Nov 4, 2015
சாத்தியம்
தயக்கமெனும் தகிப்பில்
மெல்ல
நீர் வார்ப்பதும்
தடுமாறித் துவளுகையில்
தாங்கிப் பிடித்து
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகால்
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை உருவாக்கி
நம்பிக்கையூட்டுவதும்
பொருளறியாச் சொற்களுக்கு
பிரியத்தின் அகராதியில்
அர்த்தம் தேடுவதும்
உயரத்திற்கு நகர்த்திவிட்டு
தொலைவிலிருந்து
கை அசைப்பதுவும்
சோர்ந்து நிற்கும்போது
வாய்ப்பொன்றை
யாசித்து ஈட்டித்தருவதும்
நடுங்கும் விரல்களில்
நம்பிக்கையின் கதகதப்பை
பிரியமாய்ப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலியிலும் பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மேலோட்டமாய்ச் சொன்னால்
மிக எளிதுதான்!
யோசித்துச் சொன்னால்
சற்றுக் கடினம் தான்!
உண்மையாகச் சொல்லவேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!
-
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
1 comment:
அருமை அண்ணா....
Post a Comment