நுகரச் சகியாததுசொட்டுச்சொட்டாய்
துகள்த்துகளாய்
சேகரித்து
வைத்திருக்கும்
இந்தக் கர்வ மூட்டையில்
எப்பொழுதேனும்
என் வாள் முனை மோதி
தெறித்துவரும்
சிறு கல் பட்டு
கிழிந்து சொட்டுகையில்
பெருகும் வீச்சம்
என்னாலும்
நுகரச் சகியாதது!