ஒரு சொட்டு முதிர் துயரம்

குவித்து வைத்த வெயில்
போகத்தின் உதிரும் முடிச்சு
கழுத்தினடியில் வளரும் மச்சம்
இனி கிட்டாதொரு உறைந்து கிடக்கும் முத்தம்
மலர் கொய்யும் திடநிலை மழைச் சொட்டு
குழந்தையொன்றின் கடும் பசி

இதில் ஏதோவொன்றை
இல்லையில்லை
எல்லாவற்றையும் ஒத்தது
ந்த ஒரு சொட்டு முதிர் துயரம்!

2 comments:

Malar Selvam said...

"மலர் கொய்யும் திடநிலை மழைச் சொட்டு"~~ஆலங்கட்டி மழைக்கு என்ன ரசனையான ஒரு சொல்லாடல்!!��

மதிஒளி சரவணன் said...

நேர்த்தியான சொல்லாடல்.