இணையும் புள்ளி தெரியாமல்பிரபலமான பல்துறை மருத்துவமனை அது
நிறைமாத கர்ப்பிணி அடிவயிறு தாங்கி நகர்கிறாள்
ஒரு முதியவர் முனகிக் கொண்டிருக்கிறார்
ஒரு குழந்தை வீறிட்டழுகிறது

மருத்துவமனையின் “ட” வடிவ சுவரின்
ஒரு பக்கம் அவன், மறுபக்கம் அவள்
அருகருகே கைகள் இருந்தும்
இதயங்கள் தொடமுடியாத தூரத்தில்...

உடையும், அணிந்திருக்கும் நகையும்
பாதம் பதித்திருக்கும் காலணியும்
வைத்திருக்கும் பையும் அவர்களின்
பணக்காரத்தனத்தினை பட்டியலிடுகிறது...

அவள் அடிக்கடி கண் சுருக்குவதிலும்
பல் கடிப்பதிலும், தலையை சுவற்றில் சாய்ப்பதிலும்
வேதனையை துல்லியத்திற்கும் சற்று மேலாக
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்...

அவன் அடிக்கடி அதிரும் அலைபேசிக்கு
நீளமாய் சிரித்து பேசுவதிலும்
கடந்து செல்லும் பெண்களை கவனிப்பதிலும்
இவளின் வலியை முற்றிலும் மறந்திருக்கிறான்...

வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு
இணையாக போய்க்கொண்டே
இணையும் புள்ளி தெரியாமல்...

17 comments:

பழமைபேசி said...

அருமை...

கலையரசன் said...

கவிதை படிக்க மட்டுமே தெரியும், எழுத முயன்று தோற்று இருகிறேன்!
அழகா எழுதியுள்ளீர்...

நீங்கள் நாகாவின் நண்பர்தானே?

ஆர்.வேணுகோபாலன் said...

இயல்பான வார்த்தைகளில் இதயம் தொட்ட ஒரு கவிதை! பாராட்டுக்கள்!

க.பாலாசி said...

//வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு
இணையாக போய்க்கொண்டே
இணையும் புள்ளி தெரியாமல்...//

போகும் வழி தெரியாமலும்.

ரசித்தேன் நிதர்சனமான உண்மையை..

sakthi said...

அவன் அடிக்கடி அதிரும் அலைபேசிக்கு
நீளமாய் சிரித்து பேசுவதிலும்
கடந்து செல்லும் பெண்களை கவனிப்பதிலும்
இவளின் வலியை முற்றிலும் மறந்திருக்கிறான்...

வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு
இணையாக போய்க்கொண்டே
இணையும் புள்ளி தெரியாமல்...


arumai kathir

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
அருமை...//

நன்றி பழமை

//கலையரசன் said...
அழகா எழுதியுள்ளீர்... //

நன்றி

//நீங்கள் நாகாவின் நண்பர்தானே?//

ஆமாம். உங்களுக்கும் கூட

// தமிழன் வேணு said...
இயல்பான வார்த்தைகளில் இதயம் தொட்ட ஒரு கவிதை! பாராட்டுக்கள்!//

நன்றி வேணு

//பாலாஜி said...
ரசித்தேன் நிதர்சனமான உண்மையை..//

நன்றி பாலாஜி

Anonymous said...

Nalla Irukku, Jaffer

கவிக்கிழவன் said...

தமிழ் "மொழி" விளையாடுது இலங்கையில் இருந்து யாதவன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், ஒரு இரண்டு நிமிடம் கவணித்து இருப்பீர்களா?

அருமையாக இன்றைய வாழ்க்கைச் சூழலை விளக்கியுள்ளீர் :))

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை கீழிருந்து மேலே படிச்ச போதுதான் புரிஞ்சுச்சு.

ஈரோடு கதிர் said...

//sakthi said...
arumai kathir//

நன்றி சக்தி

//Anonymous said...
Nalla Irukku, Jaffer//

நன்றி ஜாஃபர்

//கவிக்கிழவன் said...
தமிழ் "மொழி" விளையாடுது இலங்கையில் இருந்து யாதவன்//

நன்றி யாதவன். நலமாக இருக்கிறீர்களா

//ச.செந்தில்வேலன் said...
கதிர், ஒரு இரண்டு நிமிடம் கவணித்து இருப்பீர்களா?

அருமையாக இன்றைய வாழ்க்கைச் சூழலை விளக்கியுள்ளீர் :))//

கவனித்தது சில நிமிடங்களெனினும் சுடும் நிஜம் அது

//பிரியமுடன்.........வசந்த் said...
கவிதை கீழிருந்து மேலே படிச்ச போதுதான் புரிஞ்சுச்சு.//

ஆஹா...
நன்றி வசந்த்

விக்னேஷ்வரி said...

அழகா இருக்கு கதிர்.

தேவன் மாயம் said...

வாழ்க்கை தண்டவாளமாய் நீண்டிருக்கிறது
இருபக்கமும் உறுதியான பிடிமானத்தோடு///

அழகிய வரிகள்!!

ஈரோடு கதிர் said...

//விக்னேஷ்வரி said...
அழகா இருக்கு கதிர்.

நன்றி விக்னேஷ்வரி

//தேவன் மாயம் said...
அழகிய வரிகள்!!//

நன்றி தேவன் மாயம்

கவிப்பிரியா said...

எனக்கு ஏற்பட்ட சம்பவம் போல் உள்ளது, சகோதரா!

மிக நுண்ணியாமான கவிதை, என்னைப்போல் தண்டவாளத்தின் ஒரு பக்கமாய் இருப்பவளுக்கு,

ஒரு புள்ளியில் இணையும் ஆசை கூட மறந்து விட்டது

Rathnavel Natarajan said...

நெகிழ வைக்கிறது. நிஜம் தான்.
அருமை. நன்றி.

Unknown said...

இணையும் புள்ளி மட்டுமா தெரியவில்லை..செல்லவேண்டிய இடம்கூட தெளிவா தெரியவில்லை...இருந்தும் பயணப்படுகிறார்கள் விரக்தியோடு வேறு வழி தெரியாமல்