கீச்சுகள் தொகுப்பு : 53



நாம் நினைக்கும் காரியம் ஏதாவது ஒருவகையில் நடந்துவிட்டால் மட்டும் போதாது. அது எப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே நிகழவும் வேண்டும். அதைவிட அது எப்படி நடக்கக்கூடாது என நினைக்கிறோமோ, அதுபோல் நடந்துவிடாமல் இருப்பதும் முக்கியம்!

-

வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம்.

-

விஜயகாந்த் ஜோக்னு ஆளாளுக்கு அனுப்புறதுல 99% சர்தார்ஜி ஜோக்குகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதா இருக்கு!

-

எதாவது சிக்கல்கள், சவால்கள் வந்தால்தான் கொஞ்சமாவது சுறுசுறுப்பு வருது!

-

ஆமாம்நீங்கள் ஏன் கோட்டையின் பெருங்கதவுகளை பூக்களைக் கொண்டு தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!?

-

அன்பாய் ஓடிவந்து நீங்கள் மாலை சூட்டுவதற்கு நன்றி சொல்கிறேன்! அதிலிருந்து பின் கழுத்தினைப் பதம் பார்க்கும் முட்களை நான் என்ன செய்ய!?

-

அக்கம்பக்கம் கேட்டு, கூகுளில் தேடி நிமிடப்பொழுதில் தீர்த்துக்கொள்ளவேண்டிய சந்தேகத்தை, ட்விட்டர்ல போட்டு நாள்கணக்கில் தீர்த்துக்கொல்கிறோம




கவலையற்று இருப்பதற்கான ஒரு எளிய வழி கவலைப்படுவதற்கு அவகாசம் தராமல்பிசியாக இருப்பது.

-

மனநிலையை எழுத்தில், சில வார்த்தைகளில் பகிர்ந்துகொள்வதென்பது ஒருவித விடுபடல்.

-

தான் மதிக்கும்/விரும்புபவரிடமும், தன்னிடம் இருப்பதுபோலவே அனைத்து கீழ்மைத்தனங்களும் கூடக்குறைய இருக்கலாமென்பதை ஏற்றுக்கொள்ளாதவன் முட்டாளா!?

-

எந்த முன் உணர்த்தலுமின்றி வந்திருக்கும் இந்த மார்கழி மதிய மழைக்குஅழையா விருந்தாளிஎன்றெல்லாம் பெயர் சூடிட முடியாது.

-

டீ - 10 காசு அஸ்கா டீ - 15 காசுனு இருந்தது அந்தக்காலம் டீ - 10 ரூவா நாட்டுச் சக்கரை டீ - 15 ரூவானு இருப்பது இந்தக்காலம்!

-

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் வீட்டம்மனி வெளியே போயிருக்கும் நேரத்தில் பொறுப்பா துண்டு ஒன்னைக் கட்டிக்கிட்டு, முன்னெச்சரிக்கையா ஒரு பக்கெட் குளுந்தண்ணியை தலையோடு ஊத்திக்கிட்டு, மொட்டை மாடியில் சடசடக்கும் கார்த்திகைச் சாரல் மழையில் ஓடிப்போய் நனைவதென்பது கொஞ்சமே கொஞ்சூண்டு வயசு கரைக்கும் முயற்சிதான்!

-

மழையில் நனைந்து சிந்தும் இவ்வழகிய மஞ்சள் வெயிலில் எந்த நினைவுகளை உலர்த்துவதென இன்னும் தீர்மானிக்க இயலவில்லை!

-

தற்கொலை முயற்சிக்கு தண்டனை கூடாதுனு புரிஞ்சுக்கவே இவ்ளோ நாள் தேவைப்பட்டிருக்கு. அவர்களுக்கு மனநல ஆலோசனை தரவேண்டும்னு உணர எவ்ளோ நாளாகுமோ!?

-

ஒரு செய்தி / தகவல் வந்தால், அதைப் பகிர்ந்துகொள்வதிலிருக்கும் ஆர்வத்தில் 1000ல் ஒரு பங்குகூட அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதில் இல்லை.





வழக்கமாய் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வோம். இப்போது தண்ணீரையே சுத்தம் செய்கிறோம்!

-

திருவிழாக்கள் கடவுளை முன்னிறுத்தியே என்றாலும், அதில் மிஞ்சி நிற்பது கூடிமகிழும் மனிதர்களின் உறவுகள்தான்.

-

புதுசா சைனாஆன்ட்ராய்ட்போன் வாங்கின பக்கி, Wi-Fi பேட்டரி சார்ஜ் பண்ணிக்க முடியாதானு கேக்குது!

-

செல்ஃபியர்களின் அதிமுக்கியப் பிரச்சனைஇந்த கை இன்னும் நீளமாய் வளர்ந்திருக்கலாமே!”



ஒருபோதும் உலகில் கேள்விகள் தீர்ந்துபோவதில்லை. நீங்கள் அளிக்கவேண்டிய பதில்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டேயிருங்கள்!

-

'உப்பு, காரம் பாருங்க' என காலையில் நீட்டப்படும் தட்டில் இருப்பது, எலிப் பொறியில் வைக்கப்படும் மசால் வடையின் இடமாறு தோற்றப்பிழை தான்!





ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும் வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும்!?

-

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா.

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr