குழந்தைகள் அழுதுகொண்டே எதாவது பேச வரும்பொழுது ”முதல்ல அழுகாம பேசு!” என அதட்டுவது அதிகாரத்தின் உச்சமா? அன்பின் எச்சமா!?
-
பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறையென்றால் அந்த நாளை எல்லோருக்குமான விடுமுறை தினம் என்பது போலவே குடும்பம் கருதுகிறது!
-
எல்லாத் தாமதங்களுக்குப் பின்னாலும் காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அந்தக் காரணங்கள் மிகப் பிடித்தமானதாகவும் இருக்கின்றன.
-
அன்பில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை “நான் எது செய்தாலும் நீ கோபப்படவே கூடாது!”
-
அடிமைப்பட்டிருப்பது குறித்து கிஞ்சித்தும் வெட்கமில்லை. ஆனால் அடிமைப்பட்டிருக்கேன் என ஒப்புக்கொள்ள மட்டும் அநியாயத்திற்குக் கூசுது!
-
வாட்ஸப்ல புத்திசாலித்தனமா ஆசைப்படுறது நம்ம Last seen தெரியக்கூடாது, ஆனால் மத்தவங்க Last seen தெரியனும் :)
-
யாராச்சும் செல்ஃபி போட்டால், அதை ’செல்ஃபி’னு கண்டுபிடிச்சு சொல்றதை ஆகச் சிறந்த கண்டுபிடிப்பா நம்ம சனம் நினைக்குது!
-
ஐஸ் பக்கெட் சேலஞ், ரைஸ் பக்கெட் சேலஞ் மாதிரி பாஸ்வேர்டு எடுத்துட்டு "Free WiFi சேலஞ்ச்" னு ஆரம்பிச்சா கொஞ்சம் புண்ணியமாப் போவும்!
-
துணிக்கடை ஆளுயரக் கண்ணாடியில் பூதாகரமாத் தெரிஞ்சவுடனே முடிவெடுத்துட்டேன், ”இனிமே கண்ணாடி வெச்சிருக்கிற துணிக்கடைப் பக்கம் போகக்கூடாது”னு!
-
பச்சைக் கலர்ல போர்டு வெச்சுட்டாவே அது ”இயற்கை அங்காடி” ஆயிடும்னு..... அவங்களும் நினைக்கிறாங்க, இவங்களும் நினைக்கிறாங்க!
-
ஆசைப்படுவது என்னவோ இரண்டங்குல நாக்குதான்… ஆனால் நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்கவும் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதென்னவோ வயிறுதான்! #தொப்பை
-
எவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே, அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்!
-
கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள் போதாது.
-
என்ன ’வேலை’ செஞ்சா உடம்பு குறையுங்கிறதைவிட, என்ன ”சாப்பிட்டா” உடம்பு குறையும்னுதான் எல்லாருமே கேக்குறாங்க!
-
உடல் நலத்துக்கு தினமும் ’ஆப்பிள்’ சாப்பிடுறாங்களோ இல்லையோ, கையில ஒரு "ஆப்பிள் போன்" வச்சுக்கிறது அந்தஸ்த்துனு நினைக்குது சமூகம்!
-
தமிழில் நாம எதையாவது அனுப்ப, மொபைலில்அது பொட்டி பொட்டியாத் தெரிய, அதைப் படிக்க முடியாம ஆட்கள் படும் பதட்டம் இருக்கே... க்யூட்! :)
-
கூட்டத்தோடு நகரும் பெண்ணொருத்தி சூடியிருக்கும் மல்லிகை வாசமாய் மழை வாசம் வந்து போனது மனம் போல் கொஞ்சம் நிலம் எங்கேனும் குளிர்ந்திருக்கும்
-
பதின் பருவத்திற்குள் மகள் காலடி எடுத்து வைத்தபின், ஆண்டு தோறும் மகளுக்கு ஒரு வயது கூடுகையில், தந்தைக்கு இரண்டு வயது கூடுகிறது.
-
குழந்தைக்கு வித்தியாசமான பேரு சொல்லுங்கனு கேக்குறதும், அப்படியே நாம சொன்னாலும் முதல்லையே முடிவு பண்ணின பேரையே வெச்சுடுறதும்தான் இப்ப ஃபேஷன்
-
அகால மரணம் குறித்து கேள்விப்படுகையில் எங்கே, எப்படி, என்ன வயசு எனக் கேட்பது ஒரு கணம் தன்னை அதில் பொருத்தி நிம்மதி அடைந்துகொள்ளவும்தான்!
-
3 comments:
Superb sir
கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள் போதாது.////ஒன்று ஒன்றும் மிகவும் அற்புதமான வரிகள்.அருமை .
ஒரு தொகுப்பா போடலாம்....க்யூட்
Post a Comment