முடிவற்றதாய்க் கருதும்
அந்தச் சாலையோரத்தில்
பாதைகள் தீர்ந்தவன்
நிலவற்ற வானத்தின் கீழிருக்கும்
விளக்கினடியில் அமர்ந்திருக்கிறான்
நட்சத்திரங்களும்
வெண்மேகங்களுமற்ற
கருத்த வானம்
எப்போது வேண்டுமானாலும்
உடைந்துவந்து மூழ்கடிக்கலாம்
விழித்திரைகளில்
குவியும் இருளை
அழித்தழித்து விரட்டப்பார்க்கிறது
பலவீனமான அந்த விளக்கு
விளக்கிற்கும் அவனுக்குமிடைய
விட்டிலொன்று கோடுகளால்
அவளின் நினைவுகளை
விடாமல் வரைந்து கொண்டிருக்கிறது
இமை மூடும் கணப்பொழுதில்
தளும்பிய கருவானம்
உடைந்தோடி வந்து
அவனை நிரப்பிக்கொள்ள
உள்ளே தத்தளிக்கிறாள் அவள்!
3 comments:
Awesome!
கவிதை அருமை அண்ணா....
கவிதைக்கான காட்சி அப்படியே கண்முன் தெரிகிறது..super
Post a Comment