கீச்சுகள் தொகுப்பு - 55சிந்தாந்தங்கள் பொதுவில் பேசும்போது ஒன்றாகவும், (வி)வாதம் செய்யும்போது ஒன்றாகவும், தணிந்த குரலில் நட்போடு பேசும்போது ஒன்றாகவும் இருக்கின்றது
மனதுக்கு மிகப்பிடித்தமான வேலைகளை, இரவு பகல் பாராமல் செய்வதென்பது காதல் செய்வதற்கு ஒப்பானது

-

காலில் செருப்புகூடஇல்லாமல் கொதிக்கும் தார் சாலையில் சிரமப்பட்டு நடந்து, டாஸ்மாக்கில் நுழையும்ஏழைகளையும் கொண்டது தமிழகம்!

-

மரம் தழைய வந்திருக்கும் மாசி மழையில் மனசும் கொஞ்சம் நனையுது!

-

"ஒரே ஒரு வாழ்க்கைதான்"

-

நிறையப் பேர் வாட்சப் & ஃபேஸ்புக் இரண்டையும் ஏதோ ஒரு வகையில் ஒப்பீடு செய்து குழம்பியிருக்கிறார்கள்!

-

தவறவிட்ட மைக்குடுவையிலிருந்து சிதறிய சொற்களை எங்கு சென்று பொறுக்கியெடுக்க!

-


யோசனைகள் கொத்தும் உறக்கம் பிடிக்கா இரவை யாரிடம் இரவல் தர!

-

செய்யுள்களை மனப்பாடப் பகுதியில் வைத்து பிரம்பை வைத்து மிரட்டாமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் நன்றாக வளர்ந்திருக்கும்

-

தான் போட்ட 'காலை வணக்கம்' ஸ்டேட்ஸ்க்கு லைக், கமெண்ட் வரவில்லையே என ஃபேஸ்புக் சர்வரை சந்தேகப்பட்டான் உலகின் கடைசி மனிதன்

-

அப்போ கோழி கூப்ட பெருசுங்க காடு கரைக்கு போகும், பிள்ளைங்க தூங்கும். இப்போ பிள்ளைங்க பொறுப்பா படிக்குது பெருசுங்க தூங்குது/ஃபேஸ்புக் மேயுது

-

எத்தனை முறை செடியில் இருக்கும் பூவை, பறிக்காமல் வளைத்துப் பிடித்து முகர்ந்திருக்கிறீர்கள்!?

-

எரிவாயு மயானத்திற்கு உடலை அனுப்பி, அங்கிருந்து அரை மணி நேரத்தில் சாம்பல் பெறுவதை ஒருமாதிரி பெருமையாகக் கருதத் துவங்கியிருக்கிறது சமூகம்!

-

வெண்மை என்பது(ம்) ஒரு நிறம்எல்லா நேரங்களிலும் அது தூய்மையின் குறிச்சொல்லன்று!

-

நேசிப்பை உணர்ந்திடத் தெரிந்தவர்களுக்கு எல்லா நாளும் பிப்-14 தான்...

-

நம் வாழ்க்கை மீது நாம் கொண்டிருக்கும் அதுவரையிலான கசப்புகளையும், அவநம்பிக்கைகளையும் அடித்து விரட்டவல்லது, ”ஒரு சாதாரண தினத்தில் நினைத்துப் பார்க்காத ஒரு நொடிப்பொழுதில் மின்னும் ஓர் அழகிய நிகழ்வு!”

-

ரயில்களில் பதினொரு மணியாகியும் அப்பர் பர்த்தில், படுக்காமல் கழுத்தை வளைத்து உட்கார்ந்தபடி செல்போன் ஸ்பீக்கரில் 80களின் பாடல்களை அலற விடும் அப்ரசண்டிகளால் இளையராஜாவையும் கூட வெறுக்கும் சாத்தியம் உருவாகி விடுகிறது!

-

சரி ஆயிடும் . . . . அல்லது . . . . பழகிவிடும்!


-

ரொம்ப நாள் கழிச்சு லோயர் பர்த் வென்றவனிடம் வேற்றுகிரக சக்தியொன்று ஃபேமிலியா வந்திருக்கோம் அந்த 'சைடு அப்பர்'க்கு மாறிக்குறீங்களானு கேக்குது

-

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை மறந்து போதல், சாபமோ பாவமோ தெரியவில்லை. பெருநகர வீதிகளில் மறந்து போகும்போது, நம் நிலைஅய்யோ பாவம்தான்!

-

பிசியாக இருப்பதும் ஒரு போதை தான்!

-

காலம் காலமாய் கடைபிடித்து வரும் இயல்பிலிருந்து, வேறொருவரின் நல்ல இயல்பைப் பார்த்து அதுபோல் மாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுப்பது எளிதாய் இருக்கின்றது. ஆனால் மாறுவது என்பது எளிதாக இல்லை. கடும் பிரயத்தனமும், பயிற்சியும், தொடர் முயற்சியும் தேவைப்படுகிறது.

-

"அவங்களுக்கெல்லாம் பிரச்சனையே இருக்காது" என அவர்கள் குறித்து நீங்கள் நினைப்பதும் அவர்களின் ஒரு பிரச்சனைதான்!

-

உயரமாக வளர்ந்தவர்களின் கொஞ்சநஞ்ச 'பந்தா'வை நசுக்கவே ரயிலில் சைடு அப்பர் பர்த் கண்டுபிடிக்கப்பட்டது

-

குற்றாலத்தில் குளியலறையில் சுடு தண்ணீரில் குளிப்பதையும் "Survival of the fittest" எனச் சொல்லலாம்.

-

தூரத்திலிருந்து பார்க்க பெரும் பிரச்சனையாகத்தான் தெரிகிறது. பல நேரங்களில் அருகில் கூர்ந்து நோக்குகையில் அது ஏதோ ஒன்றின் நிழலெனப் புரிகிறது!

-

1 comment:

srinivasan said...

அத்தனையும் நிதர்சனம்.ரசித்தேன்!