Dec 23, 2014

உடைந்தொழுகும் வானம்






முடிவற்றதாய்க் கருதும்
அந்தச் சாலையோரத்தில்
பாதைகள் தீர்ந்தவன்
நிலவற்ற வானத்தின் கீழிருக்கும்
விளக்கினடியில் அமர்ந்திருக்கிறான்

நட்சத்திரங்களும்
வெண்மேகங்களுமற்ற
கருத்த வானம்
எப்போது வேண்டுமானாலும்
உடைந்துவந்து மூழ்கடிக்கலாம்

விழித்திரைகளில்
குவியும் இருளை
அழித்தழித்து விரட்டப்பார்க்கிறது
பலவீனமான அந்த விளக்கு

விளக்கிற்கும் அவனுக்குமிடைய
விட்டிலொன்று கோடுகளால்
அவளின் நினைவுகளை
விடாமல் வரைந்து கொண்டிருக்கிறது

இமை மூடும் கணப்பொழுதில்
தளும்பிய கருவானம்
உடைந்தோடி வந்து
அவனை நிரப்பிக்கொள்ள
உள்ளே தத்தளிக்கிறாள் அவள்!

3 comments:

Prapavi said...

Awesome!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை அண்ணா....

Unknown said...

கவிதைக்கான காட்சி அப்படியே கண்முன் தெரிகிறது..super

அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு

தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்த...