கீச்சுகள் தொகுப்பு - 64



குளிர் அலையும் சுற்றுலா நகரத்தில் குறுக்கும் நெடுக்கும் பாய்வோரோ, துளியும் குளிரை அனுபவிக்காமல் எதை எடுத்துப் போக விரும்புகிறீர்கள்!?

-

பல இயற்கை அங்காடிகளுக்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பு, பஞ்சாபி ஓட்டலுக்கும் பஞ்சாபிக்கும் இருக்கும் தொடர்பைப் போன்றது!

-

விளையாட்டின் நோக்கமும், வெற்றி / தோல்வி எனும் முடிவுகளின் நோக்கமும் ஒன்றல்ல!

-

எழுத்தின் மிச்சமாக ஒரு புள்ளி எஞ்சியிருக்கிறது .

-

ஓடும்வரை ரயில் பெட்டியின் அடியிலிருக்கும் சக்கரங்கள், ரயில் நிலையத்தில் நுழையும்போது பயணிகளின் கால்களுக்கு கீழே இடம் பெயர்ந்துவிடுகின்றன.

-

வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயனில்லாத பல செயல்களை, விரும்பிச் செய்வதை என்றைக்கும் இந்த மனித இனம் கை விடுவதாகத் தெரியவில்லை.

-

விளையாடுவதற்கே விடுமுறை “ஸ்பெஷல் க்ளாஸ்”களுக்கன்று



வாட்ஸப்பில் வலிய ஒரு நண்பர் ஆலோசனை கேட்டார். அறிவுரை(!) சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது அவருக்குச் சொல்வதல்ல எனக்கு நானே சொல்லிக்கொள்வது!

-

முன்னதாகவே இரண்டு வாளி தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வதன் மூலம், குளியலறைக் குழாயிலிருந்து சூடாக வரும் தண்ணீரை வீணடிக்க வேண்டி வராது

-

பெரும்பாலான அரசியல் கூட்டங்களுக்கு கூலிக்கு, ஆள் கூட்டிவரும் அளவிற்கு மக்கள் மாறியிருப்பதை நினைக்க ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது!

-

வெயில் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கின்றது!

-

சோம்பேறித்தனமும், வருத்தமும் இல்லாத நாட்களில் மனதில் தத்துவம் எதுவும் தோன்றுவதில்லை!

-

வாழும் வாழ்க்கை மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கூட்டத்தான் புத்தாண்டு எனும் நினைவூட்டல்கள்!

-

மன இடுக்கெங்கும் நிரம்புகிறது வெயில்!

-

கனவில் வாய்த்த முத்தம்போல் ரகசியமாய்ப் பெய்திருக்கிறது நடு நிசி மழை!



-

எண்ணங்களை வேடிக்கை பார்க்கும் தருணம் பரவசமானது!

-

இரயில் பயணங்கள் சுவையற்றதாகவும், இறுக்கமானதாகவும் மாறிப்போனதில் ஸ்மார்ட் போன்களின் பங்கு நிறைய உண்டு.

No comments: