ வலிக்கு நிகரான போராட்டம் தேவைப்படும்.


கடலில் குளித்து எழுந்து புத்துணர்ச்சியோடு வரும் புதுச் சூரியன் போல் எண்ண அழுக்குகளை அடித்து துவத்தோ, மென்மையாக ஊதி விட்டோ புதியதொரு வாழ்க்கையை தொடங்க முடியும். உல‌கில் உள்ள‌ அனைத்துமே ந‌ம்மை விட்டு வில‌கிவிட்டாலும் கூட‌ நாம் சுவாசிப்ப‌த‌ற்கான‌ காற்று ந‌ம்மை நேசிக்கும் வ‌ரை.... வாழ்க்கை அர்த்த‌ம் மிகுந்த‌து


இர‌வு விடியும், உற‌க்க‌ம் க‌லையும் எனும் ந‌ம்பிக்கை ம‌ட்டுமே ம‌னித‌னுக்கு நிம்ம‌தியான‌ உற‌க்க‌த்தை த‌ருகிற‌து. குழந்தையாய் தவழ்ந்து, நடக்க முயன்று தடுக்கி விழுந்த போது... தன்னம்பிக்கை தளர்ந்து போய் முயற்சியை கைவிட்டிருந்தால் இன்னும் மனிதன் நான்கு கால்களில் தானே நடந்து கொண்டிருப்பான்.

4 comments:

சந்தனமுல்லை said...

உண்மைதான்..வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததுதான்! நம்பிக்கைத்தானே வாழ்க்கை!

ராமலக்ஷ்மி said...

//உல‌கில் உள்ள‌ அனைத்துமே ந‌ம்மை விட்டு வில‌கிவிட்டாலும் கூட‌ நாம் சுவாசிப்ப‌த‌ற்கான‌ காற்று ந‌ம்மை நேசிக்கும் வ‌ரை.... வாழ்க்கை அர்த்த‌ம் மிகுந்த‌து//

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

ஈரோடு கதிர் said...

நன்றி சந்தனமுல்லை
நன்றி ராமலஷ்மி

Unknown said...

ம்ம்ம்......அர்த்தமுள்ள வாழ்வு இனிது...