Mar 17, 2017

மீச்சிறு மேகம்

மலை முகட்டை எட்டியாகி விட்டது
குளிரில் வியர்வை தேய்கின்றது
விரியும் பள்ளத்தாக்கு முழுதும்
பிரியம் நிரம்பியிருப்பதாக
எதிரொலி கேட்கிறது!

கையருகே வரும்
மீச்சிறு மேகமொன்றை
மெல்லச் சுவைத்து பசியாறுகிறேன்
பெரு மேகமொன்று
என்னைத் தின்று கொண்டிருக்கின்றது!


No comments:

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...